Tamil Serial Rating Bharathi Kannamma : சுந்தர்சி சத்யராஜ் நடித்த குழு சிஷ்யன் படத்தில் சந்தானம் சத்யராஜ் குறித்து தனது அஸ்டன்டிடம் இவன் இன்னும் திருந்தவே இல்லைடா அப்படியே தான் இருக்கான் என்று சொல்லுவார். இந்த வார்த்தை யாருக்கு பொருந்தோமோ இல்லையோ பாரதி கண்ணம்மா சீரியலுக்கு கச்சிதமான பொருந்தும்.
தனது வாழ்க்கை மற்றும் தனது குடும்பத்திற்கு துரோகம் செய்தவளே இவள்தான் என்று தெரிந்தும் அவளிம் மீண்டும் சேர்ந்துள்ள பாரதியை என்ன சொல்வது என்றே தெரியவில்லை. ஒருவேளை வெண்பாவும் பாரதியும் ஒற்றுமையாக இருந்தால் தான் சீரியலை ஜவ்வாக இழுக்க முடியும் என்று இயக்குநர் யோசித்தாரோ என்னவோ… இவர்களை பிரிக்க அவருக்கும் மனசே வரமாட்டேங்குது….
விஜய் டிவியின் டாப் ரேட்டிங் சீரியல் பாரதி கண்ணம்மா… மேலே சொன்ன எல்லா விஷயங்களயும் படித்த உங்களுக்கு அப்போவே தெரிந்தரிக்கும் இது பாரதி கணணம்மா சீரியலை பற்றிய தொகுப்புதான் என்று. நீங்கள் நினைத்தது சரிதான். ஒருதலை காதல் இவ்வளவு செய்ய சொல்லுமா என்றால், இந்த சீரியல் பார்த்தவர்கள் நிச்சயம் சொல்லூர்கள். அந்த அளவிற்கு ஏற்றுக்கொள்ளவே முடியாத பல காட்சிகள் அமைப்பெற்றது தான் பாரதி கண்ணம்மா.
மனைவியை மன்னித்து ஏற்றுக்கொள்ளும் பக்குவத்திற்கு வந்த பாரதி, தனக்கு துரோகம் செய்தது உண்மைதான் என்று ஒப்புக்கொள்ள வேண்டும் என்று கண்ணம்மாவுக்கு கன்டிஷன் போடுகிறான். இதை ஒப்புக்கொள்ளாத கண்ணம்மா வீட்டைவிட்டு வெளியேறிவிட பாரதியும் மீண்டும் கண்ணம்மா வீட்டிற்கு போக கூடாது என்று யோசிககிறான். இதற்கிடையே வெண்பாவின் மாஸடர் ப்ளான்படி அவளது வீட்டு வேலைக்காரி பாரதிக்கு போன் செய்து வெண்பா தற்கொலை செய்துகொள்ள போவதாக சொல்கிறாள்.
இதை கேட்டு பதறியடித்து பாரதி ஓடிவர அவன் வருவதை பார்த்த வெண்பா தூங்கிடுவது போல் நடிக்கிறார். இதை பார்த்து கதவை உடைத்து உள்ளே செல்லும் பாரதி அவளை காப்பாற்றுகிறான். இந்த காட்சியை பார்த்த ரசிகர்கள் பலரும் திரும்பவும் பழைய படி ஸ்டார்ட் பண்ணிட்டீங்களா, விளங்கிடும்போங்க என்று கூறி வருகின்றனர். மற்றொரு ரசிகர் தெலுங்கில் இருந்து வந்த சீரியல் தெலுங்கில் உண்மை தெரிஞ்சுப்போச்சு ஆனா நீங்க உண்மையை சொல்ல ஏன் இவ்வளவு தயக்கம்?
கடந்த சில எபிசோடுகளுக்கு முன்பு வெண்பா இல்லாததல் போர் அடிக்கிறது என்று சொல்லி வந்த ரசிகர்கள் கூட இப்போது பாரதியின் நடத்தையை பார்த்து இவன் இன்னும் திருந்தவே இல்லடா அஞ்சலிக்கு அவ்ளோ பெரிய தப்பு செய்த வெண்பாவையே மன்னிச்சி ஏத்துக்குவாராம் ஆன கட்ன பொண்டாட்டிக்கு கண்டிஷன் போடுவாராம் என்ற லாஜிக் என்று புரியவில்லை.
இது ஒருபுறம் இருக்க எப்போவும் அழுகாட்சியாக இருக்கும் கண்ணம்மா வழக்கம்போல தனது அழுகையை தொடங்கிவிட்டார். அதுவும் தனியான புலம்பிக்கொண்டு. பல எபிசோடுகளில் பார்த்து பழக்கிபோன் இந்த காட்சி தற்போது சலிப்பை ஏற்படுத்தும் விதமாகத்தான் உள்ளது. அதிலும் இப்போது பாரதி வெண்பாவிடம் சேர்ந்துவிட்டதால், கண்ணம்மாவின் அழுகை இன்னும் அதிகமாகவே வாய்ப்புள்ளது. இதை பார்த்த ரசிகர்கள் கொஞ்சம் இன்ட்ரஸ்டிங்கா போன உங்களுக்கு பொருக்காதே என்று கேட்டு வருகிறனர்.
எது எப்படியோ வெண்பா பாரதி இணைந்தது ரசிகர்கள் மத்தியில் சலிப்பை ஏற்படுத்தியுள்ளதால், சீரியல் வரும் நாட்களில் வீழ்ச்சியை சந்திக்கும் வாய்ப்பு உள்ளது. அதற்குள் கண்ணம்மா உண்மையை தெரிந்துகொள்ள ஏதேனும் அதிரடி நடவடிக்கை எடுத்தால், சீரியல் கொஞ்சம் விறுவிறுப்பாக செல்லும் என்பது பலதரப்பட்ட ரசிகர்களின் கருத்தாக உள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil “