Tamil Serial Bharathi Kannamma Rating : அங்க சுத்தி, இங்க சுத்தி கடைசில அப்பா யாருனு சொல்ல வேண்டிய இடத்துக்கு வந்துட்டீங்க ஆனா இது உண்மைய இல்ல ஏமாத்து வேலையானு தெரியலையே என்று ரசிகர்களை புலம்ப வைத்துள்ள சீரியல் பாரதி கண்ணம்மா.
விஜய் டிவியின் ப்ரைம் சீரியலான பாரதி கண்ணம்மாவுக்கு ரசிகர்கள் பட்டாளம் ஏகப்பட்டது இருந்தாலும், அவ்வப்போது கடுமையாக விமர்சனங்களை சந்திப்பதற்கும் தவறுவதே இல்லை. அந்தஅளவிற்கு பல காட்சிகள் ரசிகர்களின் பொறுமையை ரொம்பவே சோதிக்கும் வகையில் தான் உள்ளது. காதலித்து திருமணம் செய்துகொண்ட தனது மனைவியை தன்மீது ஒருதலை காதல் வைத்துள்ள ஒரு தோழியின் பேச்சை கேட்டு மனைவின் கர்ப்பத்தை சந்தேகப்படுகிறான் பாரதி.
இதனால் வீட்டை விட்டு வெளியேறும் கண்ணம்மா தனியாக வாழ்ந்து இரட்டை குழந்தையை பெற்றெடுக்கிறாள். இதில் ஒரு குழந்தை அவளுக்கே தெரியாமல் பாரதி வீட்டில் வளர்கிறது. இது கண்ணம்மா குழந்தை என்பது பாரதிக்கும் தெரியாது. 8 வருடங்கள் கடந்த போது கண்ணம்மா தனது 2-வது குழந்தையை கண்டுபிடிக்கிறார். பாரதி டைவர்ஸ் கேட்டு கோர்ட்டுக்கு போக இருவரும் 6 மாத காலம் சேர்ந்து வாழ நீதிமன்றம் உத்தரவிடுகிறது.
இதனிடையே தனது வீட்டிற்கு தனது தோழி வெண்பா செய்த துரோகத்தை தெரிந்துகொள்ளும் பாரதி அவளைவிட்டு வலகிவிடுகிறான். ஒரு கட்டத்தில் இவன் அடைய துடித்துக்கொண்டிருக்கும் அவள், தனது மீது தப்பே இல்லை என்று ஏதோ ட்ராமா பண்ணி அவனுடன் சேர்ந்துவிடுகிறாள். அவளையும் பாரதி மன்னித்து ஏற்றக்கொள்கிறான். காதல் மனைவியின் நடத்தையை நம்பாத பாரதி தோழியின் பாசாங்கை நம்புவதுதான் கதையின் உச்சக்கட்டஹைலைட்.
தனது குடும்பத்தின் வாரிசை கொல்ல நினைத்தவள் வெண்பா என்று நம்பிய பாரதிக்கு அவள், செய்த பாசாங்கு வேலைகளை உடனே நம்பி ஏற்றுக்கொள்கிறான். ஆனால மனைவி எவ்வளவுதான் தான் தப்பபே செய்யவில்லை என்றும், ஒவ்வொருமுறையம் நிரூபித்தாலும்அதை ஏற்றுக்கொள்ள பாரதி மறுப்பது ஏன்? அப்படி ஏற்றுக்கொண்டால், சீரியல் சீக்கீரம் முடிந்துவிடும் என்பதாலா? அல்லது பாரதி கண்ணம்மாவை நம்பிவிட்டால், அடுத்து எப்படி கதையை நகர்த்தி கொண்டுபோவது என்று தெரியவில்லையா என்பது இயக்குநருக்கே வெளிச்சம்.
இந்நிலையில், அடுத்த வார எபிசோடுக்கான ப்ரமோ தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இதில் கண்ணம்மாவின் அண்ணனாக இருக்கும் ஆட்டோகாரர் வீட்டில் நடக்கும் சுப நிகழ்ச்சிக்கு வரும் சிலர் கண்ணம்மாவை கொஞ்சம் ஏளனமாக பேச அவர் இன்னும் 4 நாட்களில் எனது பிறந்தநாள் வருகிறது. அப்போது தனது மகளின் அப்பா யார் என்று சொல்கிறேன் என்று சொல்லுகிறார். இதை கேட்டு லக்ஷ்மி சந்தோஷப்பட அத்துடன் ப்ரமோ முடிவடைகிறது.
ஏற்கனவே கடந்த இரு வாரங்களுக்கு பாரதி கண்ணம்மாவை ஏற்றுக்கொள்வது போலவும் அதற்கு ஒரு கண்டிஷன் போடுவது போலவும் இன்னும் 5 நாட்களில் என்று சொல்லியிருந்தனர். இதனை பார்த்த ரசிகர்கள் சீரியல் விறுவிறுப்பாக செல்லும் என்று நம்பிக்கொண்டிருந்த ரசிகர்களுக்கு வழக்கம் போல வேதாளம் முருங்கை மரத்தில் ஏறிவிட்டது போல தப்பு செய்ததை ஒப்புக்கொள் அப்போது ஏற்றுக்கொள்கிறேன் என்று சொல்ல கண்ணம்மா வீட்டை விட்டு வெளியேறிவிடுகிறார்.
அதே போல் இப்போது 4 நாட்கள் என்று கெடு வைத்துள்ளார் கண்ணம்மா. இதுவும் ஏமாற்று வேலைதான் என்று பலரும் கூறி வருகினறனர். அதிலும் சில ரசிகர்கள கடுமையாக விமர்சனத்தை தொடுத்துள்ளனர். இதில் ஒரு ரசிகர் எத்தனையோ திறமையான இயககுநர்கள் வாய்ப்பிற்காக தவமிருக்க இப்படி திறமையே இல்லாத இந்த சீரியல் இயக்குநருக்கு இத்தனை வருடமாக வாய்ப்புத் தருகிறீர்களே என்று கேட்டுள்ளார் இதனால் இனிமேல் பாரதி கண்ணம்மா உண்மையாகவே ட்விஸ்ட் வைத்தாலும் அதை ரசிகர்கள் நம்புவார்களா என்பது சந்தேகமே…
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil