New Update
/tamil-ie/media/media_files/uploads/2022/02/Bharathi-kannamma-2.jpg)
Tamil Serial Update : லக்ஷ்மியின் அப்பா தான் இல்லை என்று நினைத்துக் கொண்டிருக்கும் பாரதி இப்போது எதற்காக அழவேண்டும் என்ற கேள்வி வருகிறது
Tamil Serial Bharathi Kannamma Rating Update : என்ன சார் கண்ணம்மா தன்னைத்தான் லக்ஷ்மியின் அப்பா என்று சொல்லப்போகிறாள் என்று பாரதிக்கே தெரிந்துவிட்டது இதுல என்ன நீங்க பெரி ட்விஸ்ட் வச்சிக்கீங்க என்று கேட்டும் அளவுக்கதான் இருக்கிறது பாரதி கண்ணம்மா சீரியல்.
கணவன் மனைவி சந்தேகம் வரலாம் ஆனா அதுக்காக இவ்வளவு நாள் உண்மை தெரிஞ்சிக்காம இருக்க கூடாது என்று நினைத்து பார்க்கும் அளவுக்கு ஒரு சீரியல் என்றால் அது பாரதி கண்ணம்மாதான். விஜய் டிவியின் ப்ரைம் டைம் சீரியலான பாரதி கண்ணம்மா சீரியலில் கண்ணம்மாவாக நடித்து வந்த ரோஷ்னி ஹரிப்பிரியனே சீரியலை விட்டு விலகிவிட்டார். ஆனால் கண்ணம்மா தப்பு செய்தாளா இல்லையா என்பது இன்று விலக்காத பரிட்சையாகவே உள்ளது.
கண்ணம்மா பெற்ற இரு குழந்தைகளில் ஒரு குழந்தை பாரதியிடமும் மற்றொரு குழந்தை கண்ணம்மாவிடமும் வளர்கிறது. இதில் தன்னுடைய அப்பா யார் என்று கண்ணம்மாவின் குழந்தைஅடிக்கடி கேட்டுக்கொண்டிருக்கிறது. அதற்கு பதில் சொல்லும் விஷயமாக கண்ணம்மா தன்னுடைய பிறந்த நாளில் அப்பா யார் என்று சொல்கிறேன் என்று சொல்கிறார். இந்த ப்ரமோவை பார்த்த ரசிகர்கள் பலரும் பாரதியை அப்பா என்று சொல்லிவிட்டால் பாரதியின் ரியாக்ஷன் எப்படி இருக்கும் என்று யோசித்தனர்.
ஆனால் அடுத்த நாள் ப்ரமோவில் கண்ணம்மா தன்னைத்தான் லக்ஷ்மியின் அப்பா என்று சொல்லப்போகிறாள் என்று பாரதி தெரிந்துகொண்டான். அதிக எதிர்பார்ப்பு வைத்திருந்த ரசிகர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியுள்ளது. அதான் பாரதியே தெரிஞ்சிக்கிட்டாரா இதுக்குமேல என்ன ட்விஸ்ட் இருக்கப்போகுது என்று ஒரு சில ரசிகர்கள் யோசித்தாலும், எதிர்பார்க்க வைத்து ஏமாற்றுவது தான் பாரதி கண்ணம்மாவின் ஸ்டைல் என்று கூறி வருகின்றனர்.
பாரதியை விட்டு பிரிந்த கண்ணம்மா தனியாக யார் தயவும் இல்லாமல் வாழ்வதாக சொல்லிக்கொண்டாலும், ஒவ்வொருமுறையும் அவர் பாரதியின் தயவை எதிர்பார்த்து வாழ வேண்டிய சூழலில்தான் இருக்கிறார். லக்ஷ்மிக்கு ஸ்கூல் பாரதி கட்ட வேண்டும் என்பதற்காக அவளை தன் மகளே இல்லை என்று சொல்லிவிட்டார் கண்ணம்மா.. சந்தேகப்படும் கணவனிடம் தன் உண்மையானவள் வெண்பாதான் இந்த சூழ்ச்சிக்கு எல்லாம் காரணம் என்று நிருப்பிக்க கண்ணம்மா இதுவரை எந்த முயற்சியும் மேற்கொண்டதுபோல் தெரியவில்லை.
ஆனால் எதேர்ச்சையாக பாரதி வைக்கும் டெஸ்ட்களில் கண்ணம்மா தன்னை நல்லவள் என்று நிரூபித்தாலும், பாரதி அதை ஏற்க மறுத்துவிடுகிறான். இப்படியே போய்க்கிட்டு இருந்தா எப்போதான் உண்மையை சொல்லூவீங்க அப்படி உண்மையை சொல்லும்போது சீரியல் முடிந்துவிடும் இதில் என்ன சுவாரஸ்யம் இருக்கிறது என்று ரசிகர்கள் பலரும் தங்களது ஆதங்கத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் தற்போது வெளியாகியுள்ள ப்ரமோவில், லக்ஷ்மியின் அப்பா யார் என்று பாரதிக்க தெரியும் என்று சொல்ல, உடனே பாரதிக்கு கால் செய்யும் லக்ஷ்மி தனது அப்பா யார் என்று கேட்கிறார். இதை கேட்டு ஷாக் ஆகும் பாரதி கதறி அழுகிறான் அத்துடன் ப்ரமோ முடிவடைகிறது. இதை பார்த்த ரசிகர் ஒருவர் கேட்பார் பேச்ச கேட்டு ஆடுனா நம்ம வாழ்க்கை தான் நாசமா போகும்.... இதுக்கு பாரதி தான் சிறந்த உதாரணம் என்று கூறியுள்ளார்.
ஆனால் லக்ஷ்மியின் அப்பா தான் இல்லை என்று நினைத்துக் கொண்டிருக்கும் பாரதி இப்போது எதற்காக அழவேண்டும் என்ற கேள்வி வருகிறது. வீட்டிற்கு துரோகம் செய்த வெண்பாவை மன்னித்து ஏற்றுக்கொண்ட பாரதி கண்ணம்மா தப்பு செய்தாளா இல்லையா என்பதை கண்டறிய ஏன் முயற்சி எடுக்கவில்லை என்ற பல கேள்விகள் எழுந்தாலும், இந்த சீரியலில் என்ன நடந்தாலும் லாஜிக் பார்க்காமல் நாங்கள் ஆதரவு தருவோம் என்று ஒரு ரசிகர் கூட்டம் உள்ளதால், பாரதி கண்ணம்மா டிஆர்பி ரேட்டிங்கில் முதன்மை இடத்தில் உள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.