Tamil Serial Bharathi Kannamma Rating Update : என்ன டாக்டர் சார் பெரிய படிப்பெல்லாம் படிச்சிருக்கீங்க ஆனா இப்படி ஒன்னும்தெரியாம இருக்கீங்களே என்று பேசும் அளவுக்குதான் பாரதி கண்ணம்மா சீரியலின் டாக்டர் பாரதி கேரக்டர் வடிவமைக்கப்பட்டுள்ளது.
ஒரு குடும்பத்தின் கணவன் மனைவியை நம்ப வேண்டும் மனைவி கணவனை நம்ப வேண்டும். இந்த இரண்டில் ஒன்று உண்மை இல்லை என்றாலும் வாழ்க்கை நரகமாகத்தான் போகும் என்பதற்கு உதாரணம்தான் பாரதி கண்ணம்மா சீரியல். தாலி கட்டிய மனைவியை நம்புவதை விட்டுவிட்டு வாழ்ககையை கெடுத்த தோழியுடன் சுற்றி வருகிறார் பாரதி.
கண்ணம்மாவுக்கு பிறந்த குழந்தைக்கு தான் அப்பா இல்லை என்று சொல்லும் பாரதி, தனக்கு குழந்தை பிறக்காது என்று தெரிந்தும் வெண்பாவை திருமணம் செய்ய 2 முறைய முயற்சி செய்கிறார். அதுவும் இவர் எப்போது திருமணத்திற்கு அழைப்பார் என்ற எதிர்பார்ப்போடு காத்திருக்கிறார் வெண்பா. டாக்டருக்கு படித்திருக்கும் பாரதி தனக்கு குழந்தை பிற்க்காது என்று தெரிந்தும் வெண்பா ஏன் நம்மை திருமணம் செய்துகொள்ள நினைக்கிறார் என்று யோசிக்கவே மாட்டாரா?
இது ஒருபுறம் இருக்க நம்மிடம் இருக்கும் ஹேமா கண்ணம்மாவின் குழந்தை என்று வீட்டில் உள்ள அனைவருக்கும் தெரியும் ஆனால் பாரதிக்கு அவள் யார் எனறு தெரியாது அவர் தெரிந்துகொள்ளவும் முயற்சிக்கவில்லை. இதை பயன்படுத்திக்கொள்ளும் வெண்பா பாரதியை திருமணம் செய்துகொள்ள ஹேமாவுக்கு சாப்பாடு கொடுத்து கரைக்ட் செய்கிறாள். நேற்று ஹேமாவுக்கு பிரியாணி கொடுக்க அவர், கண்ணம்மாவை விட்டுவிட்டு வெண்பாவிடம் சென்று சாப்பிடுகிறாள்.
இன்றும் அதேபோல் வெண்பா வர கண்ணம்மா அவளை எச்சரிக்க இருவருக்கும் வாய் தகராறு ஏற்பட்டு கண்ணம்மா வெண்பாவை அடிக்க சரியான நேரத்தில் அங்கு பாரதியின் என்ட்ரி. வழக்கம் போல் பாரதி அங்கு வந்து கண்ணம்மாவை திட்ட அதை பார்த்து வெண்பா ஆனந்தமடைகிறாள். அப்போது எல்லை மீறும் பாரதி ஹேமா மீது அக்கரை காட்ட நீ யார்? வெண்பா போல ஹேமாவுக்கு நீ யாரோதான். என்று சொல்லிவிடுகிறார். இதை கேட்டு கண்ணம்மா அமைதியாக நிற்க வெண்பாவை அழைத்துக்கொண்டு பாரதி கிளம்பிவிடுகிறான்.
இதில் இருந்து என்ன தெரிகிறது. அடுத்த சில எபசோடுகளில் ஹேமா கண்ணம்மாவின் பொண்ணுதான் என்ற பாரதிக்கு தெரிய போகிறது என்று டைரக்டர் சொல்லாமல் சொல்லிவிட்டாரோ என்று யோசிக்க தோன்றுகிறது. ஆனால் நம்ம டைரக்டர் அவ்வளவு சீக்கிரம் இதெல்லாம் பண்ண மாட்டாரே என்றும் யோசிக்கலாம். எது எப்படியோ ரசிகர்களை எதிர்பார்க்க வைத்து ஏமாற்றுவது தானே பாரதி கண்ணம்மாவின் கைவந்த கலை. அது இப்போதும் தொடரும் என ஸ்ராங்காக நம்பலாம்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“