Tamil Serial Naam Iruvar Namakku iruvar Rating Update : அப்பாவின் 2-வது மனைவியை தனது அம்மாவாக ஏற்றுக்கொண்டு அவர்களின் 3 மகள்களை தனது தங்கையாக ஏற்றுக்கொண்டு அவர்களின் வாழ்க்கைகாக போராடும் நாயகன். தனது அம்மாவுடன் சேர்ந்து அப்பாவின் 2-வது மனைவியின் குடும்பத்தை அழிக்க நினைக்கும் மற்றொரு நாயகன். இவர்கள இருவரும் இரட்டையர்கள் ஆனால் எதிர் எதிர் திசையில் இருக்கின்றனர்.
அப்பாவின் 2-வது குடும்பத்தை அழிக்கும் முயற்சியின் 2-வது நாயகன் மாறன் தனது அண்ணனான நாயகன் மாயனுக்கே கெடுதல் செய்கிறார். இதற்கு மாயன் என்ன செய்தார், அப்பாவின் 2-வது குடும்பத்தை ஒவ்வொரு ஆபத்தில் இருந்தும் எப்படி காப்பாற்றுகிறார் என்பதை விறுவிறுப்பாக எடுத்துச்சென்றுகொண்டிருக்கும் சீரியல் தான் நாம் இருவர் நமக்கு இருவர் சீசன் 2.
விஜய் டிவியின் ப்ரைம் டைமில் ஒளிபரப்பாகி வரும் இந்த சீரியலுக்கு ரசிகர்கள் பட்டாளம் ஏராளமாக உள்ளது. குடும்ப கதையில் ஆக்ஷன் காட்சிகளுடன் தினசரி எபிசோடுகள் நல்ல வரவேற்பையும் பெரும் எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தி வருகிறது. அதிலும் நடிகர் மிர்ச்சி செந்தில், மாயன், மாறன் என இரு கேரக்டரில் நடிப்பில் வித்தியாசம் காட்டி வருவது ரசிகர்களிடம் பாராட்டை பெற்று வருகிறது.
இந்த சீரியலில், மாறன் வலை விரிப்பதும், அதில் மாட்டிக்கொள்ளாமல் மாறன் தப்பிப்பதும் தொடர்ந்து சுவாரஸ்யத்தை ஏற்படுத்தி வரும் நிலையில், கடந்த சில எபிசோடுகளுக்கு முன்பு மாயனை கடத்தும் மாறன் மாயன் போல் வேஷம் போட்டுக்கொண்டு தனது அம்மா உட்பட அனைவரையும் ஏமாற்றி வருகிறான். அப்போது ரசிகர்கள் மாயன் கடத்தப்பட்டது குறித்து வருத்தப்பட்டாலும் மாயன் தப்பித்த பிறகு எடுக்கும் நடவடிக்கைக்கு வெயிட்டிங் என்றே பலர் கூறியிருந்தனர்.
ஒருகட்டத்தில் மாயனின் மனைவிக்கு ஆக்சிடன்ட் ஆக, இனிமேல் மாயனாக நடிக்க முடியாது என்று சொல்லி மாறன் வேஷத்தை கலைத்துவிட்டு மாயனை தப்பிக்க விடுகிறான். இதை பார்த்த ரசிகர்கள் அடுத்த அதிரடி ஆக்ஷன் கட்சிகள் ஆரம்பம் என்று கருத்துக்களை கூறி வந்தனர். தப்பித்து வந்த மாறன் மகாவை நல்லபடியாக பார்த்து அவளை குணப்படுத்திவிட்டான்.
அதன் ஆட்டத்தை தொடங்கிய மாயன், ஒரு கேஸில் மாறனை ஜெயிலுக்கு அனுப்புகிறார். அதன்பிறகு அவரே வெளியில் எடுக்கிறார். இதனால் குழப்பமடையும், மாறன் மாயனிடம் ஏன் இப்படி நீயே மாட்டிவிட்டு நீயே வெளியில எடுக்குற என்று கேட்க பொறுத்திருந்து பார் என்று மாயன் சொல்லிவிடுகிறார். இதனால் அடுத்து என்ன நடக்கும் என்று ரசிகர்கள் எதிர்பார்ப்பில் காத்திருந்தனர்.
அவர்களின் காத்திருப்புக்கு தீனி போடும் வகையில் தற்போது நாம் இருவர் நமக்கு இருவர் சீரியல் ப்ரமோ வெளியிடப்பட்டுள்ளது. இதில் மாறனின் சிம்கார்டை கைப்பற்றும் மாயன், போலீஸ்க்கு போன் செய்து பல இடங்களில் வெடிகுண்டு வெடிக்க உள்ளதாக சொல்லிவிடுகிறார். இதை கேட்ட போலீசார் மாறனை கைது செய்கின்றனர். இந்த ப்ரமோ ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. வெகு நாட்களுக்கு பிறகு நல்ல ப்ரமோ என்று ரசிகர்கள் கூறி வருகின்றனர்.
விறுவிறுப்பாக திரைக்கதைக்கு பெயர் பெற்ற இந்த சீரியல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில், மாயன் தனது ஆட்டத்தை தொடங்கியுள்ளதால், அடுத்து என்ன செய்ய போகிறார் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. அதிலும் இப்படி அடி மேல் அடி வாங்கும் மாறன் அடுத்து மாயனுக்கு எதிராக என்ன செய்ய போகிறார் என்ற எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது. ஆனாலும் வரும் எபிசோடுகளில் மாயனின் அதிரடி ஆட்டத்தை காண ரசிகர்கள் வெயிட்டிங்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil “