லாரி டிரைவரிடம் கெஞ்சும் கதிர்... இதுக்கெல்லாம் காரணம் யாரு?

Tamil Serial Update : ஐஸ்வர்யா மீனாவிடம் மன்னிப்பு கேட்டு சமரசம் செய்துகொண்டதால், அடுத்து ஒரு பெரிய பிரச்சினை வெளியில் காத்துக்கொண்டிருக்கிறது என்று அனைவரும் யோசித்தனர்.

Tamil Serial Update : ஐஸ்வர்யா மீனாவிடம் மன்னிப்பு கேட்டு சமரசம் செய்துகொண்டதால், அடுத்து ஒரு பெரிய பிரச்சினை வெளியில் காத்துக்கொண்டிருக்கிறது என்று அனைவரும் யோசித்தனர்.

author-image
D. Elayaraja
New Update
லாரி டிரைவரிடம் கெஞ்சும் கதிர்... இதுக்கெல்லாம் காரணம் யாரு?

Tamil Serial Pandian Stores Rating : இவ்வளவு நாள் வீட்டுக்குள் குடும்ப பிரச்சினை.. இப்போ வெளியிட கடை பிரச்சினை.. பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்திற்கு கட்டம் சரியில்லை என்று சொல்லும் அளவுக்கு தற்போது பிரச்சினை வலுத்துக்கொண்டே செல்கிறது.

Advertisment

விஜய் டிவியின் குடும்பங்கள் கொண்டாடும் முக்கிய சீரியல்களில் ஒன்றான பாண்டியன் ஸ்டோர் 4 சகோதரர்களின் ஒற்றுமையை பறைச்சாற்றும் விதமாக திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது. தொடக்கத்தில் கள்ளம் கபடமில்லாத இந்த சீரியல் தற்போது போட்டி பொறாமை என்று மற்ற சீரியல்களை போல சற்று விமர்சனத்தையும் சந்தித்து வருகிறது. ஆனாலும் இந்த சீரியலுக்கு உண்டான மவுசு குறையவில்லை என்றுதான் சொல்ல வேண்டும்.

தொடக்கத்தில் சிறிய கடையாக இருந்த பாண்டியன் ஸ்டோர்ஸ்க்கு எதிரான ஜீவாவின் மாமனார் தனது மகளும் ஜீவாவின் மனைவியுமான மீனாவின் பெயரில் அருகில் ஒரு சூப்பர் மார்கெட்டை தொடங்கினார். அப்போதே பாண்டியன் ஸடோர்ஸ் வியாபாரம் டல்லடித்தது. அதன்பிறகு ஆஃப்ர் என்று எதையோ சொல்லி விட்ட கஸ்டமரை மீண்டும் பிடித்த பாண்டியன் ஸ்டோர்ஸ் இதன்பிறகு தங்களது குடோன் இருந்த இடத்தில் ஒரு சூப்பர் மார்கெட் கட்ட முடிவு செய்து பணியை தொடங்கிவிட்டனர்.

இதனிடையே வீட்டை மீறி திருமணம் செய்துகொண்ட கண்ணனம் மீண்டும் அவன் மனைவி ஐஸ்வர்யாவுடன் வீட்டிற்குள் என்ட்ரி ஆக எப்போது பிரச்சினை வெடிக்குமோ என்று ரசிகர்கள் பரபரப்பின் உச்சமாக சீரியலை பார்த்துக்கொண்டிருந்தனர். அவர்கள் எதிர்பார்த்தது போலவே நைட்டியில் தொடங்கி மீனா வீட்டை விட்டு வெளியேறி ஜீவாவை திருமணம் செய்துகொண்டது முதல் ஐஸ்வர்யாவுக்கும் மீனாவுக்கு சண்டை முற்றியது.

Advertisment
Advertisements

ஆனால் அடுத்த எபிசோட்டில், ஐஸ்வர்யா மீனாவிடம் மன்னிப்பு கேட்டு சமரசம் செய்துகொண்டதால், அடுத்து ஒரு பெரிய பிரச்சினை வெளியில் காத்துக்கொண்டிருக்கிறது என்று அனைவரும் யோசித்தனர். அதற்கு ஏற்றார்போல், பாண்டியன் ஸ்டோர்ஸ் சூப்பர் மார்கெட் அனுமதி இன்றி கட்டப்பட்டுள்ளதாக கூறி அதிகாரிகள் சீல் வைத்துவிட்டனர். இந்த காட்சிகள் தொடர்பாக கடந்த வாரம் வெளியான ப்ரமோவை பார்த்து ரசிகர்கள் வேதனை அடைந்தனர். இதனால் அடுத்து என்ன நடக்கும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

இந்நிலையில், கடை திறப்பதற்காக கடைக்கு வேண்டிய பொருட்கள் அனைத்தும் லாரியில் வந்துள்ளது. ஆனால் கடை திறக்க முடியாததால், லாரி டிவைர் கதிருக்கு போன் செய்து கேட்கிறார். அப்போது கதிர் இன்று ஒருநாள் இரவு மட்டும் எப்படியாவது சரக்கை லாரியில் வைத்து பாதுகாத்துவிடுங்கள் நாளை காலை இறக்கிவிடலாம் என்று கெஞ்சி கேட்கிறார். அதற்கு டிரைவர் கொஞ்சம் ஒப்புக்கொள்ள மறுக்க கதிர் கெஞ்சி கேட்பதால் ஒப்புக்கொள்கிறார்.

இதனால் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் அடுத்து என்ன நிகழும் என்ற எதிர்பார்பு அதிகரித்துள்ள நிலையில், ரசிகர்கள் பலரும் ஐஸ்வர்யாவின் மீது பழியை தூக்கிப்போட முனைந்துவிட்டனர். ஐஸ்வாயா வராதவரை எல்லாம் நல்லாத்தான் போய்கொண்டிருந்தர். அவர் வந்தார் குடும்பத்தில் பிரச்சினை கடைக்கு வரட்டுமா என்று கேட்டார் இப்போது கடையே பிரச்சனையில் சிக்கிக்கொண்டது என்று கூறி வருகின்றனர். மேலும் கதிர் ரொம்ப பாவம் என்றம் ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Pandian Stores Serial Tamil Serial Update

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: