Tamil Serial Rating Raja rani 2 Update : எப்படிதான் தப்பு பண்ணி மாட்டிக்கிட்டாலும் இவள திருத்தவே முடியாது நம்ம திருந்துனாதான் உண்டு என்று சொல்லும் அளவுக்கு அர்ச்சனா தனது அச்சாரத்தை மீண்டும் தொடங்கியுள்ளார். முன்பு மறைமுகமாக பண்ணா இப்போ சந்தியாவுக்கு தெரிஞ்சே சவால் விட்டு பண்றா இது எங்க போய் முடிய போகுதோ…
நீங்கள் நினைப்பது சரிதான். இது விஜய் டிவியின் ராஜா ராணி 2 சீரியல் தான். ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் இந்த சீரியல் அடிக்கடி விமர்சனத்தை சந்தித்து வருவது வழக்கமாக உள்ளது என்னதான் வில்லத்தனம் செய்தாலும் அர்ச்சனாவுக்கு மட்டும் எப்படித்தான் மன்னிப்பு கொடுக்கப்படுகிறதோ என்றும், எப்படிதான் நல்லவள் என்று ப்ரூப் பண்ணாலும், சிவகாமிக்கு சந்தியா மீது எப்படி கோபம் வருகிறதோ என்ற அடுக்கடுக்கான பல கேள்விககள் எழுகிறது.
கடந்த வாரம் முழுவதும் அதிரடி திருப்பங்களுடன் அரங்கேறிய ராஜாராணி 2 சீரியல் இந்த வாரம் பழையபடி மாறிவிட்டர். ஒரு வருடத்திற்கு முன் சிவகாமி மீது கம்லைன்ட் கொடுத்தது அர்ச்சனாதான் என்று தெரியவர, சிவகாமி அர்ச்சனாவை வெளியில் போக சொல்கிறார். ஆனால் சந்தியா தனது மாமியார் சிவகாமியிடம் பேசி அர்ச்சனாவுக்கு மனனிப்பு வாங்கி கொடுக்கிறார். ஆனால் இது எல்லாத்துக்கும் காரணம் சந்தியாதான் அவளை பழிவாங்க வேண்டும் என்று அர்ச்சனா சபதம் எடுக்கிறார்.
இந்த சபதத்தின் முதல் கட்டமாக சந்தியா துவைத்த சிவகாமியின் புடவையை அர்ச்சனா கத்தரிக்கோல் வைத்து கிழித்து விடுகிறாள். இந்த கிழிந்த புடவையை பார்க்கும் சிவகாமி வழக்கம்போல சந்தியா மீது கோபப்படுகிறார். ஆனால் இந்த வேலையை செய்தது அர்ச்சனாதான் என்று தெரிந்துகொள்ளும் சந்தியா அவளிடம் போய் கேட்க இது வெறும் டிரெய்லர் தான் கூடிய சீக்கிரம் இந்த வீட்டை விட்டு உன்னை விரட்டுகிறேன் என்று சவால் விடுகிறாள. அதற்கு சந்தியா முடிஞ்சா செய்து பார் என்று சொல்கிறாள். அத்துடன் ப்ரமோ முடிவடைகிறது.
இந்த ப்ரமோவை பார்த்த ரசிகர் ஒருவர் இது எல்லாத்துக்கும் காரணம் சந்தியாதான் என்று மீண்டும் சிவகாமி தன் வேலையை காட்டிவிட்டார் என்று கூறியுள்ளார். மேலும் ஒரு ரசிகர் பக்கத்து வீட்டு குழந்தைய கேட்ட கூட சொல்லும் இந்த மாறி வேலை எல்லாம் அர்ச்சனா தான் பண்ணும்னு ஆனால் நாம அறிவாளி சிவகாமி அம்மாக்கு மட்டும் தெரியாது பாவம் என்று கூறியுள்ளனர். மேலும் ரசிகர்கள் பலரும் சிவகாமியை கடுமையாக விமர்சித்து வரும் நிலையில், அர்ச்சனாவுக்கு இயக்குநர் ரொம்பவே சப்போர்ட் பண்றாரு என்று கூறி வருகின்றனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“