Tamil Serial Rating Raja Rani 2 Update : அப்பாடா ஒரு வழியாக சந்தியாவோட ஆசை என்னனு சரவணனுக்கு தெரிஞ்சுபோச்சு இனிமேல் அதற்கான முயற்சியில் இறங்குவாரா என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள சீரியல் ராஜா ராணி.
விஜய் டிவியின் ப்ரைம் டைம் சீரியலான ராஜா ராணி நேர்மறையை விட அதிகமான எதிர்மறை விமர்சனங்களை சந்தித்து வருவது தவிர்க்க முடியாத ஒன்றாகி விட்டது. இதற்கு முக்கிய காரணம் இந்த சீரியலில் குடும்ப தலைவி சிவகாமிக்கு யார் நல்லவர் யார் கெட்டவர் என்ற பாகுபாடே தெரியாமல், நல்லவரை கெட்டவர் என்றும் கெட்டவரை நல்லவர் என்றும் நினைத்தக்கொள்வது தான்.
சிவகாமி குடும்பத்தின் 2-வது மருமகள் அர்ச்சனா செய்யும் தவறுக்கெல்லாம் முதல் மருமகள் சந்தியா மீது குற்றம் சொல்வது, அதற்கு சந்தியாவும் எதும் சொல்லாமல பழியை ஏற்றுக்கொள்வதும் பொதுவான ரசிகர்களுக்கு சற்று சலிப்பைதான் ஏற்படுத்துகிறது. அதிலும் தன்னை பொய் புகார் கொடுத்து ஜெயிலுக்கு அனுப்ப நினைத்ததே அர்ச்சானதான் என்று தெரிந்தும் சந்தியாவின் பேச்சை கேட்டும், அர்ச்சான கர்ப்பமாக இருப்பதை நினைத்தும் வீட்டிற்குள் அனுமதித்தார் சிவகாமி.
அதன்பிறகு இனிமேலாவது சிவகாமி சந்தியாவை நம்புவார் என்று எதிர்பார்த்தால் அதுதான் இல்லை. சிவகாமியின் புடவையை கத்தரிக்கோல் வைத்து கிழித்து அர்ச்சனா ஆனால் அந்த புடவையை துவைத்த சந்தியாத்தான் இந்த வேலையை செய்திருப்பார் என்று சிவகாமி அவள் மீது கோபப்பட்டு புடவையை தூக்கி எறிகிறாள். இதை பார்த்த ரசிகர்கள் இவர் இன்னும் திருந்தவே இல்லைடா என்றே கூறி வருகின்றனர்.
ஆனால் புடவையை கிழித்தது அர்ச்சனாதான் என்றுதெரிந்துகொண்ட சந்தியா அவளிடம் சென்று கேட்க, அப்போது ஆரம்பிக்கிறது இவர்களுக்குள் நேரடி யுத்தம். இதனால் அடுத்து என்ன நடக்கும் என்ற எதிர்பார்ப்பு அதிகரிக்கும் என்று எதிர்பார்த்தால் அது நமது தவறுதான். வழக்கம்போல அர்ச்சனா சூழ்ச்சி செய்வார் அதை சந்தியாதான் செய்தார் என்று சிவகாமி கோபப்படுவார் இதுதான் நடக்கப்போகிறது என்று கண்டுபிடிக்கும் அளவுக்குதான் சீரியல் உள்ளது.
இந்நிலையில், தற்போது சரவணனுக்கு பாராட்டு விழா நடைபெற உள்ளது. இதில் என்ன பேச வேண்டும் என்று சந்தியா எழுதிக்கொண்டுத்த பேப்பர் காற்றில் பறந்து சென்றுவிட அதற்கு பதிலாக மற்றொரு பேப்பரை சரவணன் எடுத்து செல்கிறார். அங்கு மேடையில் சென்று பிரித்து பார்க்கும்போது அதில் சந்தியா தனது ஆசையை எழுதி வைத்துள்ளது தெரியவருகிறது. இதனால் சரவணன் அடுத்து சந்தியாவின் ஆசையை நிறைவேற்ற முயற்சிப்பாரா என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
இதனிடையே சரவணனின் பாராட்டு விழாவுக்கு சந்தியா போக கூடாது எனறு நினைக்கும் அர்ச்சனா தனது கர்ப்பத்தை பயன்படுத்தி உடம்பு சரியில்லை என்று சொல்லி சந்தியாவை வீட்டில் விட்டுவிட்டு செல்கின்றனர். அங்கு பாராட்டு விழாவே சந்தியாவின் கணவருக்குதான் ஆனால் அவளையே இங்கே விட்டு செல்கிறோம் என்ற நினைப்பு கூட இல்லாத சிவகாமி எப்படி அர்ச்சனா செய்யும் தவறை கண்டுபிடிக்கபோகிறார். இந்த புகார் அளித்தது கூட சநதியா கண்டுபிடித்தது தான் ஆனால் சிவகாமிக்கு சந்தியா ஆகாது.
இது கடைசியில் எங்குபோய் முடியுமோ தெரியவில்லை என்றும், தயவு செய்து சீரியலை முடித்துவிடுங்கள் என்பதுமே ரசிகர்களின் பெரிய கருத்தாக உள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“