உண்மையை கண்டுபிடித்த நீலாம்பரி... அர்ஜூன் மாஸ்டர் ப்ளான் அவ்வளவுதானா?

Tamil Serial Rating : சீரியலாக இருந்தாலும் திரைப்படமாக இருந்தாலும், ஹீரோ வெற்றி பெற வேண்டும் என்றுதான் ரசிகர்களின் விருப்பமாக இருக்கும்.

Tamil Serial Rating : சீரியலாக இருந்தாலும் திரைப்படமாக இருந்தாலும், ஹீரோ வெற்றி பெற வேண்டும் என்றுதான் ரசிகர்களின் விருப்பமாக இருக்கும்.

author-image
D. Elayaraja
New Update
உண்மையை கண்டுபிடித்த நீலாம்பரி... அர்ஜூன் மாஸ்டர் ப்ளான் அவ்வளவுதானா?

Tamil Serial Rating Update : எவ்வளவுதான் ஹீரோ உண்மையை நிரூபிக்க போராடினாலும் இறுதியில் தோல்விதான் கிடைக்கும் என்பதற்கு முக்கிய உதாரணம் ரோஜா சீரியல். சன்டிவியின் ப்ரைம் டைமில் ஒளிபரப்பாகும் இந்த சீரியல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றாலும், கடுமையான விமர்சனங்களை சந்தித்து வருகிறது.

Advertisment

அஜித் நடிப்பில் வெளியான அட்டகாசம் படத்தில் நீ பழனிக்கே பால்காவடி எடுத்தாலும் ஒரு அடி நகராது என்று சொல்வது போல, இந்த சீரியலின் நாயகன் அர்ஜூன் அனு இந்த வீட்டு பொண்ணு இல்லை என்பதை கடைசி வரை நிரூபிக்க முடியவில்லை. ஆனால் வீட்டில் உள்ள அனைவருக்கும் தெரியும். ஆனால் அர்ஜூனால் நிரூபிக்கதான் முடியவில்லை.

அனு அந்த வீட்டு பொண்ணு இல்லை என்று நிரூபித்துவிட்டால், சீரியல் முடிந்துவிடுமே என்று யோசித்த டைரக்டர் இப்போது புதிய வில்லி ஒருவரை களமிறங்கியுள்ளார். அனு ரோஜா இருவரும் சிறுவயதாக இருக்கும்போது கொலை குற்றவாளிக்கு எதிரான சாட்சி சொல்லிவிடுகின்றனர். இப்போது 20 வருடங்கள் கழித்து அவர் இருவரையும் பழிவாங்க வருகிறார்.

இதை தெரிந்துகொண்ட அர்ஜூன், அனு இந்த வீட்டு பொண்ணு இல்லை என்பதை நிரூப்பிக்கும் வேலையை விட்டுவிட்டு, அந்த வில்லியிடம் இருந்து ரோஜாவை காப்பாற்றி அவளுக்கு பதிலாக அனுவை பலிகடா ஆக்க முடிவு செய்துவிட்டார். இதை தெரியாத அனு இப்போது வீட்டில் ஜாலியாக சுற்றிக்கொண்டிருக்கிறார்.  இதனிடையே ஸ்டைலிஷ் வில்லியான சாக்ஷி எங்கு போனார் என்று தெரியவில்லை.

Advertisment
Advertisements

இந்நிலையில், இன்றைய எபிசோடுக்கான ப்ரமோ தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இதில். அனு ரோஜா இருவருக்கும் பர்த்தேட பங்ஷன் ஏற்பாடு செய்துள்ள அர்ஜூன் வில்லிக்கு அழைப்பிதற்கு அனுப்புகிறார். ஆனால் அர்ஜூனின் மாஸ்டர் ப்ளானை தெரிந்துகொண்ட வில்லி உண்மையை புரிந்கொள்கிறார். இத்துடன் ப்ரமோ முடிவடைகிறது.

ப்ரமோவிலேயே அர்ஜூனின் சூட்சமத்தை வில்லி புரிந்துகொண்டது போன்று காட்சிகள் உள்ளதால், அடுத்து ஏதேனும் சுவாரஸ்யமான நிகழ்வு நடைபெறுமா என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ள அதே சமயம், எப்படித்தான் யோசித்தாலும் அர்ஜூனுக்கும் ஆடியன்ஸ்க்கும் இறுதியில் ஏமாற்றம் தான் என்ற எண்ணம் வருவதை தவிர்க்க முடியவில்லை. ரோஜா சமீத்தில் 1000 எபிசோடுகளை கடந்தது. இது 2 ஆயிரம் எபிசோடுகளை கடக்க வேண்டும் எனறால் இப்படித்தான் ஜவ்வாக இழக்க வேண்டும் என்று இயக்குநரிடம் யாரோ சொல்லிவிட்டார்கள் போல...

அது மட்டுமல்லாமல் சீரியலாக இருந்தாலும் திரைப்படமாக இருந்தாலும், ஹீரோ வெற்றி பெற வேண்டும் என்றுதான் ரசிகர்களின் விருப்பமாக இருக்கும். ஆனால் இந்த சீரியலில் மட்டும் ஹீரோ பலமுறை தோல்வியை சந்திப்பார் ஆனாலும் இந்த சீரியலுக்கு ரசிகர்கள் அதிகம். அதற்கு முக்கிய காரணம் அர்ஜூன் ரோஜா இடையேயான ரொமான்ஸ் கட்சி மற்றும் அர்ஜூனின் பர்பாமன்ஸ்.

ஆனால் மற்ற சீரியல்களை போல் இல்லாமல் இந்த சீரியலில் தொடக்கம் முதல் இறுதிவரை ஒரே நோக்கம்தான். அனு அந்த வீட்டு பொண்ணா இல்லையா என்பதை நிரூப்பிக்க ஆயிரம் எபிசோடாக அர்ஜூன் போராடிக்கொண்டிருக்கிறார். இன்னும் வெற்றி கிடைத்தபாடில்லை. இதில் இப்போது ஒரு புதிய வில்லி வேறு... இதிலாவது அர்ஜூனுக்கு வெற்றி கிடைக்குமா என்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

 “தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil “

Roja Serial

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: