scorecardresearch

ராதிகா வீட்டில் தங்கும் கோபி… சடன் என்ட்ரியாக பாக்யா… உண்மை தெரியவருமா?

Tamil Serial Rating : இந்த சீரியல் இல்லத்தரசிகளுக்கு பிடித்தமானது என்றாலும் கூட பாக்யாவின் உலகம் அறிய நடிப்பு சில சமையங்களில் எரிச்சலை ஏற்பாடுத்துவது தவிர்க்க மூடியாத ஒன்றாக உள்ளது.

ராதிகா வீட்டில் தங்கும் கோபி… சடன் என்ட்ரியாக பாக்யா… உண்மை தெரியவருமா?

Baakiyalakshmi Serial Rating Update : வீட்டுக்கு வரவே புடிக்கலனு சொன்னீங்களே கோபி சார் இப்போ எதுக்காக வந்தீங்கோ என் கேட்க வைத்ததுதான் பாக்யலட்சுமி சீரியல். இந்த சீரியலில் நெகடீவ் கேரக்டரில் நடித்து வந்தாலும் தலைவன் கோபி ரசகர்கள் மனதில் இடம் பிடித்துவிட்டார் என்றுதான் சொல்ல வேண்டும்.

விஜய் டிவியின் ப்ரைம் டைம் சீரியல் பாக்யலட்சுமி. இல்லத்தரசி ஒருவரின் வாழ்க்கை போராட்டம், காதல் திருமணம், விதவை மறுமணம், திருமணத்திற்கு மீறிய உறவு என பல தகவல்களை உள்ளடக்கி திரைக்கதை அமைக்கப்பட்டுள்ள இந்த சீரியல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அழகான மனைவி அன்பான குழந்தைகள் அப்பா அம்மா என மகிழ்ச்சியாக சென்றுகொண்டிருந்த இந்த குடும்பத்தில் தற்போது பூகம்பம் வெடிக்க தொடங்கியுள்ளது.

தனது முன்னாள் காதலி ராதிகாவுடன் சுற்றிக்கொண்டிருக்கும் கோபி அவளை திருமணம் செய்ய வேண்டி பாக்யாவிடம் இருந்து விவாரத்து பெற முயற்சிக்கிறார். உலகம் அறியாத பாக்யா விவாகரத்து பத்திரத்தில் கையெடுத்து போட்டுவிட்டு குடும்ப நல கோர்ட்டுக்கு சென்று வந்துவிட்டார். அப்போ கூட கோபி விவாகரத்துக்கு ட்ரை பண்ணுவது பாக்யாவுக்கு தெரியவில்லை.

இப்படி இருக்கும்போது பகலில் ராதிகா வீட்டில் இருந்துவிட்டு இரவில் தன் வீட்டிற்கு வரும் கோபி இப்போது ராதிகா வீட்டிலேயே ஐக்கியமாகி வருகிறார். கங்கா சந்திரமுகியாக மாறுவதை பார் என்று சொல்வது போல் கோபி எப்படி ராதிகா வீட்டிற்குள் படிப்படியாக தங்குகிறார் என்று சொல்லும் வகையில், முதல்முறையாக ராதிகா வீட்டில் இரவில் தங்கியுள்ளார் கோபி. இரவில் கோபி வீட்டுக்கு வரதாததால், பதற்றமடையும் பாக்யா காலையில் கோபியிடம் விசாரிக்க அவர் பாக்யாவை அதட்டி பேசுகிறார்.

இப்படியே சென்றுகொண்டிருந்தால் என்ன செய்வது, கோபியை கேள்வி கேட்டு வந்த தாத்தாவையும் பக்கவாதத்தில் படுக்க வைத்துவிட்டீர்கள் பாட்டிக்கு கோபி மேல் சற்று கோபம் இருந்தாலும் அவர் கணவரை கவனிப்பதை குறியாக இருக்கிறார். செழியன் சுயநலவாதி என்பதை தெள்ளத்தெளிவாக காண்பித்துவிட்டார். இப்படி இருக்க இனியாவின் கேரக்டரை இப்படி கொண்டு போகிறீர்கள் இது எங்குபோய் முடியுமோ என்ற அளவுக்கு…

நடுவில் பாக்யா எழில், ஜெனி மூவரும் குடும்பத்தை ரன்பண்ண படாதபாடு பட்டுக்கொண்டிருக்கிறார்கள். இதுக்கு நடுல கோபி கொஞ்சம் கூட குடும்பத்தின் மேல் அக்கரை இல்லாமல் ராதிகாவுடன் ரொமான்ஸ் செய்துகொண்டிருக்கிறார். இதை பார்த்து கடுப்பாடும் ரசிகர்கள் ஒன்னு ராதிகா கோபி கல்யாணத்தை முடிங்க.. இல்ல உண்மையை பாக்யாவிடம் சொல்லுங்க அத விட்டுட்டு இப்படி ஜவ்வு மாதிரி எவ்ளோ நாளைக்குதான் இழுத்தக்கிட்டு இருப்பீங்க….

இந்த சீரியல் இல்லத்தரசிகளுக்கு பிடித்தமானது என்றாலும் கூட பாக்யாவின் உலகம் அறிய நடிப்பு சில சமையங்களில் எரிச்சலை ஏற்பாடுத்துவது தவிர்க்க மூடியாத ஒன்றாக உள்ளது. அதிலும் கோபி தப்பு பண்ணுகிறார் என்று தெரிந்தும் கணவரை கேள்வி கேட்க ஏன் இவ்வளவு தயக்கம். தொடக்கத்தில் இருந்தே அவர் திட்டிக்கொண்டுதான் இருக்கிறார் ஆனால் இப்போ வேற எதோ பண்றாருனு தெரிஞ்சும் கேட்காம இருக்கலாமா யோசிங்க பாக்யா மேடம்… டைரக்டர் சார்….

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Tamil App.

Web Title: Tamil serial rating update with promo in baakiyalakshmi serial