Tamil Serial Roja Rating Update : தனது வீட்டில் பேத்தி என்று நுழைந்திருக்கும் ஒரு பெண்னை இந்த வீட்டு பெண்ணே இல்லை என்று நிரூப்பிக்க ஒரு குடும்பமே சேர்ந்து போராடுகிறது என்று சொன்னால் அதுதான் ரோஜா சீரியல்.
சன்டியில் முக்கிய சீரியல்களில் ஒன்றாக இந்த சீரியலில், சுப்பு சூரியன், பிரியங்கா நல்காரி முதன்மை கேரக்டரில் நடித்து வரும் நிலையில், கதையின் முக்கிய திருப்புமுனை கேரக்டைரில், வடிக்கரசி மற்றும் ராஜேஷ் ஆகியோர் நடித்து வருகின்றனர். சன்டியின் ப்ரைம் டைமில் ஒளிபரப்பாகி வரும் ரோஜா சீரியலுக்கு டிஆர்பி ரேட்டிங்கும் முன்னணியில் கிடைத்து வருகிறது.
இதில் அனு தனது வீட்டு பொண்ணு இல்லை என்று நிரூப்பிக்க போராடி வரும் அர்ஜூன், இதை தனது குடும்பத்தினருக்கு உணர்த்திவிட்டார். ஆனாலும் சட்டப்பூர்வமாக நிரூபிக்க வேண்டும் என்ற முயற்சியில் இறங்கியுள்ளார். ஆனால் இதை தெரிந்துகொண்ட எச்சரிக்கையாகியுள்ள அனு அர்ஜூனின் முயற்சிக்கு முட்டுகட்டை போடும் முயற்சியில் இறங்கியுள்ளார். இந்த முயற்சியின் ஒரு பகுதியாக கடந்த வாரம் ஒரு எபிசோட்டில், ரோஜாவை அகு சுட்டு விடுகிறார்.
இது தொடர்பாக வெளியான ப்ரமோ பெரிய பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இந்த ப்ரமோவின் எபிசோடு பெரும் விமர்சனத்தை கிளப்பியது. அனு ரோஜாவை கொலை செய்ய ப்ளான செய்வதை தெரிந்துகொண்ட அர்ஜூன் துப்பாக்கி குண்டுகளை டம்மியாக மாற்றிவிடுகிறார். இது தெரியாமல் அனு ரோஜாவை சுட, அவர் இறந்த மாதிரி நடிக்கிறார். அதற்குள் அனு கைது செய்யப்டுகிறார்.
அதன்பிறகு ரோஜாவுக்கு பதிலாக ஒரு டெட்பாடியை வரவழைத்து அதில் ரோஜாவின் முகத்தை பொறுத்திவிடுகின்றனர். அதன்பிறகு அனு சிறையில் இருக்கும்போது ரோஜா ஆவியாக வந்து மிரட்டுவது போன்று செட்டப் செய்துள்ளனர். இதை பார்த்த ரசிகர்கள், என்னங்கடா ஒரு டிஎன்ஏ டெஸ்ட் எடுத்த சீரியலே முடிந்துவிடும் அதை விட்டுவிட்டு இப்போது நடுரோட்டில் முகமாற்று அறுவை சிகிச்சை செய்கிறீகள் என்ன தான் உங்க ப்ளான் என்று கேட்டு வருகினறனர்.
அதோடு இல்லாமல், நன்றாக சென்றுகொண்டிருந்த சீரியலை திடீரென பேய் சீரியலாக மாற்றிவிட்டனர். திரைப்படத்தில் பேய் ட்ரெண்டிங் முடிந்து இப்போது சீரியலில் பேய் ட்ரெண்டிங்கை தொடங்கி விட்டீர்களா என்று கேட்டு வருகின்றனர். எது எப்படி ஆனாலும் நாங்கள் லாஜிக் எல்லாம் பார்க்கமாட்டோம். ரோஜா சீரியலில் எது நடந்தாலும் நாங்கள் பார்ப்போம் என்ற ஒரு ரசிகர் கூட்டம் தற்போது சுற்றி வருகிறது. இதனால் சீரியலுக்கு உண்டான வரவேற்பு மட்டும் குறையால் உள்ளது.
ஆனால் ரோஜா சீரியல் விறுவிறுப்பாக சென்றால் மட்டுமே நன்றாக இருக்குமு். இப்படி ஜவ்வு மாதிரி இழுத்தால், எப்படி, அப்படியோ காட்சிகள் நீண்டுகொண்டு சென்றாலும், ஒரு லாஜிக்குடன் சென்றால் நல்லது என்று பொதுவான ரசிகர்களின் கருத்தாக உள்ளது. இதனால் அடுத்தடுத்து வரும் எபிசோடுகள் பேய் ட்ரெண்டிங்கை கைவிடுவார்களா அல்லது சீரியலை ஜவ்வு மாதிரி இழுப்பார்களா என்பது இயக்குநருக்கே வெளிச்சம். இது ஒருபுறம் இருக்க தற்போது நீலம்பரி என்ற புது வில்லி ஒருவர் என்ட்ரி ஆகியுள்ளார். இதனால் சீரியல் அடுத்து விறுவிறுப்பான கட்டத்தை எட்டுவிடும் என்று ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“