Advertisment

Tamil Serial Rating : ரோஜா கடத்தல் அர்ஜுன் காப்பாத்த வருவாரா...? இது எத்தனையாவது முறைங்க...

Tamil Serial Update : சுமார் 2 மணி நேரத்தில் முடிவு தெரிந்துவிடும் திரைப்படங்களை போல் இல்லாமல் நாள்தோறும் பல திருப்பங்களுடன் அரங்கேறி வரும் அரைமணி நேர சீரியல் எபிசோடுகளுக்கு ரசிகர்கள் அதிகம்.

author-image
WebDesk
New Update
Tamil Serial Rating : ரோஜா கடத்தல் அர்ஜுன் காப்பாத்த வருவாரா...? இது எத்தனையாவது முறைங்க...

Tamil Serial Rating Update : சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் சீரியல் ஒரு இன்றியமையாத பொழுதுபோக்காக மாறிவிட்டது என்று கூறலாம். அந்த அளவிற்கு சீரியல் ரசிகர்கள் மத்தியில் நீங்கா இடம்பிடித்துள்ளது. இதனை தங்கவைத்துக்கொள்ளும் நோக்கில் நாள்தோறும் புதிய சீரியல்கள் களமிறங்கி வருகினறனர். பழைய சீரியல்கள் ஒருசில முடிவுக்கு வந்து கொண்டிருக்கின்றனர். ஆனால் சீரியல் மீதான ரசிகர்களின் எதிர்பார்ப்பு நாள்தோறும் உயர்ந்து வருகிறது.

Advertisment

சுமார் 2 மணி நேரத்தில் முடிவு தெரிந்துவிடும் திரைப்படங்களை போல் இல்லாமல் நாள்தோறும் பல திருப்பங்களுடன் அரங்கேறி வரும் அரைமணி நேர சீரியல் எபிசோடுகளுக்கு ரசிகர்கள் அதிகம். இதில் ரசிகர்களின் எதிர்பார்ப்பை மேலும் அதிகரிக்கும் வகையில் ஒவ்வொரு சீரியலுக்கும் தினசரி ப்ரமோக்கள் வெளியிடப்பட்டு வருகிறது. இந்த ப்ரமோவை வைத்தே அன்றைய எபிசோடுகளின் கதையை தீர்மானித்து விடலாம். அந்த வகையில் இன்று வெளியாகியுள்ள ப்ரமோக்களை வைத்து எந்த சீரியல் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது என்பதை பார்ப்போம்.

ரோஜா

இந்த ப்ரமோவை பார்த்த ரசிகர் ஒருவர் அடங்காத பிடாரி கர்வம் கொண்ட சாட்சி என்ற சிறுத்தைக்கு பொறி வைக்கப்படுகிறது. அது வெற்றிபெற வாழ்துக்கள் ரோஜாவ சாக்சி கடத்த வேண்டியது அர்ஜுன் காப்பாத்த வேண்டியது இது எத்தனை யாவது முறை தெரிஞ்சா சொல்லுங்கள் என்று கேட்டுள்ளார். மேலும் ஒரு ரசிகர் காலைல 6 மணி இருக்கும் கோழி கொக்கரக்கோ கூவுச்சா இப்படி எத்தண நாள் ரா ரீல் விடுவீங்க என்று கேட்டுள்ளார். மேலும் ரசிகர்கள் பலரும் அரைத்த மாவையே எத்தனை முறை அரைப்பீங்க என்று கேட்டுள்ளனர்.

பாரதி கண்ணம்மா

இந்த ப்ரமோவை பார்த்த ரசிகர் ஒருவர் வெண்பா இல்லாததால இவங்க ரெண்டுபேருக்கும் ரொமான்ஸ் சீன் கொண்டு வறீங்களா டைரக்டர் சார் என்று கேட்டுள்ளார். மறறொரு ரசிகர் பழைய கண்ணம்மா இருந்திருந்தா இன்னும் நல்லா இருந்துருக்கும் என்று கூறியுள்ளார். மேலும் ஒரு ரசிகர் இதெல்லாம் சரிதான் அப்படியே அந்த டிஎன்ஏ டெஸ்ட் ஞாபகம் வச்சிக்கிட்டா ரொம்பக நல்லாருக்கும் என்று கூறியுள்ளனர். மேலும் ரசிகர்கள் பலரும் சீன் சூப்பர் என்று கூறியுள்ளனர்.

பாக்யலட்சுமி

இந்த ப்ரமோவை பார்த்த ரசிகர் ஒருவர் என்ன எழில் கடைசியில் இப்படி ஆகிட்டீங்களே என்று கேட்டுள்ளார். மற்றொரு ரசிகர் எழில் அப்பாவுக்கு லவ் ஸ்டார்ட் ஆகிடுச்சு ஆனா எழிலுக்கு புட்டுக்கிச்சி என்று கூறியுள்ளார். மேலும் ரசிகர் ஒருவர் எழிலுக்கு என்ன குறைச்சல் அமிர்தா ஏன் அவரை வேண்டுடாம் என்று சொல்கிறீர்கள் என்று கேட்டுள்ளார். மேலும் ரசிகர்கள் பலரும் ஏன் சீரியலை இப்படி கொண்டுபோறீங்க என்று கேட்டுள்ளனர்

பாண்டியன் ஸ்டோர்ஸ்

இந்த.ப்ரமோவை பார்த்த ரசிகர் ஒருவர் கஸ்தூரிக்கு வேற வேலையே இல்லையா இவங்கள பத்தி தெரிஞ்சிருந்தும் ஏன் வீட்டுக்குள்ள விடுறீங்க தனம் என்று கேட்டுள்ளார். மற்றொரு ரசிகர் என்ன கதிர் வீட்ல உண்மையை சொல்லியிருக்கலாமே என்று கூறியுள்ளார். மேலும் ஒரு ரசிகர் ஏதே ரொம்ப நாள் இழுக்காம இப்பவாது உண்மையை சொல்லிட்டீங்களே அதுவரைக்கும் ஓகே என்று கூறியுள்ளார். ஜனர்த்தன் எப்பவுமே இப்படித்தான் ஜோக் சொல்லிக்கிட்டே இருப்பாரு என்று கூறியுள்ளார்.

ராஜா ராணி 2

இந்த ப்ரமோவை பார்த்த ரசிகர் ஒருவர் இவ வாய பார்த்தாலே வாந்தி வருதுடா சாமி...இதுல எப்ப பார்த்தாலும் போட்டோ ஷூட் பன்னி உசுர வாங்குற... என்று கூறியுள்ளார். மற்றொரு ரசிகர் அர்ச்சனா ஏதோ பிரச்சனையை கிளப்ப தொடங்கிடுச்சி என்று கூறியுள்ளார். மேலும் ஒரு ரசிகர் அட என்னங்க டைரக்டர் சார் எப்போதான் இவள வீட்ல மாட்டி விடப்போறீங்க என்று கேட்டுள்ளார். மேலும் ரசிகர்கள் பலரும் அர்ச்சனாவை பார்த்தாலே கடுபாக்கிறது என்று கூறியுள்ளனர்.  

இந்த கருத்துக்களின் அடிப்படையில் பார்க்கும்போது பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கே அதிக எதிர்பார்பார்ப்பு உள்ளது என்று கூறலாம். கஸ்தூரி வீட்டில் வந்து கண்ணன் குறித்த உண்மையை சொல்லிவிட்டதால் அடுத்த என்ன நடக்கும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளதே இதற்கு முக்கிய காரணம். மற்றடி அனைத்து சீரியல்களும் அந்தந்த ரசிகர்களை திருப்திப்படுத்தும் என்று கூறலாம்.

 “தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamil Serial Update
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment