Tamil Serial Pandian Stores Update : ஒற்றுமையாக இருந்த குடும்பத்தில் இருந்து தவறு செய்து விட்டு பிரி்ந்து சென்றவர் மீண்டும் அதே வீட்டில் வந்து சேர்ந்தால், என்ன நிலை இருக்கும் என்பதற்று உண்மை உதாரணம் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலை சொல்லலாம்.
விஜய் டிவியின் ப்ரைம் டைம் சீரியலான பாண்டியன் ஸ்டோர்ஸ் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. பெரிதாக நெகடீவ் காட்சிகள் இல்லாத இந்த சீரியல் குடும்பங்கள் கொண்டாடும் சீரிலாக உள்ளது. 4 சகோதரர்கள் உள்ள இந்த குடும்பத்தில் கடைசி சகோதரர் கண்ணன் வீட்டின் எதிர்ப்பை மீறி திருமணம் செய்துகொண்டு தனியாக சென்றுவிட்டார்.
அதன்பிறகு ஒரு சில எபிசோடுகள் கடந்து தற்போது வீட்டில் வந்து சேர்ந்துள்ள அவருக்கு, பழைபடி மரியாதை இருக்கிறதா என்றால் இல்லை. அதிலும் குறிப்பாக அவர் திருமணம் செய்துள்ள ஐஸ்வர்யா வீட்டில் கட்டுப்பாடுகளை மீறி நடந்துகொள்ளும் விதம் கண்ணனுக்கே ஒரு சங்கடத்தை ஏற்படுத்தி வருகிறது.
இதில் ஐஸ்வர்யா வீட்டிற்கு வருவதற்கு முன்னால் கண்ணன் தாக்கப்பட்டபோது, கதிர் மாமாவை விட்டுவிட்டு கண்ணனை அடித்துவி்டார்கள் என்றும், சூப்பர் மார்கெட்டில் பணம் காணாமல் போன விவகாரத்தில் மீனா அப்பா மீது கம்லைண்ட் கொடுக்கலாம் என்று கூறியது வீட்டினரிடையே சற்று அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஆனாலும் அவர் மீது குடும்பத்தினர் அன்பாகத்தான் பழகினர்.
இடையில் ஐஸ்வர்ய வீட்டில் நைட்டி அணிந்ததில் இருந்து பிரச்சினை தொடங்கியது. ஐஸ்வர்யவிடம் மீனா நைட்டி குறித்து சொல்ல போக அவர் மீனாவின் பேச்சை மதிக்கவே இல்லை.இதனால் மீனாவும் நைட்டி அணிய தொடங்கினர். அதன்பிறகு ஜீவா சமானப்படுத்தி இந்த பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைத்தார். அதன்பிற்கு பொங்கல் சாமான் எடுக்க கண்ணனை கூப்பிட சொல்ல முல்லை சொல்கிறாள்.
அப்போது ஐஸ்வர்யா கண்ணனை ஏன் சொல்கிறீர்கள் கதிர் மாமாவை எடுக்க சொல்லுங்கள் என்று சொன்னது முல்லையை கோப்படுத்தியது. அதன்பிறகு முல்லையும் ஐஸ்வர்யா மீது கோப்பட வீட்டில் அனைவரும் ஒன்றாக இருந்தாலும் மனதளவில் சற்று பிரச்சினையை சந்தித்து வருகினறனர். இதனிடையே கண்ணன் ஐஸ்வர்யா இருவரும் காலேஜ்க்கு செல்லும்போது தனம் பணம் கொடுக்கிறார். இதை பார்த்து மீனா உங்களுக்கு அமைந்தது போல் வேறு யாருக்கும் அமையாது என்று குத்தி காட்டுவது போல் பேசுகிறார்.
இதனால் ஐஸ்வர்யா மூர்த்தியிடம் பாண்டியன் ஸ்டோர்ஸில் வேலை கேட்கிறார். ஆனால் மூர்த்தி படிப்பை முடிங்க அப்புறம் வேலைக்கு போகலாம் என்று சொல்லிவிடுகிறார். இந்த ப்ரமோவை பார்த்த ரசிகர்கள் பலரும் ஐஸ்வர்யாவின் வாய்க்கு தான் மீனா பதிலடி கொடுக்கிறார் என்று கூறி வருகின்றனர். மேலும் கஸ்தூரியின் பேச்சை கேட்டு ஐஸ்வர்யா பண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தை பிரித்து விடுவார் எனறும் கூறி வருகினறனர்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil