scorecardresearch

அவ்வளவு ஈஸியா தலைவனை பிடிச்சிட முடியுமா? முயற்சி பண்ணி பாருங்க எழில்

Tamil Serial Rating : கடந்த சில வாரங்களாக வெளி வரும் ப்ரமோக்கள் கோபி தனது வீட்டில் மாட்டிக்கொள்வது போல் காட்சிகள் வருகிறது.

Baakiyalakshmi Serial Rating Update With Promo : நீங்கள் இந்த மாதிரி எத்தனை சீன் காட்டினாலும், கோபி இப்போதைக்கு மாட்டிக்கொள் மாட்டார் என்பது சின்ன குழந்தைக்கு கூட தெரியும் என்று செம்ம கடுப்பாக சொல்ல வைத்துள்ள சீரியல் தான் பாக்யலட்சுமி.

இல்லத்திரசிகள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் முக்கிய சீரியல்களில் ஒன்று பாக்யலட்சுமி. இலலத்தரசி ஒருவரின் வாழ்க்கையை மையமாக வைத்து திரைக்கதை அமைக்கப்பட்டுள்ள இந்த சீரியல் சமீப காலமாக ரசிகர்களின் பொறுமையை ரொம்பவே சோதித்து வருகிறது. ஆனாலும் டிஆர்பி ரேட்டிங்கில் முதன்மை இடத்தை பிடித்துள்ளது.

மனைவியை விவாகரத்து செய்துவிட்டு தனது முன்னாள் காதலியை திருமணம் செய்துகொள்ள நினைக்கும் கோபி அதற்காக வேலைகளில் தீவிரமாக இறங்கியுள்ளார். இப்போது இரவு நேரங்களில் காதலி ராதிகா வீட்டில் தங்கி வருகிறார். இந்த பக்கம் பாக்யாவுக்கு கணவர் மீது சந்தேகம் வந்துவிட்டது. ஆனால் இவர் ஏதோ செய்கிறார் என்று மட்டும்தான் சந்தேகம்.

இதனால் தப்பித்து வரும் கோபி எப்போது மாட்டுவார் என்று ரசிகர்கள் மத்தியில் பரபரப்பான எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. ஆனால் கடந்த சில வாரங்களாக வெளி வரும் ப்ரமோக்கள் கோபி தனது வீட்டில் மாட்டிக்கொள்வது போல் காட்சிகள் வருகிறது. ஆனால் எபிசோட்டில் கோபி தப்பித்து விடுகிறார். இதனால் இந்த ப்ரமோக்கள் மற்றும் எபிசோடுகள் பொறுமையை ரொம்பவே சோதிக்கிறது.

இந்நிலையில் தற்போது வெளியாகியுள்ள ப்ரமோவில், பாக்யா தனது குடும்பத்துடன் வெளியில் சென்றுள்ளார். அதே இடத்திற்கு ராதிகாவை அழைத்துக்கொண்டு கோபி வருகிறார். அப்போது இனியா ஒரு போட்டோ அனுப்ப அதை பார்த்த கோபி இது நாம் இருக்கும் இடம் என்று தெரிந்துகொண்டு ராதிகாவிடம் ஏதோ சொல்லி அழைத்துச்செல்கிறார் அப்போது கோபியின் மகன் எழில் பார்த்துவிடுகிறார்.

அதிலும் ஒரு பெண்ணுடன் பார்க்கும் அவர் அந்த பெண் யார் என்று அவருக்கு தெரியவில்லை. அத்துடன் இந்த ப்ரமோ முடிவடைகிறது. இதை பார்த்த ரசிகர்கள் எத்தனை தடவைதான் இதே சீன வச்சி ஏமாத்துவீங்க புதுசா எதாவது பண்ணுங்க ஒன்னு கோபியை பாக்யாவிடம் மாட்டிவிடுங்க இல்ல, கோபி அப்பா சரி ஆக்குங்க அத விட்டுவிட்டு இப்படி ஜவ்வு மாதிரி இழுந்துக்கொண்டு சென்றால் என்ன அர்த்தம் என்று கேட்டு வருகினறனர்.

அதேபோல் விவாகரத்து கேட்டு கோர்ட்டுக்கு சென்ற கோபி பாக்யா இருவருக்கும் விசாரத்து வழங்காமல் கவுன்சிலிங் செல்ல கோர்ட் கூறியது. அத்துடன் விவாகரத்து தொடர்பான காட்சிகளே இல்லை. இவர்கள் இருவருக்குமான விவாகரத்து வழக்கு என்ன ஆனது என்பது டைரக்டருக்கே வெளிச்சம். இந்த பக்கம் ராதியாவிடம் சென்னதையே சொல்லி சொல்லி அனுதாபத்தை அள்ளுகிறார் கோபி.

இதற்கிடையே கடந்த வார எபிசோட்டில் செழியன் தனது மனைவியை விவாகரத்து செய்வதாக கூறிய போது அவனிடம் ஆக்கோஷமான டைலாக் பேசிய பாக்ய அடுத்த நிமிடமே என்னங்க நான் சொன்னது சரிதானே என்று கேட்கிறார். ஏன் பாக்யா அம்மா உங்களிடம் இருந்து விவாகரத்து வாங்க கோபி அழைத்துக்கொண்டு போனாரே அது உங்களுக்கு ஞாபகம் இல்லையா அது பற்றி ஏன் கேட்கவில்லை.

இது ஒருபுறம் இருக்க விவாகரத்து வாங்குவதாக சொன்ன செழியனுக்கு கோபி வாழ்ககை குறித்து அட்வைஸ் பண்ணுகிறார். இதை பார்க்கும்போது உபதேசம் இல்லாம் ஊருக்குதான கோபி உங்களுக்கு இல்லையா என்றுதான் கேட்க தோன்றுகிறது. இப்படி சென்றுகொண்டிருக்கும் இந்த சீரியலுக்கும் தீவிர ரசிகர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். எப்படி போர் அடிக்கிற சீன் வந்தாளும் நாங்கள் சலிக்காமல் பார்ப்போம் என்று சொல்லும் ரசிகர்களுக்கு இந்த காட்சிகள் ட்ரீட்தான்.

 “தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil “

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Tamil App.

Web Title: Tamil serial rating update with promo vijay tv baakiyalakshmi serial