Tamil Serial Raja Rani 2 Rating Update : உங்க பொண்ண நீங்க படிக்க வைப்பீங்க… ஆனா வீட்டுக்கு வந்த மருமகள் படிச்சிருந்தா அது உங்களுக்கு புடிக்காது… அதும் அவங்க ஆசையை நிறைவேத்தனும்னு உங்க புள்ளையே வந்து சொன்னாலும் நீங்க ஒத்துக்க மாட்டீங்க என்ன நியாயம் சிவகாமி அம்மா இது உங்களுக்கே தப்பா தெரியலையா என்று கேட்கத்தான் தோன்றுகிறது ராஜா ராணி சீரியலை பார்த்து..
ஆண்களுக்கு நிகராக பெண்கள் சாதித்து வரும் இந்த காலத்தில் பெண்கள் படிக்க கூடாது தனது வீட்டுக்கு வந்த மருமகள் தனது விருப்பத்தின் படிதான் நடந்துகொள்ள வேண்டும் என்பதை வலிறுத்துவது போன்ற ஒரு சீரியல்… இதற்கு பெண்கள் எப்படி ஆதரவு அளிக்கிறார்கள் என்ற கேள்வி வரும். ஆனால் என்ன செய்வது இந்த சீனை பார்த்து சிவகாமியை நாளு திட்டு திட்டுவாங்க எபிசோடு முடிஞ்சிடும். அடுத்த நாள் அர்ச்சனா எதாவும் சூழ்ச்சி பண்ணுவாங்க மக்கள் அதை பற்றி பேச ஆரம்பிச்சிடுவாங்க…
சமூகத்தில் நடக்கும் அவலங்களை போலத்தான் இதுவம் ஒரு பிரச்சினை பற்றி பேசிக்கொண்டிருக்கும்போது அதை விட பெரிய பிரச்சினை வந்தால் இதை மறந்துவிடுவோம் என்பதை போலத்தான். 4 பிள்ளைகள் உள்ள ஒரு வீட்டில் பெரியவனுக்கு ஸ்வீட் கடை, சின்னவனுக்கு துணிக்கடை, 3-வது மகன் படித்துவிட்டு வேலை4-வது மகள் படித்துக்கொண்டிருக்கிறார். இதில் படிக்காத முதல் இரு மகன்களுக்கும் படிக்காத பெண்களையே மணமுடிக்க நினைக்கிறார் சிவகாமி.
அதிலும் முதல் மகனுக்கு படித்த பெண் மனைவியாக வந்துவிட்டதால் சிவகாமியால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. இப்போது அவளை போலீஸ் ஆக்க வேண்டும் என்று சிவகாமியின் மகன் சரவணன் சொல்லது சிவகாமிக்கு இன்னும் கோபத்தை ஏற்படுத்துகிறது. இதை இது பற்றி பேசும்போது பொண்ணுங்க எப்போவுமே புருஷனுக்கு ஒரு படி கீழ தான் இருக்க வேண்டும் என்று சிவகாமி சொல்கிறார். ஆனால் வீட்டில் எல்லா முடிவும் அவர் மட்டும் தான் எடுகிறார் அவரது கணவரை கேட்பதே இல்லை.
இப்படி இருக்கும்போது சிவகாமி அம்மாவே கணவரை கலந்து ஆலோசித்து முடிவு செய்ய மாட்டார். ஆனால் அவரது மருமகள்கள் கணவரின் ஒரு படி கீழே தான் இருக்க வேண்டுமாம். இந்த ப்ரமோவை பாருங்க.
இந்த ப்ரமோவை பார்த்த ரசிகர்கள் பலரும் சிவகாமியை வழக்கம்போல கழுவி ஊற்றி வருகின்றனர். சிவகாமியை போலீஸ் ஸ்டேஷன் வரைக்கும் கொண்டு போன அர்ச்சனாவுக்கு இந்த பேச்சு குதுகலத்தை தரும்தான். அங்க ஒரு மாமியார் 12th கூட படிக்கலன்னு ஹோமாக்கே போய்ட்டு வந்துருச்சு இங்க படிச்சு இருக்க கூடவே கூடாதுன்றாங்க இந்த விஜய் டிவி மாமியாருங்கள புரிஞ்சுக்கவே முடியலப்பா என்று ஒருவர் கூறியுள்ளார்.
அவர் சொல்வது உண்மைதான் இந்த சீரியல்களுக்கு மத்தியில் கல்வி மாட்டிக்கொண்டு பாடாய்படுகிறது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil