scorecardresearch

பாரதிக்கு அவார்டு… வெண்பாவுக்கு செக்… என்ன திடீர்னு இப்படி டவிஸ்ட் வச்சிட்டீங்க

Tamil Serial Update : இருமுறை வீட்டிற்கு தெரியாமல் அவளை திருமணம் செய்துகொள்ள முயன்ற பாரதி இப்போது வெண்பாவிடம் ஏன் விலகி செல்கிறார் என்று தெரியவில்லை.

பாரதிக்கு அவார்டு… வெண்பாவுக்கு செக்… என்ன திடீர்னு இப்படி டவிஸ்ட் வச்சிட்டீங்க

Bharathi Kannamma Serial Rating Update : மனிதநேய மருத்துவரா அப்படி என்ன சாதனை பண்ணீட்டீங்க.. நீங்க ஹாஸ்பிட்டலுககு போன மாதிரியே தெரியலையே சார் ஹேமா ஸ்கூல் கண்ணம்மாகூட சண்டை, வெண்பா கூட நட்பு, வீட்ல இருக்கவங்க கூட பிரச்சினை கொஞ்சகாலமாகவே இதுதானே உங்க வாழ்க்கையாக இருக்கு.. அதுக்குள்ள இது எப்படி சாத்தியம் என்று கேட்கத்தான் தோன்றுகிறது.

ஆனால் சீரியலை சீரியலாக மட்டும் பார்க்க வேண்டும் உள்ளே சென்று ஆராய கூடாது என்று பலரும் சொல்வது உண்டு. இருந்தாலும் நமக்கு தோன்றத கேட்டுதானே ஆகனும். டாக்டருக்கு படித்திருந்தாலும், சொந்தமான முடிவு எடுக்க தெரியாமல் அடுத்தவர் செய்த சூழுச்சியில் வாழக்கையை கெடுத்துக்கொண்டவர் தான பாரதி. இப்போ அவரும் நிம்மதியாக இல்லை அவரை நம்பி வந்த கண்ணம்மாவும் நிம்மதியாக இல்லை.

இப்படி சென்றுகொண்டிருக்கும் இந்த வாழ்க்கையில் தனது அப்பா பாரதி தான் என்று லட்சுமி தெரிந்துகொண்டார். ஆனால் நம்மோடு இருப்பர் நமது மகள் தான் என்பதை பாரதி எப்போது உணரப்போகிறார் என்பது மில்லியன் டாலர் கேள்வி. இந்த சீரீரியலை தொடர்ந்து பார்க்கும் ரசிகர்களிடம கேட்டால் கூட இதற்கு எப்போதும் பதில் தெரியாது ஏனென்றால், பாரதியும் கண்ணம்மாவும் இதில் உண்மை என்ன என்பதை கண்டுபிடிக்க ஒரு முயற்சியும் செய்யவே இல்லையே.

பொதுவாக சீரியலில் ஒரு வேலை செய்ய தொடங்கினால் அதை பல எபிசோடுகள் இழுத்துச்செல்வது வழக்கமாக நடக்கும் ஒன்று. ஆனால் இந்த சீரியல் ஆயிரம் எபிசோடுகளை நெருங்கி வந்தாலும் இன்னும் இவர்கள் இருவரும் உண்மையை தெரிந்துகொள்ள முயற்சி செய்யாமல் சண்டையே போட்டுக்கொண்டிருந்தால் எப்படி? ஒவ்வொரு முறையும் தான் தவறு செய்யவில்லை என்று பாரதியிடம் கண்ணம்மா சொன்னாலும், பாரதி மனதில் இருப்பது சந்தேகம் அதற்கு தகுந்த ஆதாரம் வேண்டும் என்று  கண்ணம்மாவுக்கு ஏன் தெரியவில்லை.

இதற்கிடையே கண்ணம்மாவின் குழந்தை என்று தெரிந்தும் லட்சுமியிடம் நெருக்கம் காட்டுகிறார் பாரதி. இப்போது லட்சுமி ஹேமா இருவரும் ஒன்றாக பாரதியின் பிள்ளைகள் என்று வெளியுலகின் தெரியவில்லை என்றாலும், பாரதியின் குடும்பத்திற்கு நன்றாக தெரியும். ஆனாலும் பாரதி கண்ணம்மாவை சேர்த்து வைக்க அவர்கள் கூட ஒரு முயற்சியும் செய்யவில்லை.

கண்ணம்மா தான் தவறு செய்யவில்லை என்று பாரதியிடம் சொல்வதும், அதற்கு பாரதி அவளை கண்டமேனிக்கு திட்டுவதும். அதன்பிறகு அவளை சௌந்தர்யா சமாதானப்படுத்துவதும் இன்னும எத்தனை நாளைக்குத்தான் இதே சீசன் வரும் என்று தெரியவில்லை.இதற்கிடையே வெண்பா தனது குடும்பத்திற்கு துரோகம் செய்தவள் என்று தெரிந்தும் அவளுடன் நெருங்கம் காட்டி வந்த பாரதிக்கு இப்போது என்ன ஆயிற்று.

வெண்பாவை கண்டாலே கடுப்பாகிறார். ஏற்கனவே இருமுறை வீட்டிற்கு தெரியாமல் அவளை திருமணம் செய்துகொள்ள முயன்ற பாரதி இப்போது வெண்பாவிடம் ஏன் விலகி செல்கிறார் என்று தெரியவில்லை. பாரதியின் ஒட்டுமொத்த குடும்பத்தையும் ஆட்டி வைத்த வெண்பாவை இப்போது அவரது அம்மா ஆட்டி வைக்கிறார். முன்னாள் நடிகை ரேகா தற்போது வெண்பாவின் அம்மாவாக வந்துள்ளார். வெண்பாவை தன் கட்டுக்குள் வைக்க அவர் வேலையை செய்துகொண்டிருக்கிறார்.

இதற்கிடையே டாக்டர் பாரதிக்கு மனிதநேய மருத்துவர் விருது வழங்கப்படுகிறது. இதை தனது மகள் ஹேமாவுக்கு அர்ப்பணிப்பதாக சொல்லும் பாரதி லட்சுமி ஹேமா இருவருக்கும் சால்வை போர்த்தி அவார்டை கொடுக்கிறார். இந்த பக்கம் வெண்பாவை தண்ணீர் ஊற்றி எழுப்பும் அவளது அம்மா பாரதிக்கு அவார்டு கொடுக்கராங்க நீ என்ன தூங்கிக்கிட்டு இருக்க என்று சொல்ல அவார்டா என்று வெண்பா யோசிக்கிறாள்

அவனை லவ் பண்ரேனு சொல்ற இது கூட தெரியாதா உனக்கு ஒழுங்க அவனை மறந்துட்டு நான் சொல்ற மாப்பிள்ளையை கல்யாணம் பண்ணிக்கோ என்று சொல்ல அதற்கு வெண்பா முடியாதும்மா என்று சொல்கிறாள். ஆனால் அவரது அம்மாவோ நான் சொன்னா சொன்னதுதான் என்று சொல்லிவிட்டு செல்கிறார் அத்துடன் ப்ரமோ முடிவடைகிறது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil “

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Tamil App.

Web Title: Tamil serial rating updte with promo for vijay tv bharathi kannamma serial