Tamil Serial Baakiyalakshmi Rating Update : என்ன கோபி நேத்து நைட் என்ன நடந்துச்சுனு உங்களுக்கு ஞாபகமே இல்லையா எழில் கூட சாஃப்ட்டா பேசுறீங்க…. பாக்யாகிட்ட ப்ளேட்ட திருப்பி போடுறீங்க… அதை விட ஹைலைட் பாக்யாதான் என் வைஃப்னு சொல்லிட்டு திரும்பவும் ராதிகா வீட்டுக்கே வந்துருக்கீங்களே செம தில்லுதான்.
பாக்யலட்சுமி விஜய் டிவியின் முக்கிய சீரியல். கடந்த சில மாதங்களாக ரசிகர்களின் பொறுமையை சோதித்த சீரியல். ஆனா அதற்கு நேர்மாறாக தற்போது பரபரப்பான திருப்பங்களுடன் அரங்கேறி வருகிறது. பாக்யாவுக்கு தெரியாமல் ராதிகாவை திருமணம் செய்துகோள்ள நினைக்கும் கோபி, இப்போது வசமா மாட்டிக்கொண்டார்.
குடி போதையில் ராதிகா வீட்டுக்கு போய் இதுதான் என் வைஃப், இனியாதான் என் பொண்ணு, செழியனும், எழிலும் என் பசங்க என்று சொல்லிவிட்டார். தப்பு பயபுள்ள போதையில உளறிவிட்டார். இப்போது போதை தெளிந்துவிட்டது. ஆனால் நேற்று இரவு என்ன நடந்தது என்று கோபிக்கே மறந்துவிட்டது.
இப்படி இருக்கும்போது கோபி நைட் போதையில் உளறியபோது உனக்காக என் குடும்பத்தையே விட்டுவிட்டு வருகிறேன்னு சொன்னேன் என்று சொல்வார். அப்போது பக்கத்தில் இருக்கும் பாக்யா அதிர்ச்சியடைவார். ஆனால் காலையில் போதை தெளிந்து கோபி பாக்யாவிடம் பேசும்போது நைட் அதிர்ச்சியடைந்ததற்கான எந்த அறிகுறியுமே இல்லையே.
இப்போ சீரியல் போற போக்கை பார்த்தால், ராதிகாவுக்காக பாக்யா தனது கணவரையே விட்டுக்கொடுத்துவிடுவாரோ என்ற எண்ணம் தோன்றுகிறது. கணவர் எந்த தப்பும் செய்யமாட்டார் என்ற எண்ணம் மனைவிக்கு இருக்கலாம். ஆனால் அவர் உளறியது உண்மைய என்பதை கண்டுபிக்கவும் இல்லை. அவர் அப்படி சொல்ல காரணம் என்ன என்பதையும் யோசிக்கவில்லை
அப்புறம் எதுக்குமா கோபி அப்படி சொல்லும்போது அதிர்ச்சி ஆனீங்க… இவங்க இப்படினா எழில் அதுக்கு மேல தேவையே இல்லாம பல முறை அப்பாவிடம் கோவப்பட்டு பேசும் எழில் இப்போது அப்பாவுக்கே அட்வைஸ் பண்ண கோபியும சாரிடா என்று சொல்லி சமரசம் செய்கிறார். ஒட்டுமொத்த குடும்பமும் கோபி வேறு திருமணம் செய்துகொண்டால் பரவாயில்லை போல… இதற்கு எதிர்ப்பு தெரிவித்த ஒருவர் மட்டும் பக்கவாதத்தில் படுத்துவி்ட்டார் பாவம்.
இதெல்லாம் எங்கு போய் முடியுமோ என்று யோசித்தால், டக்குனு கோபி ராதிகா வீட்டில் நிற்கிறார். குடிபோதையில் என்ன நடந்தது என்று கோபிக்கு நினைவில்லை. ஆனால் ராதிகாவுக்கு நல்ல நினைவு இருக்கிறது. அவரும் எங்கே வந்தீங்க இந்த வீட்டிறகு வர எப்படி உங்களுக்கு மனசு வருது என்று கேட்க கோபி அதிர்ச்சியில் உறைகிறார்.
எப்படியும் கோபி ராதிகாவை விடப்போவதில்லை. ராதிகாவும் கோபியை விடப்போவதில்லை. பாக்யா கணவனை கேள்வி கேட்க போவதில்லை இப்படி இந்த சீரியலில் இல்லை என்ற சொல்தான் அதிகம் பயன்படுத்தும் வகையில் திரைக்கதை உள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“