உண்மையை உடைத்த முல்லை... சோகத்தில் மூழ்கிய பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பம்

Tamil Serial Rating Update : எத்தனை கவலைகள் வந்தாலும் கணவன் துணை நின்றால் அதற்கு ஈடாக வேறெதுவும் இல்லை

Tamil Serial Rating Update : எத்தனை கவலைகள் வந்தாலும் கணவன் துணை நின்றால் அதற்கு ஈடாக வேறெதுவும் இல்லை

author-image
D. Elayaraja
New Update
உண்மையை உடைத்த முல்லை... சோகத்தில் மூழ்கிய பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பம்

Tamil Serial Pandian Stores Rating Update : இப்போதான் ஒரு பிரச்சினை முடிந்து கொஞ்சம் சந்தோஷம் கிடைச்சிது அதுக்குள்ள முல்லைக்கு குழந்தை பிறக்காதுனு சொல்லி ஒரு குண்டு போட்டீங்களே சார் என்று அனைவரையும் ஃபீல் பண்ண வைத்தது தான் பாண்டியன் ஸ்டோர்ஸ்.

Advertisment

விஜய் டிவியின் அதிக ரசிகர்கள் பட்டாளம் கொண்ட சீரியல்கள் பட்டியலில் கண்டிப்பாக பாண்டியன் ஸ்டோர்ஸ்க்கு முதலிடம் உண்டு. அந்த அளவிற்கு விறுவிறுப்பாக அதே சமயம் பாசம் நிறைந்த வகையில் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ள இந்த சீரியலில் சகோதரத்துவம் கூட்டுக்குடும்பத்தின் அவசியம் விட்டுக்கொடுக்கும் மனப்பான்மை உள்ளிட்ட பல இன்றியமையாத தேவைகளை மையபபடுத்தி திரைக்கதை அமைக்கப்பட்டடுள்ளது.

கடந்த சில தினங்களுக்கு முன்பு இவர்கள் புதிதாக கட்டிய கடைக்கு பிரச்சினை வந்தது போது சீரியல் சற்று சோகமாகவும் அதேசமயம், இந்த நிலை சீக்கிரம் மாற வேண்டும் என்றும் ரசிகர்கள் யோசித்துக் கொண்டிருந்தனர். அதேபோல் அந்த நிலையும் மாறி பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தினர் ஹேப்பியின் உச்சத்தில் இருந்தனர். அதில் கடந்த வாரம் ஜீவாவின் மாமனார் ஜனார்த்தனுக்கு ஹார்டடாக் என்று சொல்லி ஜீவா அவரது கடையை பார்க்க சென்றுவிட்டார்.

இதை எண்ணி அவர் ஃபீல் பண்ண ஆனால் வீட்டில் இருந்தவர்கள் அவரது ஃபீலிங்கை புரிந்துகொள்ளாமல் இருந்தது ரசிகர்களை கடுப்பாக்கியது. ஆனால் இப்போது வெளியாகியுள்ள ப்ரமோ ரசிகர்களை சோகக்கடலில் மூழ்கடித்துள்ளது என்றுதான் சொல்ல வேண்டும். முல்லைக்கு குழந்தை பிறக்காது என்று என்று தெரிந்துகொண்ட கதிர் அந்த ரிப்போர்ட்டை மறைத்து வைக்க அதை கண்டுபிடித்து டாக்டரிடம் எடுத்துச்செல்கிறாள் முல்லை.

Advertisment
Advertisements

அந்த ரிப்போர்ட்டை பார்த்த டாக்டர் உண்மையை முல்லையிடம் சொல்ல, ரிப்போர்ட்டை காணவில்லை என அதிர்ச்சியாகும் கதிர் தனத்திடம் உண்மையை சொல்ல அனைவரும் சோகமாகின்றனர். இதற்கிடையே வீ்ட்டிற்கு வராத முல்லையை கதிர் ஊர்மழுவதும் தேடிக்கொண்டிருக்க அவர் ஒரு கோவிலில் இருக்கிறாள் அவரை கதிர் வீட்டுக்கு அழைக்கும்போது என்ட எல்லாத்தையும் மறைச்சிட்டீங்களே என்று சொல்கிறாள்.

மேலும் எனக்குதான் குழந்தை பிறக்காதே இனிமே நான் எதுக்கு உங்களுக்கு என்று கேட்க, உடனே கதிர் என்னைபத்தி யோசிக்க மாட்டியா எனக்கு நீதான் முக்கியம் என்று அவரை வீட்டுக்கு அழைத்துச்செல்கிறான் வீட்டில் முருகனிடம், உண்மையை சொல்லி அழும் முல்லக்கு அனைவரும் ஆறுதல் சொல்கின்றனர் அத்துடன் ப்ரமோ முடிவடைகிறது.

இந்த ப்ரமோவைபார்த்த ரசிகர்கள் பலரும், பார்த்ததும் கண்ணீர் வர வைக்கிறது இந்த ப்ரமோ என்று கூறியுள்ளனர். அதில் ஒரு ரசிகர் எத்தனை கவலைகள் வந்தாலும் கணவன் துணை நின்றால் அதற்கு ஈடாக வேறெதுவும் இல்லை என்று கூறியுள்ளார். மேலும் ஒரு ரசிகர் எப்படியும் சீரியல் முடியுறதுக்குள்ள முல்லைக்கு குழந்தை பிறந்திடும் என்று கூறியுள்ளார். இந்த நேரத்தில் சித்து இல்லாதது மிகவும் கண்கலங்க வைக்கிறது என்று ஒருவர் கூறியுள்ளார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil “

Pandian Stores Serial Vijay Tv Serial 2

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: