scorecardresearch

பாரதியை யோசிக்க வைத்த லட்சுமி… உண்மை தெரிந்துவிடுமோ?

Tamil Serial Update : உண்மையை சொல்லிவிட்டாலும் சீரியலின் கான்செப்ட் மாறி சற்று விறுவிறுப்பாக செல்லும். ஆனால் அதற்கொல்லாம் இயக்குநர் சரிப்பட்டு வரமாட்டார்.

Bharathi Kannamma Serial Rating Update With promo : என்ன டாக்டர் அப்பா ஃபேன் கீழ விழுந்ததும் மலரும் நினைவுகளுக்கு போய்ட்டீங்களாக என்று கேட்பது போன்று பாரதி கண்ணம்மாவின் இன்றையை எபிசோடு கவனம் ஈர்த்துள்ளது.

விஜய்டிவியின் ஹிட் சீரியல்களில் ஒன்று பாரதி கண்ணம்மா. கிட்டத்தட்ட 1000 எபிசோடுகளை நெருங்கி வரும் இந்த சீரியல், முதலில் இருந்து தற்போதுவரை ஒரு சின்ன உணமையை வைத்துதான் திரைக்கதை அமைக்கப்பட்டு வருகிறது. அந்த உண்மையை சொல்லிவிட்டாலும் சீரியலின் கான்செப்ட் மாறி சற்று விறுவிறுப்பாக செல்லும். ஆனால் அதற்கொல்லாம் இயக்குநர் சரிப்பட்டு வரமாட்டார்.

தனது மனைவி தனக்கு துரோகம் செய்துவிட்டாள் என்று தனது தோழி வெண்பாவின் பேச்சை கேட்டு பாரதி சந்தேகப்பட அவன் முன் வாழ்ந்து காட்டுகிறேன் என்று சொல்லி வீட்டை விட்டு வெளியேறுகிறாள் கண்ணம்மா. இப்படி சவால் விட்ட கண்ணம்மா பாரதி முன்பு வாழ்ந்து காட்டினாளா இல்லையா என்பது ஒருபுறம் இருந்தாலும் தான் தவறு செய்யாதவள் என்பதை நிரூபித்தாளா என்று கேட்டாள் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும்.

மாறாக ஒவ்வொரு முறையும் டி.என்.ஏ டெஸ்ட் எடுக்க பாரதியை அழைக்கும்போது அவன் வரமாட்டேன் என்று சொல்கிறான். அவன் அப்படிதான் சொல்வான் என்று தெரிந்தும் மீண்டும் மீண்டும் அவனை டெஸ்ட் எடுக்க அழைப்பதில் என்ன லாஜிக் இருக்கிறது. மாறாக உண்மை என்ன வென்று கண்டுபிடிக்க கண்ணம்மா முயற்சி செய்யாமல், பாரதியிடம் தான் குற்றமற்றவள் என்பதை எப்படி நிரூபிக்க முடியும்?

இன்னொரு பக்கம் பாரதிக்கு கண்ணம்மா மீது உள்ள சந்தேகமோ தெளிவாகவில்லை. அதற்குள் லட்சுமிக்கு அப்பா வேண்டும் என்று கெஞ்சுகிறாள் கண்ணம்மா. நீங்கள் தப்பு செய்யவில்லை என்று பாரதிக்கு புரிய வைத்தாலே போதும் அதன்பிறகு நீங்களே வேண்டாம் என்றாலும் அவன் விடமாட்டான். அதை விட்டுவிட்டு மீண்டும் மீண்டும் பாரதியிடம் போய் கெஞ்சுவது சீரியல் மீதாக எதிர்பார்ப்பை குறைக்கிறது. எதாவது புதுசா பண்ணுங்க டைரக்டர் சார்.

இந்நிலையில், இன்றைய எபிசோட்டில், லட்சுமி சாப்பிடும்போது விக்குகிறார். அவருக்கு தண்ணீர் கொடுக்க பாரதி எழுந்திருக்கும்போது மேலே சுற்றிக்கொண்டிருந்த ஃபேன் கீழே விழுகிறது இதனால அதிர்ச்சியாகும் பாரதி அப்படியே நிற்க, வீட்டில் உள்ள அனைவரும் வருகினறனர். அப்போது ஹேமா சிறு குழந்தையாக இருக்கும்போது அவர் அழுகிறார். அப்போது பாரதி எழுந்திருக்கும்போது ஃபேன் கீழே விழுகிறது.

இப்போது அதை நினைத்து பார்க்கும் பாரதி, ஹேமா போலவே லட்சுமியும் பாசமாக பார்த்துக்கொள்ள வேண்டும் என்று நினைக்கப்போறாரா அல்லது கண்ணம்மா இத்தனை முறை நம்மிட்ம் சொல்கிறாளே என்று உண்மையை கண்டறிய போகிறாரா, அல்லது லட்சுமி கண்ணம்மாவின் பொண்ணு அவருக்காக எழும்போது ஃபேன் விழுந்தது. முன்பு ஹேமாவுக்காக எழும்போதும் ஃபேன் விழுந்தது. இவர்கள் இருவருக்கும் என்ன தொடர்பு என்று யோசிக்க போகிறாரா என்ற எதிர்பார்ப்புதான் நம்பிடம் இருக்கிறது.

ஆனால் நாம் மேலே சொன்ன எதும் நடக்க வாய்ப்பில்லை. இயக்குநர் நமது பொருமையை சோதிக்க எதாவது புது ஐடியா வைத்திருப்பார் பொறுத்திருந்து பார்ப்போம்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Tamil App.

Web Title: Tamil serial rating with promo in bharathi kannamma serial tamil