Tamil Serial Rating Update : தற்போதைய காலகட்டத்தில் சீரியல் ரசிகர்களும் அதில் நடித்து வரும் நடிகர் மற்றும் நடிகைகளே மக்கள் மத்தியில அதிக வரவேற்பைபெற்று வருகினறனர். ஆனால் சீரியல்கள் அனைத்தும் ரசிகர்கள் மனதை கவர்ந்ததா என்று கேட்டால் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். அதேபோல் எத்த்தனை சீரியல்கள் ஒளிபரப்பானாலும் வார இறுதியில் வெளியாகும் டிஆர்பி ரேட்ங்கில் முதல் 5 இடங்களை பெறும் சீரியல்களே அதிக கவனம் பெறுகின்றன. அதற்காக மற்ற சீரியல்கள் எல்லாம் சரியாக போகவில்லை என்று அர்த்தம் அல்ல.
சில சீரியல்கள் அதிகப்படியான ரசிகர்களின் மனதை கவர தவறி விடுகின்றன என்று கூறலாம். இதில் சீரியல்களின் அன்றைய எபிசோடு குறித்து எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் வகையில், ப்ரமோ வீடியோக்கள் வெளியிடப்படும். அந்த வகையில் இன்று வெளியிடப்பட்டுள்ள ப்ரமோ வீடியோக்களில் எந்த சீரியல் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது என்பதை பார்போம்.
பாண்டியன் ஸ்டோர்ஸ்
இந்த ப்ரமோவை பார்த்தரசிகர் ஒருவர் எந்த ஒரு சீரியலிலும் இப்படி ஒரு சோகத்தை பார்க்கவில்லை என்று கூறியுள்ளார். சூப்பர் நடிப்பு அப்படியோ கிராத்துல நடக்குற உண்மையான சடங்கு மாதிரியே இருக்கு என்று கூறியுள்ளார். மற்றொரு ரசிகர் பாவம் அந்த பாட்டி என்றும், இன்ட்ரஸ்டிங்கான சீரியல் என்று மற்றொரு ரசிகரும் பதிவிட்டுள்ளனர். மேலும் ரசிகர்கள் பலரும் கண்ணீரை வரவழைக்கு காடசிகள் என்று பதிவிட்டுள்ளனர்.
பாரதி கண்ணம்மா
இந்த ப்ரமோவை பார்த்த ரசிகர் ஒருவர் சௌநதர்யாவை மோசமான மாமியார் என்று கூறியுள்ளார். மற்றொரு ரசிகர் சௌந்தர்யா தப்பு கணக்கு போட்டுள்ளார் என்று கூறியுள்ளார். இப்போ சொல்லவேண்டிதான ஹேமாதான் உன் பொண்ணுனு ஏன் மறைக்கனும் என்று கேட்டுள்ளார். மேலும் ரசிகர்கள் பலரும் இந்த கேள்விக்காவது சீக்கிரமா விடை சொல்லுங்க என்று பதிவிட்டுள்ளனர்.
பாக்யலட்சுமி
இந்த ப்ரமோவை பார்த்த ரசிகர் ஒருவர் பாட்டிக்கு என்ன ஒரு அன்பு ஜெனி மேல என்று கூறியுள்ளார். மற்றொரு ரசிகர் ஒவ்வொரு வீட்டிலும் கர்ப்பிணி பெண்களை இப்படித்தான் பார்த்துக்கொள்வார்கள் என்று கூறியுள்ளார். மேலும ரசிகர்கள் பலரும் பாட்டி கேரக்டரை பாராட்டும் வகையில் கருத்துக்களை பதிவிட்டுள்ளனர்.
ராஜா ராணி 2
இந்த ப்ரமோவை பார்த்த ரசிகர் ஒருவர் இப்ப கூட சிவகாமி சந்தியா பற்றி கண்டுக்கவே இல்லையே என்று பதிவிட்டுள்ளார். மற்றொரு ரசிகர் இருக்கும்போது விட்டுவிட்டு இப்போ இழுது புலம்புவது தான் எல்லா நேரத்திலேயும் நடக்குது என்று கூறியுள்ளார். மற்றொரு ரசிகர் கவலைப்பட வேண்டும் ரெண்டு பேரும் திரும்பி வருவாங்க என்று கூறியுள்ளார். மேலும் ரசிகர்கள் பலரும் சிவகாமி ஓவர் ஆக்டிங் என்று கூறியுள்ளனர்.
ரோஜா
இந்த ப்ரமோவை பார்த்த ரசிகர் ஒருவர் ரோஜாவும் சென்பகம்மும் ஒன்று சேர்ந்ததில் யாருக்கு எல்லாம் மிக்க மகிழ்ச்சி என்று பதிவிட்டுள்ளார். ரோஜா. ஆனந்தமாய். தன். அம்மா. செண்பகத்தின். கையை பிடித்துக்கொண்டு. வீட்டுக்கு. வரும். காட்சி. அருமை பிடிச்சிருக்கு என கூறியுள்ளார். கூடிய சிகரத்தில செண்பகம்க்கு பழசு எல்லாம் ஞாபகம் வரணும் என ஒரு ரசிகர் கூறியுள்ளார். எங்களுக்கு இது போதும் . இந்த எபிசோடு சூப்பர் !! இனி என்னவேன நடக்கட்டும் . எவ்வளவு நாள் இழுத்து போட்டலும் சந்தோசமா இருப்போம் என ஒரு ரசிகர் கூறியுள்ளார்.
இந்த கருத்துக்களை வைத்து பார்க்கும்போது ரோஜா சீரியலுக்கே அதிக எதிர்பார்ப்பு உள்ளது என்று கூறலாம். செண்பகம் ரோஜாவுடன் சேர்ந்த்தே இதற்கு முக்கிய காரணம். மற்றபடி அனைத்து சீரியல்களும் அந்தந்த ரசிகர்களை திருப்திப்படுத்தும் என்று கூறலாம்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil