Advertisment

சந்தோஷத்தில் மிதக்கும் பாண்டியன் ஸ்டோர்ஸ் : அடுத்த பிரச்சினைக்கு அறிகுறியா?

Tamil Serial Update : பலரும் இவர்கள் இப்படி சந்தோஷமாக இருந்தாலே அடுத்து வீட்ல எதாவது ஒரு பெரிய பூகம்பம் வெடிக்குமே என்று கூறி வருகின்றனர்.

author-image
D. Elayaraja
New Update
சந்தோஷத்தில் மிதக்கும் பாண்டியன் ஸ்டோர்ஸ் : அடுத்த பிரச்சினைக்கு அறிகுறியா?

Pandian Stores Promo Update : பிரச்சினை பலவகைகளில் வந்தாலும் அந்த அந்த பிரச்சினை முடியும்போது வீட்டில் உள்ள அனைவருக்கும் ஒரு சந்தோஷம் கிடைக்கும் பாருங்க... அதை வார்த்தையால் விவரிக்க முடியாது.... அந்த வகயைில்தான் உள்ளது பாண்டியன் ஸ்டோர்ஸ்.

Advertisment

ஒரு மளிகை கடை வைத்திருந்த பாண்டியன் ஸ்டோர்ஸ் பிரதர்ஸ் இப்போ ஒரு சூப்பர் மார்க்கெட் கட்டிவிட்டார்கள். இந்த கட்டிடம் கட்டும்போதே பல பிரச்சினைகள் வந்தது. ஆனாலும் சமாளித்து ஒரு வழியாக கட்டி முடித்துவிட்ட பாண்டியன் ஸ்டோர்ஸ் பிரதர்ஸ்க்கு பழய சண்டை மூலம் புது பிரச்சினை கிளமபியது.

பாண்டியன் ஸ்டோர்ஸ் கடைக்குட்டி கண்ணனை அடித்த ஒரு ரவுடியை கதிர் அடித்துவிட இப்போது அவன் ரூபத்தில் பிரச்சனை வந்துவிட்டது முன்சிபாலிட்டியில் அதிகாரியாக இருக்கும் தனது அப்பாவிடம் சொல்லி பாணடியன் சூப்பர் ஸ்டோர்ஸை மூட வைத்துவிட்டான் அந்த ரவுடி. ஆனால் இந்த காரணம் தெரியாமல் அலைமோதிய குடும்பத்தினருக்கு கண்ணன் மூலமாகவே உண்மை தெரியவந்தது.

அதன்பிறகு கண்ணன் கதிர் இருவரும் அந்த ரவுடியை தேடி போக, மூர்த்தி ஜீவா இருவரும் முன்சிபாலிட்டி ஆபீஸ் முன்பு தர்ணாவில் அமர்ந்துவிட்டனர். இந்த விஷயம் அனைவருக்கும் தெரியவர, அதிகாரி முன்வந்து கடைக்கு வைத்த சீலை எடுத்தவிடடார். இப்போது கடை திறப்புவிழா கலைகட்டியுள்ளது. அனைவரும் கடை திறப்பு விழாவிற்கு தயாராகிக்கொண்டிருக்கின்றனர்.

இதில் பழைய நோட்டை பார்த்து டைலரிங் கற்றுக்கொண்ட முல்லை ஒரே ராத்திரியில் 3 ஜாக்கெட ஒரு சட்டை என்று தைத்து உலகமகா டைலராக உருவெடுத்தவிட்டார். அதெல்லாம் வே ரகம்... அதுபோக இப்போது கதிர் புதுசா எதையோ பண்ணி வச்சிருக்காரு அது என்னான... பங்ஷனுக்கு போறதுக்காக முல்லைக்கு பூ வாங்கிட்டு வருகிறார் கதிர். ஆனா எல்லாரும் இருந்தால அண்ணிக்கிட்ட கொடுத்து இது உங்க எல்லாருக்கும்தான் என்று சொல்லிவிடுகிறார்.

அதை வாங்கி முல்லைக்கு கொடுத்துவிட்டு தனம் உள்ளே செல்கிறார் அப்போது அப்போது பூ எல்லாம் உனக்குதான் வாங்கிட்டு வந்தேன் என்று கதிர் சொல்ல முல்லை தனக்கு பூ வைத்துவிடும்படி சொல்கிறாள். அப்போது கதிர் பூ வைத்துவிட அதை மீனா பார்த்தவிடுகிறார். நீங்கள் பூ வாங்கிட்டு வரும்போதே இப்படி ஏதாவது நடக்குமு் என்று எதிர்பார்த்தேன் என்று சொல்லிவிட்டு என் ஆளு இந்நேரம் எந்த தெருவுல கூவிக்கிட்டு இருக்கானோ என்று சொல்கிறாள். அப்போது கயல் அழ நான் போறேன் நீங்கள் கண்டினியூ பண்ணுங்க என்று சொல்லிவிட்டு செல்கிறாள்.

இந்த ப்ரமோவை பார்த்த ரசிகர்கள் பலரும் மீனாவின் எதார்த்த நடிப்பு சூப்பர் என்று கூறியுள்ளனர். சில ரசிகர்கள் கதிர் முல்லைக்கு ரொமான்ஸ் வொர்க்அவுட் ஆகிவிட்டது என்று சொல்கின்றன. மேலும் பலரும் இவர்கள் இப்படி சந்தோஷமாக இருந்தாலே அடுத்து வீட்ல எதாவது ஒரு பெரிய பூகம்பம் வெடிக்குமே என்று கூறி வருகின்றனர். தற்போது இந்த ப்ரமோ வைரலாகி வருகிறது.  

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Tamil Serial Pandian Stores Tamil Serial Update
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment