Advertisment

முடிவுக்கு வரும் அன்பே வா சீரியல்... அதற்குள் ஏன் இப்படி? ரசிகர்கள் சோகம்

விராட் டெல்னா டேவிஸ் நாயகன் நாயகியாக நடித்து வரும் இந்த சீரியலில் பூஜா, ஸ்வாதி, தாரா உள்ளிட்ட பலர் முக்கிய கேரக்டரில் நடித்து வருகின்றனர்.

author-image
WebDesk
Jun 18, 2023 18:18 IST
Anbe Va Serial

அன்பே வா சீரியல்

சன் டிவியின் அன்பே வா சீரியல் விரைவில் முடிய உள்ளதாக வெளியாகியுள்ள தகவல் ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், நல்லாத்தேன போய்க்கிட்டு இருக்கு என்று கூறி வருகின்றனர்.

Advertisment

திரைப்படங்களை விட சின்னத்திரை சீரியல்கள் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. இதன் காரணமாக திரைக்கதை நன்றாக இருக்கும் சீரியல்களின் டிஆர்பி ரேட்டிங்கும் அதிகரித்து வருகிறது. இதில் முக்கிய இடம் பிடித்துள்ளது சன் டி.வி. சன்டிவி சீரியல்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில், பல சீரியல்கள் கவனம் ஈர்த்து வருகிறது.

அந்த வகையில் சன் டிவியின் அன்பே வா சீரியலுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. விராட் டெல்னா டேவிஸ் நாயகன் நாயகியாக நடித்து வரும் இந்த சீரியலில் பூஜா, ஸ்வாதி, தாரா உள்ளிட்ட பலர் முக்கிய கேரக்டரில் நடித்து வருகின்றனர். இந்த சீரியலில் வில்லியாக நடித்து வரும் மகாலட்சுமி தயாரிப்பாளர் ரவீந்தரை திருமணம் செய்துகொண்டார்.

அன்பே வா சீரியலில் மகாலட்சுமியின் வில்லத்தனம் வரவேற்பை பெற்று வரும் நிலையில், இவருக்காகவே இந்த சீரியலின் டிஆர்பி ரேட்டிங் அதிகரித்து வருகிறது. அதோடு மட்டுமல்லாமல் நாயகி பூமிகாவுக்கும் ரசிகர்கள் ஆதரவு அளித்து வருகின்றனர். இவ்வளவு பாசிட்டீவ் இருந்தாலும் தற்போது அன்பே வா சீரியல் குறித்து வெளியாகியுள்ள தகவல் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளர்.

இதில் அன்பே வா சீரியல் விரைவில் முடிவுக்கு வர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சீரியல் நன்றாகத்தானே போய்கிட்டு இருக்குஅதற்குள் ஏன் நிறுத்துறீங்க என்று கேட்க தொடங்கிவிட்டனர்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

#Anbe Vaa Serial
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment