scorecardresearch

சூர்யா படத்திற்கும் இந்த சீரியலுக்கும் என்ன ஒரு ஒற்றுமை… நோட் பண்ணீங்களா?

Tamil Serial Update : வெற்றி அபி இருவருக்கும் தனியாக குடும்பம் உள்ளது. மற்றபடி காட்சி அமைப்புகள்தான் வேறே தவிர கதைப்படி அனைத்தும் ஒன்றுதான்.

thendral vanthu ennai thodum

Tamil Serial Rating Update With promo : சீரியல் பேருல மட்டும்தான் தென்றல் இருக்கு ஆனா எபிசோடு ஃபுல்லா புயல்தான் வீசிக்கிட்டு இருக்கு இதுக்கு நீங்க புயல் வந்து என்னை தொடும்னு வச்சிருக்கலாமே என்று கேட்க தோன்றுகிறது விஜய் டிவி சீரியலின் கதை.

சீரியலுக்கு பெயர்போன விஜய் டிவியில் பல சீரியல்கள் திரைப்படத்தின் பெயர்களை பயன்படுத்தி ப்ரமோஷன் செய்து அதில் வெற்றியும் கண்டுள்ளனர். அதே சமயம் படத்தின் பெயர் இல்லாமல் வெற்றி பெற்ற சீரியலும் உண்டு. அந்த வரிசையில் தற்போது ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது தென்றல் வந்து என்னைத் தொடும் சீரியல்.

ரௌடியாக இருந்தாலும் நல்லவனாக இருக்கும் வெற்றி ஒரு சந்தர்ப்பத்தில் அபியின் கழுத்தில் வலுக்கட்டாயமாக தாலி கட்டி விடுகிறான். அதன்பிறகு அபி வெற்றியின் வீட்டிற்கு வந்து தங்கி விடுகிறாள். இவளை வீட்டை விட்டு விரட்ட வெற்றி பல வழிகளில் முயற்சி செய்கிறான். அதே சமயம் வெற்றி உட்பட அவனது குடும்பத்தினர் அனைவருக்கும் வந்த பிரச்சினைகளை தீர்த்து வருகிறார் அபி.

இந்த நிலையில், அபியை வீட்டை விட்டு வெளியேற்ற வெற்றிக்கு ஒரு சந்தர்ப்பம் கிடைக்கிறது. அபியின் அப்பாவை ரௌடிகள் கடத்திவிட, வெற்றியிடம் ஹெல்ப் கேட்கிறாள் அதற்கு வெற்றி நீ இந்த வீட்டை விட்டு வெளியே போய்விடு உங்க அப்பா நா காப்பத்துறேன் என்று சொல்ல அபி சம்மதிக்கிறாள். இப்போது வெற்றி அபியின் அப்பாவை காப்பாற்றிவிட அபி வெ்றறி வீட்டை விட்டு வெளியேறிவிட்டாள்.

இப்போது வெற்றிக்கு திருமணம் செய்து வைக்க அவனது அம்மா முடிவு செய்து அத்தை வெற்றியின் அத்தையிடம் பெண் கேட்கிறாள். அவளும் வெற்றி ரௌடிசத்தை விட்டுவிட்டு வீட்டோட மாப்பிள்ளையா வந்தால் கல்யாணத்துக்கு ஓகே என்று சொல்லிவிட வெற்றியின் அம்மாவும் அதற்கு ஒப்புக்கொள்கிறாள். ஆனால் சாப்பிடால் உண்ணா விரதம் இருந்து இதற்கு வெற்றியையும் சம்மதிக்க வைக்கிறாள்.

இதனால் இந்த திருமணம் நடைபெறுமா? அபி வெற்றி இருவரும் சேருவார்களா? அபி வீட்டில் என்ன சொல்ல போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு ஏற்படுத்தினாலும், வெற்றியின் அம்மாவின் செயல் ரசிகர்களுக்கு சற்று கடுப்பைதான் ஏற்படுத்துகிறது. அதே சமயம் இந்த சீரியலின் டைட்டிலுக்கு சினிமா படத்தின் டைட்டிலை பயன்படுத்தவில்லை என்றாலும் கூட இந்த கதை சூர்யா நடித்த ஆறு படத்தின் கதையுடன் ஒத்துபோகிறது.

ஆறு படத்தில் ரௌவுடியாக இருக்கும் சூர்யா ஒரு கட்டத்தில் த்ரிஷாவுக்கு தாலி கட்டுவது போல் செயினை போட்டுவிடுவார். அடுத்த சீனே அவர் அந்த செயினை திரும்ப வாங்கிவிட்டாலும், த்ரிஷா சூர்யா தனக்கு தாலி கட்டியதாகதான் நினைத்துக்கொள்வார். அதேபோலத்தான் இங்கு வெற்றி அபிக்கு தவிர்க்க முடியாத சூழலில் தாலி கட்டி இருந்தாலும் அபி வெற்றியை புருஷனாகதான் நினைக்கிறாள்.

அதில் சூர்யா படிக்காத ரௌடி இதில் வெற்றி படித்த ரௌடி. திரிஷா கல்லூரியின் படிக்கும் பெண். இங்கு அபி படித்து முடித்த பெண். ஆறு படத்தில் சூர்யா ஒரு கட்டத்தில் த்ரிஷாவை பிரிந்துவிடுவார். அதன்பிறகு ஒரு திருமணத்தின் சந்திக்கும்போது இருவருக்குள்ளும் ஒரு உணர்வு ஏற்படும். அதேபோல் இப்போது அபியை பிரிந்துவிட்ட வெற்றி ஒரு ஷாப்பிங் மாலில் அபியை மீண்டும் சந்திக்கிறார். அப்போது இருவருக்கும் ஒரு உணர்வு ஏற்படுகிறது.

குறிப்பாக செல்ல வேண்டும் என்றால் இந்த சந்திப்பின்போது ஆறு படத்தின் பாடலே ஒலிக்கும். இப்படி அடுக்கிக்கொண்டே போனாலும். ஆறு படத்தில் சூர்யாவுக்கும் த்ரிஷாவுக்கும் தனியாக குடும்பம் என்று எதுவும் இருக்காது. இங்கு வெற்றி அபி இருவருக்கும் தனியாக குடும்பம் உள்ளது. மற்றபடி காட்சி அமைப்புகள்தான் வேறே தவிர கதைப்படி அனைத்தும் ஒன்றுதான்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Tamil App.

Web Title: Tamil serial thendral vanthu ennai thodum rating with promo