Advertisment

ஆல்யா மானஸா-வுக்கு மங்காத மவுசு: எடுத்த எடுப்பிலேயே டாப் 5-ல் நுழைந்த சன் டி.வி புதிய சீரியல்

கடந்த வாரம் வெளியான சீரியல் டிஆர்பி ரேட்டிங்கில் சன்டிவி சீரியல்கள் முதல் 5 இடங்களை பெற்றுள்ளன.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Suntv Serial

கயல எதிர்நீச்சல் இனியா

சின்னத்திரையில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. இந்த சீரியல்களின் டிஆர்பி ரேட்டிங்கை பொறுத்து சீரியல்களுக்கு எந்த அளவிற்கு ரசிகர்கள் வரவேற்பு இருக்கிறது என்பதை தெரிந்துகொள்ளலாம். அந்த வகையில் கடந்த வாரம் வெளியான சீரியல் டிஆர்பி ரேட்டிங்கில் சன்டிவி சீரியல்கள் முதல் 5 இடங்களை பெற்றுள்ளன.

Advertisment

எதிர்நீச்சல்

சன்டிவியின் முக்கிய சீரியல்களில் ஒன்று மற்றும் டிஆர்பி ரேட்டிங்கில் இதுவரை இல்லாத வகையில் 11-க்கு அதிமான புள்ளிகளை பெற்றுள்ள எதிர்நீச்சல் சீரியல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில், ஒவ்வொரு வாரமும் டிஆர்பி மற்றும் ரசிகர்கள் வரவேற்பில் புதிய சாதனை படைத்து வருகிறது. இதற்கு முக்கிய காரணம் ஆதி குணசேகரனாக வரும் மாரிமுத்து தான் என்பது குறிப்பிடத்தக்கது.

கயல்

ஜீ தமிழில் இருந்து சன்டிவிக்கு மாறிய சைத்ரா ரெட்டி நடித்து வரும் சீரியல் கயல். சகோதரர்கள் கைவிட்டாலும் ஒற்றை ஆளாக தனது குடுமபத்தை பாதுகாத்துக்கொள்ளும் ஒரு பெண்ணின் கதைதான்.

வானத்தைபோல

கிராமத்து அண்ணன் தங்கை சென்டிமெண்டடை அடிப்படையாக வைத்து திரைக்கதை அமைக்கப்பட்டுள்ள வானத்தை போல ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

இனியா

பிரபல சின்னத்திரை நடிகை ஆல்யா மானசா நடிப்பில் ஒளிபரப்பாகி வரும் சீரியல் கயல். ராஜா ராணி 2 சீரியலில் நடித்து வந்த ஆல்யா தற்போது இனியா தொடரில் நடித்து வருகிறார்.

மிஸ்டர் மனைவி

பாவன் ரவீந்திராவும், ஷாபனா நாயகியாகவுமு் நடித்து வருகின்றனர். சீரியல் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்று வருகிறது

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Suntv Serial
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment