Advertisment

முன்னேறிய எதிர்நீச்சல்... விஜய் டி.வி சீரியல்களின் நிலை என்ன? இந்த வார டி.ஆர்.பி ரேட்டிங்

சின்னத்திரை சீரியல்களில் டி.ஆர்.பி ரேட்டிங் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்

author-image
D. Elayaraja
New Update
Tamil Sertial TRP

சீரியல் டி.ஆர்.பி ரேட்டிங்

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

சின்னத்திரை சீரியல்கள் தற்போது ரசிகர்களின் இன்றியமையாத பொழுதுபோக்கு அம்சமாக மாறிவிட்டது. சீரியலுக்கு கிடைக்கும் வரவேற்ப்பின் காரணமாக, அவ்வப்போது புதிய சீரியல்கள் களமிறங்கி வருகின்றன. ஆனாலும் மக்கள் மத்தியில் சீரியல்கள் எவ்வாறு வரவேற்பை பெறுகின்றன என்பது சீரியலின் டி.ஆர்.பி ரேட்டிங்கை பொறுத்தே தீர்மானிக்கப்படுகிறது.

Advertisment

அந்த வகையில் இந்த வருடத்தின் 3-வது வாரத்தில் தமிழ் சீரியல்களின் டி.ஆர்.பி ரேட்டி பட்டியல் குறித்து பார்ப்போம்.

தனது ஒளிபரப்பை தொடங்கியதில் இருந்தே முன்னணியில் இருந்து வரும் சன்டிவியின் சிங்கப்பெண்ணே சீரியல் தவறாமல் இந்த வாரமும் 11.02 புள்ளிகளுடன் முதலிடத்தை பிடித்துள்ளது. அதேபோல் சைத்ரா ரெட்டியின் அற்புதமான நடிப்பில் ஒளிபரப்பாகி வரும் கயல் சீரியல் 10.28 புள்ளிகளுடன் 2-வது இடத்தை பிடித்துள்ளது. கடந்த வாரம் 4-வது இடத்தில் இருந்த எதிர்நீச்சல் சீரியல், இந்த வாரம், 9.19 புள்ளிகளுடன் 3-வது இடத்தை பிடித்துள்ளது,

வானத்தை போல சீரியல் 8.92 புள்ளிகளுடன் 4-வது இடத்தை பிடித்துள்ளது.  சுந்தரி பார்ட் 2 8.76 புள்ளிகளுடன் 5-வது இடத்தை பிடித்துள்ளது. விஜய் டிவியின் சிறகடிக்க ஆசை சீரியல் 8.49 புள்ளிகளுடன் 6-வது இடத்தில் உள்ளது. ஆல்யா மானசாவின் இனியா தொடர் 7.34 புள்ளிகளுடன் 7-வது இடத்தை பிடித்துள்ளது. விஜய் டிவியின் பாக்கியலட்சுமி சீரியல் 6.89 புள்ளிகளுடன் 8-வது இடத்தை பிடித்துள்ளது.

ஆனந்த ராகம் சீரயில் 6.22 புள்ளிகளுடன் 9-வது இடத்தை பிடித்துள்ளது. விஜய் டிவியின் ஆஹா கல்யாணம் சீரியல் 5.85 புள்ளிகளுடன்10-வது இடத்தை பிடித்துள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamil Serial News
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment