Tamil Serial Actress Leesha Eclairs Dance Video : தமிழகத்தில் சீரியலுக்கு பெயர்போன சன்டியில் காலை 9 மணிக்கு தொடங்கி இரவு 11 மணிவரை சீரியகளின் ஆதிக்கம் அணிவகுந்து வருகிறது. இதில் கொரோனா தொற்று காரணமாக விதிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவின் காரணமாக ஒரு சில சீரியல்கள் நிறுத்தப்பட்டது. ஆனாலும் நிறுத்தப்பட்ட சீரியல்களுக்கு பதிலாக ஹிட் ஆன பழைய சீரியல்கள் ஒளிபரப்பாகி வருகிறது. பழைய சீரியலாக இருந்தாலும், புதிய சீரியலாக இருந்தாலும் மக்களிடம் வரவேற்பு மட்டும் குறையவில்லை.
அந்தவகையில் கடந்த 2018-ம் ஆண்டு சன்டியில் தொடங்கப்பட்ட சீரியல் கண்மனி. பிரைம் டைமில் ஒளிபரப்பான இந்த சீரியலில், பூர்ணிமா பாக்யராஜ், சஞ்சீவ் முதன்மை கதாப்பாத்திரத்தில் நடித்து வந்தது.மக்களிடம் அதிக வரவேற்பை பெற்று வந்த இந்த சீரியல், கொரோனா ஊராடங்கு காரணமாக நிறுத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து சீரியல் படப்பிடிப்பு தொடங்கப்பட்டாலும், கண்மனி சீரியல் சில எபிசோடுகளுடன் முடிவுக்கு வந்தது.
இந்த சீரியலில், சஞ்சீவ்க்கு ஜோடியாக சௌந்தர்யா கதாபாத்திரத்தில் நடித்தவர் லீஷா எக்லெர்ஸ். ஆந்திராவை சேர்ந்த இவர் தமிழில் பலே வெள்ளைய தேவா, பொதுநலன் கருதி என ஒரு சில படங்களில் நடித்துள்ளார். கடந்த ஆண்டு தமிழில் வெளியான மைடியர் லிசா படத்தில், லிசா என்னும் பேயாக நடித்திருந்தார். ஆனாலும் கண்மணி சீரியல்தான் இவரை பிரபலப்படுத்தியது.
View this post on Instagram
கண்மணி சீரியலில் குடும்ப பாங்கான கதாப்பாத்தித்தில் நடித்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்த, லீஷா, தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தி வருகிறார். அந்த வகையில், இவர் உடலை குலுக்கி குலுக்கி நடனம் ஆடி வீடியோவை தற்போது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இதைக்கண்ட ரசிகர்கள் அவரின் ஆட்டத்த பார்த்து மிரண்டு போயுள்ளனர்.