Tamil Serial Actress Priyanka Nalgari With Her Mother : சன்டியில ஒளிபரப்பாகி வரும் ரோஜா சீரியலின் நாயகி பிரியங்கா தனது தாயுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
சன்டியில் பிரைம் டைமில் ஒளிபரப்பாகி வரும் சீரியல் ரோஜா. சிபு சூரியன், பிரியங்கா நல்காரி ஆகியோர் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்து வரும் இந்த சீரியலில் பழம்பெரும் நடிகை வடிவுக்கரசி முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து வருகிறார். ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வரும் இந்த சீரியல், டிஆர்பி ரேட்டிங்கில் முதல் 5 இடங்களில் ஒன்றாக இருந்து வருகிறது.
மேலும் இந்த சீரியலின் நாயகி பிரியங்கா நல்காரிக்கு ஏராளமான ரசிகர்கள் பட்டாளம் உள்ளது. சமூகவலைதளங்களில் எப்போதும் ஆக்டீவாக இருக்கும் அவர் அவ்வப்போது தனது புகைப்படங்களை இணையத்தில் பதிவிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது இவர் வெளியிட்டுள்ள புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

திரைத்துறைக்கு வரும் முன் தனது குடும்பம் ஏழ்மையான நிலையில் இருந்ததாக சமீபத்தில் ஒரு பேட்டியில் குறிப்பிட்டிருந்த பிரியங்கா நல்காரி தற்போது தனது அம்மாவுடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். தெலுங்கு திரையுலகில் குழந்தை நட்சத்திரமாக நடித்து வந்த, இவர் ரோஜா சீரியல் மூலம் தமிழில் அறிமுகமானார். மேலும ராகவா லாரன்ஸ் இயக்கத்தில் வெளியான காஞ்சனா உட்பட ஒரு சில படங்களில் நடித்துள்ள இவருக்கு தற்போது மேலும் பட வாய்ப்புகள் அதிகரித்து வருகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil