நயன்தாராவை ஓரம்கட்டிய விஜய் டிவி நடிகைகள்; ‘கண்ணம்மா’ வேற லெவல்!

சீரியல் நடிகைகள் அம்மன் வேடமிட்டு நடனமாடிய புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

விஜய் டெலிவிஷன் விருது வழங்கும் விழாவில், சீரியல் நடிகைகள் அம்மன் வேடமிட்டு மேடையில் நடினமாடிய புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

தமிழகத்தில் தொலைக்காட்சி சீரியல்களுக்கு பெரும் வரவேற்பு கிடைத்து வருகிறது. பெண்கள் மட்டுமல்லாது ஆண்கள் மற்றும் இளைஞர்கள் என பலரும் தற்போது தங்களது கவனத்தை சீரியல் பக்கம் திருப்பியுள்ளனர். இதனால் தொலைக்காட்சிகளில் நாளுக்கு நாள் புதிய சீரியல்கள் உதயமாகி வருகின்றன. இதில் சீரியல் மட்டுமல்லாது இந்த சீரியலில் வரும் நடிகர் நடிகைகளுக்கும் பெரும் வரவேற்பு இருந்து வருகிறது. தற்போதைய காலகட்டத்தில், சினிமா நடிகைகளை விட சீரியல் நடிகைகளுக்கே சமூக வலைதளங்களில் வரவேற்பு இருந்து வருகிறது என்றே கூறலாம்.

மேலும் சீரியல் பார்க்கும் ரசிகர்களை கவரும் வகையில் பல தொலைக்கட்சிகள் பல்வேறு புதிய முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த முயற்சிகளில் அதிகபடியான வெற்றிகளை குவித்திருப்பது விஜய் தொலைக்காட்சி. இதில் ஒளிபரப்பாகும் சீரியல்கள் மட்டுமல்லாது, சீரியல் நடிகைகள் கலந்துகொள்ளும் ரியாலிட்டி ஷோக்களுக்கும் மக்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்று வருகிறது. அந்த வகையில், விஜய் தொலைக்காட்சி சீரியல் நடிகைகளுக்கு விருது வழங்கும் விஜய் டெலிவிஷன் விருது நிகழ்ச்சி சமீபத்தில் ஒளிபரப்பானது. இந்த நிகழ்ச்சியில், விஜய் தொலைக்காட்சியின் முன்னணி நடிகைகள் 3 பேர் அம்மன் வேடத்தில் எடுத்துக்கொண்ட புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.

சமீபத்தில் விஜய் தொலைக்காட்சியில் விஜய் டெலிவிஷன் விருது வழங்கும் மிக பிரம்மாண்டமாக நடைபெற்றது. பாரதிகண்ணம்மா, பாண்டியன் ஸ்டோர்ஸ், பாக்கியலட்சுமி, ராஜா ராணி 2 உள்ளிட்ட பல சீரியல் நடிகர் நடிகைகளுக்கு னலந்துகொண்ட இந்த நிகழ்ச்சியில் பலருக்கு விருதுகள் வழங்கப்பட்டது. தொடாந்து பல்வேறு கலை நிகழ்ச்சியகள் அரங்கேறிய நிலையில், இந்த நிகழ்ச்சியில், விஜய் டிவி சீரியல் பாரதிகண்ணம்மா ரோஷினி, மௌனராகம் ரவீனா, செந்தூரப்பூவே ஸ்ரீநிதி ஆகிய மூவரும் அம்மன் வேடமிட்டு நடனமாடி அசத்தி இருந்தனர். தற்போது இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Entertainment news here. You can also read all the Entertainment news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Tamil serial update serial actress goddess role danceing

Next Story
‘அப்செட்டில் வந்த என்னை வீடு போகும் வரை சிரிக்கவைத்த புகழ்’ ஷகிலா நெகிழ்ச்சிvijay tv, cook with comali 2, cook with comali actress shakila, விஜய் டிவி, ஷகிலா, நடிகை ஷகிலா நேர்காணல், குக் வித் கோமாளி, புகழ், ஷகிலா, actress shakeela, shakila interview about pugazh, shakila pughazh, shakila interview
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com
Best of Express