மீண்டு வந்த மௌனராகம் : எப்போ டெலிகாஸ்ட் தெரியுமா?

Tamil Serial Mouna Ragam Update : ஊரடங்கு காரணமாக நிறுத்தப்பட்ட விஜய் டிவியின் மௌனராகம் சீரியல் தற்போது மீண்டும் ஒளிபரப்பாக உள்ளது.

Tamil Serial Mouna Raagam 2 Update : ரசிகர்களை கட்டிப்போடும் அளவுக்கு சீரியல் தருவதில் விஜய் டிவிக்கு தனி இடம் உண்டு. இந்த தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் அனைத்து சீரியல்களும் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. இதற்கு முக்கிய காரணம் கதை என்று சொன்னாலும் கூட சீரியலில் டைட்டிலும் ஒரு வகையில் வரவேற்புக்கு உறுதுணையாக இருக்கிறது. தமிழில் ஹிட் அடித்த படங்களில் டைட்டிலை சீரியலுக்கு பயன்படுத்தும் வழக்கத்தை தொடங்கி வைத்ததே விஜய் டிவி  என்று கூட சொல்லாம்.

அந்த வகையில் சினிமா டைட்டிலில் ஒளிபரப்பாகி அதிரடி ரசிகர்களை பெற்ற சீரியல் மௌனராகம். ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற இந்த சீரியல் முதல் சீசன் முடிந்து 2-வது சீசன் ஒளிபரப்பாகி வந்த நிலையில், கொரோனா காரமாக அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு உத்தரவின் காரணமாக அனைத்து சீரியல்களும் நிறுத்தப்பட்ட நிலையில், மௌனராகம் சீரியலும் நிறுத்தப்பட்டது.

ஆனால் தற்போது ஊரடங்கு முடிவுக்கு வந்து அனைத்து சீரியல்களும் வழக்கம்போல ஒளிபரப்பாகி வரும் நிலையில், மௌனராகம் சீரியல் மட்டும் கடந்த ஒன்றரை மாதமாக ஒளிபரப்பாகாமல் உள்ளது. இதனால் அந்த சீரியல் ரசிகர்கள் பெரும் அதிர்ச்சியடைந்த நிலையில்,  சீரியல் முடிவுக்கு வந்தவிட்டதாகவும் கூறப்பட்டது. ஆனால் இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஏதும் வெளியாகாத நிலையில், தற்போது மெளனராகம் சீரியல் கறித்து புதிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

அதன்படி இந்த சீரியலின்ஷூட்டிங்க கடநட வாரம் தொடங்கியுள்ளதா அறிவித்துள்ள சீரியல் குழு, ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படங்கள் இணையத்தில் பதிவிட்டுள்ளனர். மேலும் அடுத்த வாரம் திங்கட்கிழமை முதல் மௌன ராகம் 2 ஒளிபரப்பை மீண்டும் தொடங்கி இருப்பதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. ஏற்கனவே இரவு 10 மணிக்கு ஒளிபரப்பாகி வந்த நிலையில், தற்போது மதியம் 1.30 மணிக்கு ஒளிபரப்பாகும் என தெரிவிக்கப்பட்டது.

அதன் பிறகு மீண்டும் அதே 10 மணி ஸ்லாட் வேண்டும் என குழுவினர் மற்றும் ரசிகர்கள் கேட்டுக்கொண்டதால் பழைய நேரத்திற்கே ஒளிபரப்ப விஜய் டிவி முடிவெடுத்து இருப்பதாக சீரியல் குழுவினர் தெரிவித்து உள்ளனர்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Entertainment news here. You can also read all the Entertainment news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Tamil serial vijay tv mounaragam serial re entry in tamil update

Next Story
Vijay TV Serial : ராதிகா வீட்டில் மதுரை ஸ்நாக்ஸ் : சந்தேகத்தின் உச்சத்தில் எழில்
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com