அடித்து துரத்திய அப்பா... அம்மாவுக்காக போராடும் தமிழ்

Tamil Serial Update : சொந்த அம்மாவுக்கே தெரியாம ரத்தம் கொடுக்ககும் நிலைமைய கொண்டு வந்துவிட்டீர்களே இதுவரை எந்த சீரியலிலும் வராத காட்சி

Tamil Serial Update : சொந்த அம்மாவுக்கே தெரியாம ரத்தம் கொடுக்ககும் நிலைமைய கொண்டு வந்துவிட்டீர்களே இதுவரை எந்த சீரியலிலும் வராத காட்சி

author-image
D. Elayaraja
New Update
அடித்து துரத்திய அப்பா... அம்மாவுக்காக போராடும் தமிழ்

Tamil Serial Thamizhum Saraswathiyum Rating Update : சொந்த அ்மாவுக்கே யாருக்கும் தெரியாம ரத்தம் கொடுக்க வேண்டிய சூழ்நிலையா... சோ சேட் என்ற நம்மை ஃபீல் பண்ண வைத்துள்ள சீரியல் தான் தமிழும் சரஸ்வதியும்.

Advertisment

விஜய் டிவியில ஒளிபரப்பாகும் முன்னணி சீரியல்களில் ஒன்றாக இதில், படித்த பெண்தான் தனது வீட்டிற்கு மருமகளாக வரவேண்டும் என்று கோதைநாயகி நினைக்கிறார். அவரின் எண்ணத்தை பூர்த்தி செய்யும் வகையில் அவரது இளையமகன் படித்த ஒரு பெண்னை காதலித்து வருகிறார். இதை அறிந்துகொண்ட அவர், திருமணத்திற்கு ஏற்பாடு செய்கிறார்.

ஆனால் பெண்ணின் அம்மாவான சந்திரலேகா தேவி தனது விருப்பப்படிதான் திருமணம் நடக்க வேண்டும் என்று கட்டளையிடுகிறார். ஆனால் கோதைஅதை கேட்பதாக இல்லை. இதனால் தனது மகள் திருமணம் என்று கூட பாராமல், ஏகப்பட்ட சதிவேலைகளில் ஈடுபடுகிறார். இவரின் ஒவ்வொரு சதிவேலைகளையும் கோதையின் மூத்த மகன் தமிழ் கண்டுபிடித்து தனது அம்மாவிற்கு மரியாதை குறைச்சல் ஏற்படாதபடி பார்த்துக்கொள்கிறார்.

இதனிடையே நாயன் தமிழ் கோபிலில் பழகிய சரஸ்வரியி்ன் மீது காதல் கொள்ள அவரும் தமிழை காதலிக்கிறார். இதில் இருவருமே படிக்காதவர்கள். தமிழுக்கு படித்த பெண்ணாக பார்க்க போய் கோதை பல இடங்களில் அவமானப்பட்டுள்ளார். ஆனாலும் படிக்காத தனது மகனுக்கு படித்த பெண்தான் வேண்டும் என்று முடிவு செய்துவிட்ட அவர் தனது முடிவில் உறுதியாக இருக்கிறார்.

Advertisment
Advertisements

ஆனால் அம்மாவின் முடிவு தெரிந்தும் 12-ம் வகுப்பை தாண்டாத சரஸ்வதியை காதலித்து வரும் தமிழ் சரஸ்வதி படித்தவள் என்ற பிம்பத்தை ஏற்படுத்த முயற்சிக்கிறார். இந்த முயற்சியின் கொஞ்சம் வெற்றியடைந்த அவர் சரஸ்வதியை திருமணமும் செய்துகொள்கிறார். திருமணம் முடிந்த கையோடு சரஸ்வதி படிக்கவில்லை என்ற உண்மை தெரிய வருகிறது.

இதில் அதிர்ச்சியாகும் கோதை மயங்சி விழ அவரை மருத்துவமனையில் சேர்த்துவிடுகின்றனர். சரஸ்வதி படிக்கவில்லை என்ற உண்மையை உடைத்த சந்திரலேகா தேவி, கோதையை காப்பாற்றுவது போல் நடித்து தனது மருமகனிடம் நல்ல பெயர் வாங்குகிறார். இதற்கிடையே கோதையின் கணவர் தமிழ் கோதையை பார்க்க அனுதிக்க மறுக்கிறார். இதனால் அடுத்து என்ன நடக்கும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ள நிலையில், தற்போது இந்த சீரியலின் ப்ரமோ வெளியாகியுள்ளது

இதில் கண் விழக்கும் கோதையை அனைவரும் பார்க்கின்றனர். அப்போது தமிழும் அவரை பர்க்கவர கோதை சைகை செய்கிறார். இதனால் உறவினர்கள் அனைவரும் தமிழை வெளியே அனுப்புகின்றனர். அதன்பிறகு டாக்டரை தனியாக சந்திக்கும் தமிழ் யாருக்கும் தெரியாமல் அம்மாவுககு ரத்தம் கொடுகிறார். அத்துடன் முடிகிறது. இன்றைய ப்ரமோ. சரியான ரூட்டில் போய்க்கொண்டிருந்த சீரியலை இப்படி கெடுத்துவிட்டீங்களே என்ற புலம்பல் ரசிகர்களிடம் அதிகமாக உள்ளது.

சொந்த அம்மாவுக்கே தெரியாம ரத்தம் கொடுக்ககும் நிலைமைய கொண்டு வந்துவிட்டீர்களே இதுவரை எந்த சீரியலிலும் வராத காட்சி என்றும், தமிழ் அப்படி என்ன தப்பு செய்துவிட்டார் விரும்பிய பெண்னை திருமணம் செய்துகொண்டார் பெற்றோர் சம்மத்துடன் அதற்காக ஒரு பொய்யை சொல்லிட்டார் இதில் என்ன தவறு என்று கேட்டு வருகினறனர். தற்போது இந்த ப்ரமோ வைரலாகி வரும் நிலையில், சீரியலின் அடுத்த சில மாதங்கள் ஆஸ்பத்திரியிலேயே கடந்துவிடுமா என்று கேட்டு வருகினறனர் ரசிகர்கள்

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil “

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: