Advertisment

ரெசார்ட்டில் நடக்கும் ரொமான்ஸ்... மாமனாருடன் மோதல் : ஜீ தமிழ் சீரியலின் இன்றைய எபிசோடு

ஜீ தமிழில் அதிக டி.ஆர்.பி புள்ளிகளை பெற்றுவரும்,கார்த்திகை தீபம்,அண்ணா,இதயம், சீரியல்களில் சமீபமாக நடந்த சுவாரசிய நிகழ்வுகள் குறித்து காணலாம்

author-image
D. Elayaraja
New Update
zee tamil serial KD ANA

கார்த்திகை தீபம், அண்ணா, இதயம்

ஜீ தமிழ் டாப் சீரியல்களின் சுவாரசிய அப்டேட்

Advertisment

ஜீ தமிழ் முதன்மை தமிழ் தொலைகாட்சிகளில் ஒன்றாக விளங்கி வருகிறது. ஜீ தமிழ் தொடர்ந்து புது விதமான கதை காலத்துடன் கூடிய தொடர்களை அறிமுகப்படுத்தி வருகிறது. அதில் பல தொடர்கள் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகின்றன. இந்நிலையில் அவற்றில் அதிக டி.ஆர்.பி புள்ளிகளை பெற்றுவரும், கார்த்திகை தீபம், அண்ணா, இதயம், சீரியல்களில் சமீபமாக நடந்த சுவாரசிய நிகழ்வுகள் குறித்து காணலாம்

கார்த்திகை தீபம்:

ரெசார்ட்டில் நடக்கும் ரொமான்ஸ்.. கார்த்திக், தீபாவை கலாய்த்த மீனாட்சி

கார்த்திகை தீபம் சீரியலின் நேற்றைய எபிசோடில் எல்லோரும் ரெசார்ட்டில் வந்து இறங்கிய நிலையில் இன்று நடக்கப் போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க. அதாவது, மீனாட்சி தீபாவிடம் வந்து செம குளூரான கிளைமேட் ரிசார்ட் வந்து இருக்கோம். அப்புறம் என்ன இன்னைக்கு உனக்கும் கார்த்திக்கும் ஃபர்ஸ்ட் நைட் நடத்திட வேண்டியதுதான் என்று சொல்ல தீபா போங்க அக்கா என்று வெட்கப்படுகிறாள்.

அடுத்ததாக கார்த்திக் மற்றும் தீபா ரூமில் ரெசார்ட் நல்லா இருக்கு என்று பேசிக் கொண்டிருக்க பிறகு தீபா பாத்ரூமுக்குள் செல்ல தெரியாமல் சுவரை ஆன் செய்துவிட தண்ணீர் மொத்தமும் மேலே கொட்டுகிறது. பிறகு உதவிக்கு வரும் கார்த்திக் ஷவரை ஆப் செய்து வெளியே அழைத்து வர இருவருக்கும் இடையே ரொமான்ஸ் நடக்கிறது.  பிறகு தீபாவின் துணிகள் எதுவும் இன்னும் ரூமுக்கு வரவில்லை என்பதால் கார்த்திக் தன்னுடைய துணியை கொடுத்து மாற்றிக்கொள்ள சொல்ல தீபா தயங்கி நிற்பதை பார்த்து கார்த்திக் ஓ சாரி மறந்துட்டேன் நான் வெளியே போறேன் என்று கிளம்ப தீபா வேண்டாம் சார் நீங்க கண்ணு திறக்காமல் இருந்தால் போதும் என்று துணியை மாற்றிக் கொள்கிறாள்.

பிறகு தீபாவின் துணியை எடுத்து வரும் மீனாட்சி தீபா கார்த்திக் ட்ரஸ் போட்டுக் கொண்டிருப்பதை பார்த்து என்ன கார்த்திக் எல்லாம் நல்லபடியா முடிந்ததா என்று கேட்க அவனும் முடிந்தது என்று பதில் சொல்கிறான். பிறகு தீபா அவங்க என்ன கேக்குறாங்க நீங்க என்ன பதில் சொல்றீங்க என்று கேட்க அங்கு என்ன கேட்டாங்கன்னு எனக்கு தெரியும் அப்படியே இருந்துட்டு போகட்டும் என்று சொல்கிறான். இதனால் அடுத்து என்ன நடக்கும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

அண்ணா:

சூடாமணியால் மாறிய சண்முகத்தின் முடிவு.. சௌந்தரபாண்டிக்கு ஆப்பு ரெடி

அண்ணா சீரியலில் நேற்றைய எபிசோடில் சூடாமணி சௌந்தர பாண்டி தர்மகத்தாவாக இருந்து நகைகளை திருடுவது பல கனவு காண சண்முகம் அம்மாவை பார்க்க ஸ்டேஷனுக்கு வந்த நிலையில் இன்று சூடாமணி சண்முகத்திடம் நீ தர்மகத்தா தேர்தலில் நின்னு ஜெயிக்கணும் என்று சொல்ல பரணி வேண்டாம் என்று சொன்னீர்கள் அதனால் தான் நிக்கல என்று கூறுகிறான். நீ தர்மகத்தாவை ஜெயிக்கணும் அப்பதான் அந்த சௌந்தரபாண்டியோட தில்லு முல்லு வேலைகள் வெளியே வரும் நானும் ஜெயிலிருந்து வெளியே வர முடியும் என்று சொல்ல சண்முகம் நான் தேர்தலில் நின்னு ஜெயிக்கிறேன் என வாக்கு கொடுத்துவிட்டு அங்கிருந்து கிளம்புகிறான்.

அதைத்தொடர்ந்து கோவிலில் சௌந்தரபாண்டி எல்லோரையும் கூட்டி நிற்க வைத்து சண்முகம் இந்த தேர்தலில் நிற்கப் போவதில்லை அதனால் தேர்வு செய்ய எல்லா ஏற்பாடுகளையும் செய்து வைத்திருக்கிறார். இது எதுவும் தெரியாமல் ஒரு பஸ் ஸ்டாண்டில் வந்து இறங்கும் சண்முகத்திடம் மாற்றுத்திறனாளி ஒருவர் பூஜை செய்ய வேண்டும் கோவிலில் விட்டு விடுமாறு உதவி கேட்க சண்முகம் அவரை கூட்டிக்கொண்டு வருகிறான். இங்கே சௌந்தரபாண்டி ஊர் பெரியவர்களிடம் பத்திரத்தில் கையெழுத்து போட சொல்லி கேட்டுக் கொண்டிருக்க ‌ சண்முகம் கோவிலில் நோக்கி வருகிறான். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

இதயம் :

காதலை சொன்ன ஆதி.. பாரதிக்கு காத்திருந்த அதிர்ச்சி

இதயம் சீரியலில் நேற்றைய எபிசோடில் பாரதி ஆதிக்கு தெரியாமல் சௌமியாவுக்கு மெஸேஜ் அனுப்பி பார்க்கிற்கு வர சொல்லிய நிலையில் இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.

அதாவது பாரதி சாரதாவிற்கு போன் செய்து பார்க்கிற்கு வாங்க ஆதி லவ் பண்ற பொண்ணை பார்த்து பேசி விடலாம் என்று சொல்ல சாரதாவும் வர சம்மதம் தெரிவிக்கிறாள். இதனையடுத்து ஆதி பார்க்கிற்கு வர அங்கு சௌமியா இருப்பதை பார்த்து நீ என்ன இங்கே என்று கேட்க நீதானேடா வர சொல்லி மெஸேஜ் அனுப்பி இருந்த என்று சொல்ல ஆதி புரியாமல் நிற்க பாரதி அங்கு என்ட்ரி கொடுக்கிறாள்.

பாரதி நீங்க ரெண்டு பேரும் லவ் பண்ற விஷயத்தை அம்மாவிடம் சொல்லிடுங்க என்று சொல்ல சௌமியா நாங்க லவ் எல்லாம் பண்ணல, நான் அவனோட ப்ரண்ட் எனக்கு ஏற்கனவே கல்யாணம் ஆகிடுச்சு என்று சொல்லி அங்கிருந்து கிளம்பி செல்ல பாரதி ஷாக் ஆகிறாள். அதன் பிறகு ஆதியிடம் நீங்க லவ் பண்ற பொண்ணு யாரு என்று கேட்க ஆதி கண்ணாடியில் பாரதியின் முகத்தை காட்டி காதலை வெளிப்படுத்த பாரதி அதிர்ந்து போகிறாள்.

அவன் கிளம்பி சென்றதும் சாரதா அங்கு வர பாரதி ஆதி தான் அந்த பொண்ணை காதலிக்கிறார். அந்த பொண்ணு ஆதியை லவ் பண்ணல, நீங்க ஆசைப்படுற பொண்ணை தாராளமாக கல்யாணம் பண்ணி வைக்கலாம் என்று சொல்கிறாள்.  பிறகு வீட்டுக்கு வந்து தமிழ் பாப்பாவிடம் இனிமே ஆதியுடன் பேசக்கூடாது என சொல்ல அவள் அழ பாரதி குழந்தையை கட்டி பிடித்து கொண்டு கண் கலங்குகிறாள். மறுநாள் காலையில் ஆதி ஆபிஸ் வர பாரதி வராமல் இருக்க லதாவிடம் விசாரிக்க அவளும் தெரியவில்லை என சொல்ல ஆதி அப்செட் ஆகிறான். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Zeetamil Serial
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment