/indian-express-tamil/media/media_files/2025/09/30/zee-tmj-2025-09-30-13-18-12.jpg)
போலீஸ் பிடியில் இருந்து தப்பும் மாயா.. ரேவதி உயிர் பிழைத்தது எப்படி? - கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட் அப்டேட்
கார்த்திகை தீபம் சீரியலின் நேற்றைய எபிசோடில் ரேவதியை ஆபரேஷன் தியேட்டருக்கு அழைத்து சென்ற நிலையில் இன்று, கோவிலில் பரமேஷ்வரி பாட்டி, ரோகினி, துர்கா என மூவரும் ரேவதி சீக்கிரம் குணமடைய வேண்டும் என்று வேண்டி கொண்டு பிராத்தனை செய்கின்றனர்.
தொடர்ந்து மூன்று பேரும் தீச்சட்டி ஏந்தி கோவிலை சுற்றி வந்து பரிகாரம் செய்கின்றனர். இங்கே மாயா, காளியம்மா ஆகியோர் ரேவதியை கொல்ல திட்டமிட கார்த்திக் அவர்களின் அணைத்து திட்டங்களையும் முறியடிக்கிறான். அடுத்து ரேவதிக்கு ஆப்ரேஷன் நடந்தபடி இருக்க கார்த்திக் கடவுளிடம் பிராத்தனை செய்கிறான். இறுதியாக ரேவதிக்கு ஆப்ரேசன் நல்லபடியாக நடந்து முடிய கார்த்திக் காளியம்மா வீட்டிற்கு வருகிறான்.
சிவனாண்டி, முத்துவேலை பிடித்து அடித்து மாயாவை வர வைத்து போலீசிடம் ஒப்படைக்க மாயா போலீஸ் பிடியில் இருந்து எஸ்கேப் ஆகிறாள். இப்படியான நிலையில் அடுத்து நடக்கப்போவது என்ன என்பது குறித்து எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
குற்றவாளியான வைஜெயந்தி.. கேஸில் ஜெயித்த சண்முகம் - அண்ணா சீரியல் இன்றைய எபிசோட் அப்டேட்
அண்ணா சீரியலின் நேற்றைய எபிசோடில் வைஜெயந்திக்கு எதிராக சாட்சி சொல்ல முருகன் சிலை இருப்பதாக சண்முகம் சொன்ன நிலையில் இன்று, சண்முகம் முருகன் சிலைக்கும் கேமரா, மைக் ஆகியவை இருப்பதை சொல்லி அதில் இருக்கும் பென்ட்ரைவ்வை எடுத்து நீதிபதியிடம் சமர்ப்பிக்கிறான். தொடர்ந்து வைஜெயந்தி செய்த அத்தனை சதி வேலைகளும் வெளியே வர அவளும் செய்த தவறுகளை ஒப்பு கொள்கிறாள்.
பிறகு இன்ஸ்பெக்டர் குருவும் அனைத்தையும் வைஜெயந்தி சொல்லி தான் செய்ததாக வாக்குமூலம் கொடுக்கிறான். இதனால் நீதிபதி வைஜெயந்தி மற்றும் குரு என இருவருக்கும் தண்டனையை அறிவிக்கிறார். இருவரும் கைது செய்யப்படுகின்றனர். சண்முகம் வெற்றி பெற்றதால் அனைவரும் அவனை தூக்கி கொண்டாடுகின்றனர். இந்த நேரத்தில் சௌந்தரபாண்டி தலையில் துண்டை போட்டு முகத்தை மறைத்தபடி வெளியே வர சண்முகம் மடக்கி பிடித்து நான் ஜெயிக்க நீங்க தான் காரணம் என்று நன்றி சொல்லி வெறுப்பேற்றுகிறான்.
இசையின் பெயரை டாட்டூ குத்தும் விஷால்.. போட்டி போட்டு காதல் செய்யும் ராகவ் - பாரிஜாதம் இன்றைய எபிசோட் அப்டேட்
பாரிஜாதம் சீரியலில் நேற்றைய எபிசோடில் ராகவ் வர்ஷினியை கடைக்கு அழைத்துச் சென்று நான்கைந்து புடவைகளை எடுத்துக் கொடுத்த நிலையில் இன்று, வீட்டுக்கு வரும் வர்ஷினி ராகவ் தன்னை கடைக்கு அழைத்துச் சென்று புடவைகளை எடுத்துக் கொடுத்ததாக சொல்லி சந்தோஷப்படுகிறாள். டெலிவரி பாய் ஒருவன் காலிங் பெல் அடித்த ராகவ் மற்றும் விஷால் என இருவரும் சேர்ந்து மருதாணியை அனுப்பி வைத்துள்ளதாக சொல்லிக் கொடுத்துவிட்டு செல்கிறான்.
மறுபக்கம் ராகவ் தங்கை பல்லவியிடம் இந்த விஷயத்தைச் சொல்ல அவள் ராகவ்வின் கையைப் பிடித்து மருதாணியில் வர்ஷினி என பெயர் எழுதி பக்கத்தில் ஒரு ஹார்ட் போட்டு விடுகிறாள். ராகவ் இதை போட்டோ எடுத்து வர்ஷினிக்கு அனுப்பி வைக்க வர்ஷினி இசையிடம் சொல்ல அவள் மருதாணியில் விஷால் என பெயர் எழுதி அதை அவனுக்கு அனுப்பி வைக்கிறாள். இதனால் கடுப்பாகும் விஷால் நேராக டாட்டூ ஷோரூமுக்கு சென்று டாட்டூ போட வேண்டும் என்று சொல்கிறான்.
டாட்டூ பாய் என்ன பெயர் போட வேண்டும் என்று கேட்க போனை பார்த்துக் கொண்டு விஷால் இசை என்று சொல்லிக்கிட்ட இசை என்ற பெயரை தான் பச்சை குத்த வேண்டும் என்று நினைத்து பாட்டூ போட்டு விடுகிறான். அதை போட்டோவும் எடுத்து இசைக்கு அனுப்பி வைக்க இசை இதை பார்த்து சந்தோஷம் அடைகிறாள். பிறகு விஷால் மீண்டும் நண்பர்களின் ரூமுக்கு வர நண்பர்கள் இதை பார்த்து என்னோட இசை என்று டாட்டூ போட்டு இருக்க என்று சொல்ல விஷால் ஷாக்காகி கடைக்காரனுக்கு போன் போட்டு திட்டுகிறான்.
அடுத்ததாக தேவகி பாட்டி சுபத்ராவிடம் பானுமதி வீட்டுக்கு அழைத்து வருவது பற்றி பேச சுபத்ரா அது குறித்து யோசிக்கிறாள். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.