Advertisment

பாலியல் துன்புறுத்தல்... பண மோசடி... பிக்பாஸ் விக்ரமன் மீது பெண் வழக்கறிஞர் புகார்

என்னை காதலிப்பதாக கூறி ஏமாற்றிய விக்ரமன் தற்போது என்னை விட்டு விலகி வேறொரு பெண்ணை காதலித்து வருகிறார்.

author-image
WebDesk
New Update
Vikraman

பிக்பாஸ் விக்ரமன்

பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணை செய்தித் தொடர்பாளர் ஆர்.விக்ரமன், மீது இளம் பெண் வழக்கறிஞர் பாலியல் மற்றும் பண மோசடி புகார் அளித்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisment

விஜய் டிவியின் பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் விக்ரமன். தொடக்கம் முதல் இறுதிவரை நேர்மையாக விளையாடி ரசிகர்களின் நன்மதிப்பை பெற்ற இவர், சாம்பியன் பட்டம் வெல்வார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அனைவருக்கும் அதிர்ச்சி அளிக்கும் விதமாக அசீம் சாம்பியனாகவும், விக்ரமன் 2-வது இடத்தையும் பிடித்தார்.

முதலிடம் பிடிப்பார் என்று எதிர்பார்த்த விக்ரமன் 2-வது இடம் பிடித்தாலும் அவருக்கான ஆதரவு அதிகரித்தது. சின்னத்திரை மட்டுமல்லாமல் அரசியலிலும் கால்பதித்துள்ள விக்ரமன் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணை செய்தித்தொடர்பாளராக இருக்கிறார். இதனிடையே விக்ரமன் தன்னை காதலிப்பது போல் நடித்து, பாலியல் சுரண்டல் மற்றும் பண மோசடி செய்ததாக பெண் வழக்கறிஞர் புகார் அளித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இது தொடர்பாக இளம்பெண் வழக்கறிஞர், சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் அளித்துள்ள புகார் மனுவில், விக்ரமன் தன்னை காதலிப்பதாகக் கூறி நடித்து, தன்னிடம் இருந்து லட்சக்கணக்கில் பணம் வாங்கியதுடன், பாலியல் ரீதியாக கொடுமை படுத்தினார். மேலும், என்னை சாதியின் பெயரைச் சொல்லி இழிவாக பேசி மன உளைச்சலுக்கு ஆளாக்கியுள்ளார்.  

என்னை காதலிப்பதாக கூறி ஏமாற்றிய விக்ரமன் தற்போது என்னை விட்டு விலகி வேறொரு பெண்ணை காதலித்து வருகிறார். அவர் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நிர்வாகி என்பதால், அக்கட்சியின் மேலிடத்தில் புகார் அளித்திருந்தேன். அதன்பிறகு என்னிடம் வாங்கிய 13 லட்சத்து 70 ஆயிரம் ரூபாயில், 12 லட்சம் ரூபாய் பணத்தை திருப்பிக் கொடுத்துவிட்டார்.  ஆனால் கட்சி சார்பில் அவர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இதனால் எனக்கு மன உளைச்சல் அதிகரித்துள்ளது. இதன் காரணமாக போலீசார் தலையிட்டு விக்ரமன் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இளம்பெண் வழக்கறிஞர் தனது புகாரில் தெரிவித்துள்ளார். இந்த புகார் சம்பவம் தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamil Cinema
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment