Advertisment

அப்பவே டான்ஸ் ஆடுவாங்க போல... செமையா ஸ்டெப் போடும் இந்த விஜய் பட நாயகியை கண்டுபிடிங்க!

ஒரு மாடலாக தனது வாழ்க்கையைத் தொடங்கிய இந்த நடிகை 2010-ம் ஆண்டு ஷி-மிஸ் யுனிவர்ஸ் இந்தியா போட்டியில் ரன்னர்-அப் கோப்பையையும் வென்றார்.

author-image
WebDesk
New Update
Pooja Hedge1

விஜய் பட நடிகை

சமீப காலமாக இணையத்தில் சினிமா நட்சத்திரங்களின் சிறுவயது புகைப்படங்கள் வெளியாகி வரவேற்பை பெற்று வருகிறது. இதில் குறிப்பாக நடிகைகள் புகைப்படங்களும், அவர்களின் சிறுவயது தோற்றம் குறித்த தகவல்களும் பல ரசிகர்கள் மத்தியில் கவனத்தை ஈர்த்து வருகிறது. அந்த வகையில் தற்போது ஒரு நடிகையின் சிறுவயது புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Advertisment

ஒரு மாடலாக தனது வாழ்க்கையைத் தொடங்கிய இந்த நடிகை 2010-ம் ஆண்டு ஷி-மிஸ் யுனிவர்ஸ் இந்தியா போட்டியில் ரன்னர்-அப் கோப்பையையும் வென்றார். அதன்பிறகு தமிழ் சினிமாவில் இவர் அறிமுகமாகி இருந்தாலும் இதுவரை 2 தமிழ் படங்களில் மட்டுமே நடித்துள்ளார். இந்த 2 படங்களுமே இவருக்கு கை கொடுக்கவில்லை. ஆனாலும் தெலுங்கில் கால்பதித்த இவர் பல வெற்றிப்படங்களை கொடுத்துள்ளார். முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக பல படங்களில் நடித்துள்ளார்.

Pooja Hedge

பூஜா ஹெக்டே

தற்போது இந்தி படங்களிலும் கால்பதிக்க தொடங்கியுள்ள பூஜா ஹெக்டே தான் அந்த நடிகை. தமிழில் 2012-ம் ஆண்டு மிஷ்கின் இயக்கத்தில் முகமூடி என்ற படத்தின் மூலம் திரைத்துறையில் அறிமுகமான இவருக்கு அந்த படம் கை கொடுக்காத நிலையில், அடுத்து தெலுங்கு படங்களில் கவனம் செலுத்தினார். அங்கு பல வெற்றிப்படங்களை கொடுத்த அவர், கடந்த ஆண்டு வெளியான விஜயின் பீஸ்ட் படத்தின் மூலம் தமிழில் ரீஎன்டரி ஆனார்.

Poojahegde8

தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகையாக இருப்பவர் பூஜா ஹெக்டே.

ஆனால் இந்த படமும் அவருக்கு சரியாக கை கொடுக்காத நிலையில், தெலுங்கு மற்றும் இந்தி படங்களில் கவனம் செலுத்தி வருகிறார். அந்த வகையில் சமீபத்தில் சல்மான் கான் நடித்த கிசிகா பாய் கிசிகா ஜான் (வீரம் ரீமேக்) என்ற படத்தில் நடித்திருந்தார். இதனிடையே தற்போது பூஜா ஹெக்டேவின் சிறுவயது புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. அவரது கண்கவர் தோற்றத்தில், அழகு அவரது குழந்தை பருவத்தின் தோற்றம் ரசிகர்கள் மத்தியில் கவனம் ஈர்த்து வருகிறது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Pooja Hegde
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment