உலகளவில் சிறந்த கால்பந்து வீரர்களை பற்றி கேட்டால், பலரும் ரெனால்டோ, மெஸ்ஸி, நெய்மர் என்று இன்றைய கால நட்சத்திரங்களின் பெயர்களை தான் சொல்வார்கள். முன்னாள் வீரர்களை எடுத்துக்கொண்டால் பிலே மாரடோனா, உள்ளிட்ட சிலரை கை காட்டுவார்கள். அதேபோல் இந்திய கால்பந்து முக்கிய வீரர்களை எடுத்துக்கொண்டால் தற்போதைய கேப்டன் சுனில் சேத்ரியை தவி மற்ற வீரர்களை யாருக்கும் பெரியதான தெரியாது.
அந்த வகையில் இந்திய கால்பந்து வீரர்களில் பலரும் முக்கிய வீரர் தான் சைமன் சுந்தர்ராஜ். ஆசிய கால்பந்து அணிகளில் முன்னணியில் உள்ள இந்திய கால்பந்து, சர்வதேச அளவில் உயரிய விளையாட்டு போட்டிகளில் ஒன்றான ஒலிம்பிக் போட்டிகளில் 1960-ம் ஆண்டு மட்டுமே பங்கேற்றது. இந்த போட்டிக்காக இந்திய அணி தனது கடைசி தகுதிச்சுற்றில் இந்தோனேசியா அணிக்கு எதிராக 6-3 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. இந்த போட்டியில் இந்திய அணிக்காக 3 கோல்கள் அடித்து முத்திரை பதித்தவர் தான் சைமன் சுந்தர்ராஜ்.
1937-ம் ஆண்டு நவம்பர் 9-ந் தேதி தமிழகத்தின் முக்கிய டெல்டா பகுதியான தஞ்சையில் பிறந்த சைமன் சுந்தர்ராஜ். இவரது மாமாவும் கால்பந்து வீரர் என்பதால் சிறுவயதில் அவர் விளையாட போகும்போது அவருடன் சைமன் சுந்தர்ராஜ் சென்றுள்ளார். இதன் காரணமாக கால்பந்து விளையாட்டின் மீது அவருக்கு ஆர்வம் அதிகாரித்துள்ளது. அதற்கு ஏற்றாற்போல் அவரது மாமாவும் சைமன் சுந்தர்ராஜ்-க்கு கால்பந்து விளையாட பயிற்சி கொடுத்துள்ளார்.
தொடர்ந்து தனது விளையாட்டு போட்டியில் கவனம் செலுத்திய சைமன் சுந்தர்ராஜ் விளையாட்டு துறையில் டிப்ளமோ பட்டம் பெற்றிருந்தார். அதன்பிறகு உள்ளூர் கால்பந்து போட்டிகளில் விளையாடி திறமையை நிரூபித்த சைமன் சுந்தர்ராஜ் க்ளப் அணிக்களுக்காகவும் விளையாடியுள்ளார். தனது சிறப்பான ஆட்டத்தின் மூலம் இந்திய அணிக்கு விளையாடும் வாய்ப்பினை பெற்ற சைமன் சுந்தர்ராஜ், இந்திய தேசிய கால்பந்து அணிக்காக விளையாடிய முதல் தமிழ்நாடு வீரர் என்ற சிறப்பினை பெற்றார்.
1960-ம் ஆண்டு ரோம் நகரில் நடைபெற்ற ஒளிம்பிக் போட்டியில் ஆசிய கண்டத்தில் இருந்து ஒரு அணியாக தகுதி பெற்ற இந்தியா இந்த போட்டிக்கான தகுதிச்சுற்று ஆட்டத்தின் கடைசி போட்டியில் இந்தோனேசியாவுடன் மோதியது. பரபரப்பான இந்த போட்டியில் இந்திய அணி சிறப்பாக விளையாடி 6-3 என்ற கணக்கில் வெற்றி பெற்றது. இந்திய அணி அடித்த 6 கோல்களில் சைமன் சுந்தர்ராஜ் 3 கோல் அடித்து வெற்றிக்கு அடித்தளம் அமைத்திருந்தார்.
இந்த ஒலிம்பிக் போட்டியில் இந்திய அணி தனது முதல் ஆட்டத்தில் ஹங்கேரிக்கு எதிராக 1-2 என்ற கணக்கில் தோல்வியை சந்தித்து. அடுத்த ஆட்டத்தில் பிரான்ஸ் அணிக்கு எதிராக 1-1 என்ற கணக்கில் டிரா செய்ததால் இந்திய அணி அடுத்த சுற்றுக்கு செல்லும் வாய்ப்பினை இழந்தது. இதனைத் தொடர்ந்து பெருவுடன் நடந்த 3-வது ஆட்டத்திலும் இந்திய அணி 1-2 என்ற கோல் கணக்கில் வீழ்ந்தது. இந்த போட்டியில் இந்திய அணி அடித்த ஒரு கோலை அடித்தவ சைமன் சுந்தர்ராஜ்.
30 யார்டு தூரத்தில் இருந்து அவர் அடித்த கோல் ஒலிம்பிக்கில் இந்திய அணி எடுத்த கடைசி கோலாக அமைந்தது. 1960-க்கு பிறகு இந்திய அணி ஒலிம்பிக் கால்பந்து போட்டிக்கு தகுதி பெறாததால்,உலக புகழ் பெற்ற ஒலிம்பிக் போடடியில் இந்திய அணிக்காக கடைசி கோல் அடித்த வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார் சைமன் சுந்தர்ராஜ். அடுத்த ஆண்டு மெட்ரால் யுனைடெட் க்ளப் அணிக்கு எதிரான போட்டியில் குறுத்தெலும்பில் காயமடைந்த சைமன் சுந்தர்ராஜ், 1962-ம் ஆண்டு ஆசிய கால்பந்து போட்டியில் தங்கம் வென்ற இந்திய அணியில் இடம்பிடிக்க தவறிவிட்டார்,
இந்திய அணியில் சில ஆண்டுகளே விளையாடி இருந்தாலும் சைமன் சுந்தர்ராஜ், இந்திய கால்பந்து அணியில் முக்கிய வீரர்களில் ஒருவராக மதிக்கப்படுகிறார். ஒரு கட்டத்தில் விளையாட்டு வாழ்க்கையை முடித்துக்கொண்ட சைமன் சுந்தர்ராஜ், பட்டியலாவில் நேதாஜி, சுபாஷ் தேசிய விளையாட்டு கழகத்தில் பயிற்சியாளராக தேர்வு செய்யப்பட்டார். தொடர்ந்து 1973-ம் ஆண்டு முதல் முறையாக சந்தோஷ் கோப்பை வென்ற கேரளா கால்பந்து அணிக்கு பயிற்சியாளராக இருந்தவர் சைமன் சுந்தர்ராஜ்.
இந்திய காலபந்து அணியில் ஒரு வீரராக அவரது வாழ்க்கை குறுகியதாக இருந்தாலும், அவர் விளையாடிய காலம் இந்திய கால்பந்தின் பொற்காலமாக இருந்துள்ளது. இதனிடையே இந்திய கால்பந்து அணியில் இடம் பெற்ற முதல் தமிழக வீரர் சைமன் சுந்தர்ராஜ் 86 வயதை நிறைவு செய்துள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.