scorecardresearch

மேடைக்கு வந்த பெப்சி உமா: ‘இத்தனை வருஷமா எங்க மேடம் போனீங்க?’

இன்றைக்கு சின்னத்திரை உலகம் எத்தனையோ தொகுப்பாளினிகளை கண்டிருக்கிறது. ஆனால் பெப்சி உமாவின் இடத்தை நிரப்ப யாரும் இல்லை என்பதே உண்மை

Pepsi Uma
பெப்சி உமா

துதர்ஷன் சேனலில் ஒளிபரப்பான வாருங்கள் வாழ்த்துவோம் என்ற நிகழ்ச்சியின் மூலம் சின்னத்திரையில் அறிமுகமானவர் உமா மகேஷ்வரி. தொடர்ந்து 90-ஸ் கிட்ஸின் பேவரெட் நிகழ்ச்சியான பெப்சி உங்கள் சாய்ஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். இந்த ஒரு நிகழ்ச்சியை 15 ஆண்டுகள் தொகுத்து வழங்கி ரசிகர்கள் மனதில் நீங்க இடம் பிடித்துள்ளார்.

பெப்சி உங்கள் சாய்ஸ் நிகழ்ச்சியில் பேசும் பலரிடமும் அவருடன் நீண்ட காலம் பழகிய தோழிபோல் பேசும் இவரின் பேச்சு, கம்பீரமான குரல், சிரிப்பு, அழகு, நிகழ்ச்சிக்கு இவர் அணிந்து வரும் புடவை என அனைத்துமே ரசிகர்கள் மத்தியில் பெரும் பிரபலம். அதேபோல் அவர் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய காலகட்டத்தில் மற்ற தொகுப்பாளர்களை விடவும் பெப்சி உமாவிற்கு ரசிகர்கள் பட்டாளம் அதிகமாக இருந்தது.

இன்றைக்கு சின்னத்திரை உலகம் எத்தனையோ தொகுப்பாளினிகளை கண்டிருக்கிறது. ஆனால் பெப்சி உமாவின் இடத்தை நிரப்ப யாரும் இல்லை என்பதே உண்மை. அதேபோல் 15 வருடங்கள் ‘பெப்சி உங்கள் சாய்ஸ்’ நிகழ்ச்சியை அவர் தொகுத்து வழங்கினார். அந்த வகையில் ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியை அதிக வருடம் தொகுத்து வழங்கியவர் பெப்ஸி உமா தான்.

அதேபோல் திரைப்படங்களில் கூட பெப்சி உங்கள் சாய்ஸ் நிகழ்ச்சிக்கு நடிகர்கள் பேசுவது போல காட்சிகள் அமைக்கப்பட்டிருக்கும். அந்த அளவிற்கு ரசிகர்கள் மத்தியில் நீங்க இடம் பிடித்த பெப்சி உமா தனக்கு வந்த திரைப்பட வாய்ப்புகளை கூட நிராகரித்துவிட்டார் என்றும் தகவல் வெளியானது. இதனிடையே பெப்சி உமா கடந்த 25 வருடங்களாக பெப்சி உமா சின்னத்திரையில் எந்த நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கவில்லை.

இந்நிலையில், சமீபத்தில் பிகைண்ட் வுட்ஸ் விருது வழங்கும் விழாவில் பெப்சி உமாவிற்கு விருது வழங்கப்பட்டது. பல ஆண்டுகள் கழித்து இதன் மூலம் வெளியில் வந்துள்ள பெப்சி உமாவிற்கு ரசிகர்கள் பலரும் வியந்து பாராட்டு கொடுத்து வருகின்றனர். இந்த நிகழ்ச்சியில், சன்டிவியின் செய்தி வாசிப்பாளர் ரத்னா, சமையல் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கிய தொகுப்பாளர் விஜய சாரதி ஆகியோர் பங்கேற்றுள்ளனர்.

இந்த நிகழ்ச்சியின் கோல்டன் ஐகான் ஆஃப் டெலிவிஷன் அவார்ட் பெப்சி உமாவுக்கு வழங்கப்பட்டது. தொடர்ந்து இத்தனை வருடங்கள் எங்கு சென்றிருந்தீர்கள் என்று கேட்ட கேள்விக்கு தான் இங்கு தான் இருந்தேன். விரைவில் சின்னத்திரையில் சந்திப்போம் என்று பெப்சி உமா ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியை கொடுத்துள்ளார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Tamil App.

Web Title: Tamil television pepsi uma re entry in tamil television show soon