Advertisment

18 வருடத்திற்கு முந்தைய போட்டோ… 5 செகண்ட்ல இந்த டி.வி பிரபலத்தை கண்டுபிடிங்கோ!

தற்போது சின்னத்திரை பிரபலம் ஒருவரின் 18 வருடங்களுக்கு முன்பு எடுக்கப்பட்ட ஒரு புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Anitha Sambath

தமிழ் சினிமா நடிகை

வெள்ளித்திரையான இருந்தாலும் சின்னத்திரையாக இருந்தாலும் தங்களுக்கு பிடித்தமான நடிகர் நடிகைகள் குறித்த தகவல்களுக்கு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு அதிகம் இருக்கும். அதிலும் குறிப்பாக அவர்களின் தனிப்பட்ட விஷயங்கள் குறித்து தெரிந்துகொள்ள ரொம்பவே ஆர்வம் காட்டுவார்கள். அந்த மாதிரி இருக்கும் ரசிகர்களுக்காகவே சமீப காலமாக சினிமா மற்றும் சின்னத்திரை நட்சத்திரங்களின் சிறு வயது புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வருகிறது.

Advertisment

இதில் ஒரு சில புகைப்படங்களை சம்பந்தப்பட்ட நட்சத்திரங்களே தங்களது சமூகவலைதளங்களில் வெளியிட்டு வருகின்றனர். அந்த வகையில் தற்போது சின்னத்திரை பிரபலம் ஒருவரின் 18 வருடங்களுக்கு முன்பு எடுக்கப்பட்ட ஒரு புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. சன்.டிவியின் செய்தி வாசிப்பாளராக சின்னத்திரையில் அறிமுகமானி தனக்கென ரசிகர்கள் பட்டாளத்தை சேர்த்தவர் இந்த நடிகை.

அதனைத் தொடர்ந்து செய்தி வாசிப்பாளர் வேலையை விட்ட இவர், பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று மேலும் தனக்கான ரசிகாகள் எண்ணிக்கையை உயர்த்திக்கொண்டார். அதே சமயம் பிக்பாஸ் நிகழச்சியில் சக போட்டியாளர்களுடன் சண்டை போட்டதால் இவருக்கு கடுமையாக விமர்சனங்களும் வந்தது. அந்த நடிகை வேறு யாரும் இல்லை அனிதா சம்பத் தான்.

anitha

நடிகை அனிதா சம்பத்

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின் யூடியூப் சேனல் தொடங்கி வீடியோக்களை வெளியிட்டு வரும் அனிதா சம்பத் சமீபத்தில் வெளியான தெய்வ மச்சான் என்ற படத்தில் விமல் தங்கையாக நடித்திருந்தார். சமூகவலைதளங்களில் ஆக்டீவாக இருக்கும் அனிதா சம்பத் அவ்வப்போது தனது புகைப்படம் மற்றும் வீடியோக்களை பதிவிட்டு வருகிறார். அந்த வகையில் சமீபத்தில் வெளியிட்டுள்ள ஒரு வீடியோ பதிவில், அவரின் தற்போதைய புகைப்படத்துடன் 18 வருடங்களுக்கு முன்பு எடுத்த புகைப்படத்தை வெளியிட்டுள்ளர்.

இந்த புகைப்படத்தை பார்த்து ஆச்சர்யம் அடைந்து வரும் நெட்டிசன்கள் பலரும் உண்மையிலேயே இது அனிதா சம்பத் தானா என்று கேட்டு வருகின்றனர். தற்போது இந்த புகைப்படம் லைக்ஸ் குவித்து வருகிறது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Anitha Sampath
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment