Advertisment

இந்த சன் டி.வி பிரபலத்தை அடையாளம் தெரிகிறதா? பரிணாம வளர்ச்சிப் படங்கள்

Tamil TV Anchors: குளு குளு என்று ரசிகர்களின் கண்ணுக்கு விருந்தளிக்கும் வகையில் சன் டிவி, சன் நியூஸ் சானல்களில் அடிக்கடி செய்தி வாசித்து வருகிறார்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
இந்த சன் டி.வி பிரபலத்தை அடையாளம் தெரிகிறதா? பரிணாம வளர்ச்சிப் படங்கள்

Anitha sampath images, Tamil TV, Tamil TV News, Tamil TV Anchors, Tamil Television, சன் டிவி, சன் டிவி அனிதா சம்பத், தமிழ் தொலைக்காட்சி

Tamil TV News: சன் டிவி-யில் தினமும் நீங்க பார்க்கிற முகம்தான். பார்த்தா, அடையாளம் தெரியுதா? அட, இப்ப இவங்க இந்தத் தோற்றத்தில் இல்லை. இது இவங்களோட சின்ன வயதுப் படம்.

Advertisment

சன் டிவி பிரபலங்களில் ஒருவரான அனிதா சம்பத்தின் வெவ்வேறு பரிணாம வளர்ச்சிப் படங்களை இந்தக் கட்டுரையில் தருகிறோம். அனிதா, செய்தி வாசிப்பாளர் ஃபாத்திமா பாபுவுக்கு பிறகு நிறைய ரசிகர்களை கவர்ந்தவர். இவரை பார்ப்பதற்காகவே சன் நியூஸ் செய்தி சானலை மாற்றாமல் பார்த்தவர் பலர். எப்போதும் சிரித்த முகத்துடன்.. சின்ன பெண் போல காணப்பட்டாலும், நியூஸ் வாசிப்பு என்று வரும்போது தெளிவான உச்சரிப்பு... மற்றும் மெச்சூர்டான குரலில் செய்தி வாசிப்பு என்று பிச்சு உதறிவிடுவார் அனிதா. அது போல சன் டிவியின் பல்வேறு நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சித் தொகுப்பாளராகவும் இருக்கிறார்.

publive-image அனிதா சம்பத் ஆரம்ப கட்டம்

publive-image சன் டிவி அனிதா சம்பத்

publive-image மெச்சூர்ட் அனிதா சம்பத்

சன் டிவியின் வணக்கம் தமிழா நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வரும் ஐஸ்வர்யா, பார்வதி, இவர்களுடன் இவரும் அடிக்கடி நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கி வருகிறார். ஆரம்பத்தில் பாலிமர் செய்தி சானல்தான் இவரை நியூஸ் ரீடராக அங்கீகரித்து அறிமுகம் செய்தது. இன்ஜினியரிங் படித்து முடித்து இருந்த அனிதாவுக்கு மீடியாவின் மீது தீராத மோகம் ஏற்பட்டு, செய்தி வாசிப்பாளராக மீடியா பயணத்தை துவங்கினார். பாலிமர் சானலுக்குப் பிறகு நியூஸ் 7 டிவியில் செய்தி வாசித்து வந்த அனிதாவுக்கு சன் நியூஸ் சானல் பெரும் ரசிகர் பட்டாளத்தையே பெற்றுத் தந்து இருக்கிறது.

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் திருமண பந்தத்தில் தன்னை இணைத்துக்கொண்டார் அனிதா. ஆனால், அனிதாவின் திருமணத்தை இன்று வரை ரசிகர்கள் பலரால் ஜீரணித்துக்கொள்ள முடியவில்லை. இன்ஸ்டாவில் கணவரோடு இருக்கும் ஜோடி போட்டோவை பகிர்ந்துக்கொண்டால் கூட ரசிகர்கள் இதயம் வலிக்குது போட்டோ பதிவிடாதீர்கள் என்று அன்பு கோரிக்கை வைக்கின்றனர்.

இப்படிபட்ட ரசிகர்களை கொண்டு இருக்கும் அனிதா என்னதான் கோவிட் 19 தொற்று லாக்டவுன்.. என்றாலும்.. குளு குளு என்று ரசிகர்களின் கண்ணுக்கு விருந்தளிக்கும் வகையில் சன் டிவி, சன் நியூஸ் சானல்களில் அடிக்கடி செய்தி வாசித்து வருகிறார் அனிதா. ரசிகர்கள் ஹேப்பி....!

 

 

Sun Tv Anitha
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment