Advertisment

’கேர்ள் ஃபிரெண்ட அத்துவிடணும்ன்னு நெனச்சேன்’ - கல்யாணப்பரிசு கல்யாணி

Sun TV Vanakkam Thamizha: ஆர்யன் சன் டிவியின் மகராசி சீரியலில் புவியரசன் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். நிவேதா கல்யாண பரிசு சீரியலில் கல்யாணியாக நடித்தவர்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Sun tv vanakkam thamizha, tamil tv news

Sun tv vanakkam thamizha, tamil tv news

Tamil Serial News: சன் டிவியின் வணக்கம் தமிழா ரியாலிட்டி ஷோ-வில் பங்குபெற்று சின்னத்திரை தம்பதி ஆர்யன், நிவேதா உரையாடினர். ஆர்யன் சன் டிவியின் மகராசி சீரியலில் புவியரசன் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். நிவேதா கல்யாண பரிசு சீரியலில் கல்யாணியாக நடித்தவர். நிவேதாவுக்கு காதல் சந்தியா, பிக்பாஸ் சீசன் 2 சுஜா வருணி இருவரும் ஃபிரண்ட்ஸ். கல்யாண பரிசு சீரியல், கோவிட் 19 தொற்று காரணமான முதல் லாக்டவுன் போதே அவசரமாக சுபம் போட்டு முடித்து வைக்கப்பட்டது.

Advertisment

ஆர்யன் நாயகனாக நடித்து வந்த மகராசி சீரியல் லாக்டவுன் காரணமாக தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது. சின்ன வயதில் காணாமல் போன புவியரசன், ஹரித்துவாரில், நாயகி பாரதியை கல்யாணம் செய்துக்கொண்டு வாழ்ந்தார். பாரதியின் சித்தப்பா புவியை கொன்றுவிட்டார் என்று கதை மாறிப்போனது. ஆனால், உயிருடன் இருக்கும் புவி, இப்போது மனைவி பாரதிக்கும் அவனது குடும்பத்தாருக்கும் இன்னமும் கிடைக்கவில்லை என்று கண்ணாமூச்சு விளையாட்டு சீரியலில் நடந்துக்கொண்டு இருந்த சமயத்தில்தான் சீரியல் லாக்டவுனில் லாக்காகி கிடக்கிறது.

நிவேதாவை வைஷ்ணவா காலேஜில் பார்த்து, பிறகு செல்பேசி நம்பர் வாங்கி, மெசேஜ் செய்வதில் ஆரம்பித்து, ஒரு மாதத்துக்குள் லவ் புரபோஸ் செய்ததாக கூறினார் ஆர்யன். நான் இவரை ஒரு வருடத்துக்கு முன்பே பார்த்தேன்... ஒரு ஃபிரண்ட் இவரைப் பற்றி சொல்லி, நம்பர் தரேன் பேசுன்னு சொன்னா... நான் தான் நம்ம குடும்பத்துக்கு லவ் செட்டாகாதுன்னு சொல்லி விட்டுட்டேன். அதோட இவருக்கு ஒரு கேர்ள் ஃபிரண்ட் இருப்பதாகவும் வதந்தி இருந்தது. என்ன இருந்தாலும் அவங்களை விட்டுட்டு நாம புகுந்துக்கணும்னு ஒருஆசையும இருந்துச்சு. அப்புறமாத்தான் தெரிஞ்சுது, ஹி ஈஸ் வெரி சிங்கிள். ரெடி டு மிங்கிள்னு சொன்னார் நிவேதா.

ரெண்டு பேரும் பேசிகிட்டு இருந்தபோது. எனக்கு இவர்கிட்டே புரபோஸ் பண்ணனும்னு ஆசை வந்து, எப்படி எல்லாம் புரபோஸ் பண்ணலாம்னு பெரிசா யோசிச்சுகிட்டு இருந்தேன். இவர் சிம்பிளா காரில் வந்து இறங்கி, நில்லுன்னு சொன்னார். நான் என்ன பண்ண போறார்னு யோசிச்சு நின்னேன். அழகா ஒரு ரோஜாவை எடுத்து கையில் கொடுத்து ஐ லவ் யூன்னு சொன்னார் என்று கூறினார் நிவேதா. பிறகென்ன...கல்யாண பரிசு சீரியல் கல்யாணிக்கு டும் டும்!

“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்” 

Tv Serial Sun Tv
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment