Advertisment

இந்த வார டி.ஆர்.பி: டாப் சீரியல்களை ஓரங்கட்டிய புது சீரியல்; எதிர்நீச்சலுக்கு நம்பர் ஒன் இடம் இல்லை

சின்னத்திரை டிஆர்பி ரேட்டிங்கில் டாப் 5 இடங்களை பெற்ற சீரியல்கள் விபரம் தற்போது வெளியாகியுள்ளது.

author-image
WebDesk
New Update
Suntv Serial

கயல் - எதிர்நீச்சல் - இனியா - வானத்தை போல

சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்துவதில் சீரியல்களுக்கு அதிக முக்கியத்துவம் உள்ளது. இல்லத்தரசிகள் மட்டுமல்லாமல், தற்போது பெண்கள் இளைஞர்கள் என பலரும் சீரியல் பக்கம் தங்களது கவனத்தை திருப்பியுள்ளதால், நாளுக்கு நாள் சீரியல்கள் சாம்ராஜ்யம் அதிகரித்து வரும் அதே வேளையில் அவ்வப்போது புதிய சீரியல்களும் ரிலீஸ் ஆக தொடங்கியுள்ளது.

Advertisment

இதில் சின்னத்திரை ரசிகர்களை அதிகம் திருப்திப்படுத்தும் சேனல்கள் வரிசையில் சன்டிவி முன்னிலையில் உள்ளது. இந்த சேனலில் ஒளிபரப்பாகும் சீரியல் டிஆர்பி ரேட்டிங்கில் மற்ற சேனல் சீரியல்களுக்கு பெரும் போட்டியாக இருந்து வருகிறது. அதே போல் சன்டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்களே தங்களுக்குள் யார் முதலிடம் பிடிப்பது என்ற போட்டி இருந்து வருகிறது.

இதனிடையே தற்போது டிஆர்பி ரேட்டிங்கில் டாப் 5 இடங்களை பெற்ற சீரியல்கள் விபரம் தற்போது வெளியாகியுள்ளது.

கயல்

உணர்ச்சிப்பூர்வமான திரைக்கதை கொண்ட கயல் சீரியல் டிஆர்பி ரேட்டிங்கில் முதலிடத்தை பிடித்துள்ளது. சைத்ரா ரெட்டி, சஞ்சீவ் கார்த்திக், மீனா குமாரி, அபினவ்யா, அவினாஷ் அசோக், முத்துராமன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

எதிர்நீச்சல்

சமீப காலமாக சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் அதிகம் பேசப்படும் சீரியல் எதிர்நீச்சல். இந்த சீரியல் தற்போது டிஆர்பி ரேட்டிங்கில் 2-வது இடம் பிடித்துள்ளது. ஆணாதிக்கத்திற்கு எதிராக குரல் கொடுத்து வந்த ஜனனியை ஆதிமுத்து குணசேகரன் ஏற்றுக்கொண்டதால் தற்போது சீரியல் பரபரப்பின் உச்சமாக சென்றுகொண்டிருக்கிறது.

வானத்தைபோல

கடந்த வாரத்தைப் போலவே, சமீபத்திய டிஆர்பி ரேட்டிங்கிலும் 'வானத்தைப் போல' சீரியல் 3-வது இடத்தில் உள்ளது. சந்தியா மற்றும் சின்ராசுவின் புதிய தொடக்கத்துடன் சீரியல் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. சின்ராசுவுக்கும் அவரது சகோதரி துளசிக்கும் இடையேயான நெருங்கிய பிணைப்பைப் பற்றிய கதை.

இனியா

விஜய் டிவியின் ராஜா ராணி சீரியலில் நடித்து வந்த ஆல்யா மானசா முதல் முறையாக சன்டிவியின் இனியா தொடரில் நடித்து வருகிறார். இந்த சீரியல் தற்போது டிஆர்பி ரேட்டிங்கில் 4-வது இடத்தை பிடித்துள்ளது. ஏற்கனவெ 3-வது இடத்தில் இருந்த இனியாவை, வானத்தை போல சீரியல் வீழ்த்தியது. இனியா சீரியலில் ஆல்யா மானசா, ரிஷி மற்றும் பலர் நடித்துள்ளனர்.

மிஸ்டர் மனைவி

சன்டிவியில் புதிதாக தொடங்கப்பட்ட மிஸ்டர் மனைவி சீரியல், ஒளிபரப்பை தொடங்கியதில் இருந்தே டிஆர்பி ரேட்டிங்கில் முன்னணியில் இருந்து வருகிறது. இந்தத் தொடரில் ஷபானா ஷாஜஹான் மற்றும் பவன் ரவீந்திரன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த சீரியல் டிஆர்பி ரேட்டிங்கில் 5-வது இடத்தில் உள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamil Cinema
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment