அப்போ சர்கார்… இப்போ பீஸ்ட்… மீண்டும் சர்ச்சையில் விஜய்

Vijay Beast Second Look Smoking : விஜய் தற்போது நடித்து வரும் பீஸ்ட் படத்தின் 2-வது போஸ்டர் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

Actor Vijay Movies Controversy In Tamil : மாஸ்டர் படத்திற்கு பிறகு நடிகர் விஜய் இயக்குநர் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் நடித்து வருகிறார். பூஜா ஹெக்டே நாயகியாக நடித்து வரும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்து வருகிறார். சன்பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வரும் இந்த படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு ஜார்ஜியாவில் நடைபெற்றது. தொடர்ந்து படத்தின் 2-ம் கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், கொரோனா பாதிப்பு காரணமாக அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு உத்தரவின் காரணமாக இப்படத்தின் பணிகள் தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

தற்போது ஊரடங்கு உத்தரவில் தளர்வு செய்யப்பட்டு படப்பிடிப்புக்கு அனுமதி அளிக்கப்பட்டதை தொடர்ந்து வரும் ஜூலை மாதம் முதல் இப்படத்தின் 2-ம் கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்குவதற்கு முன்பு தலைப்பு வைக்கப்படாத நிலையில், தற்காலிகமாக தளபதி 65 என பெயரிடப்பட்டது. இந்நிலையில், படத்தின் இயக்குநர் நெல்சன் (ஜூன் 21) மற்றும் நடிகர் விஜயின் பிறந்த நாளை (ஜூன் 22) முன்னிட்டு நேற்று இப்படத்தில் தலைப்பு மற்றும் பர்ஸ்லுக் போஸ்டர் வெளியிடப்பட்டது.

இதில் படத்திற்கு பீஸ்ட் என பெயரிடப்பட்டுள்ள நிலையில், பர்ஸ்லுக் போஸ்டரில் நடிகர் விஜய் ஆக்ரோஷமாக துப்பாக்கி வைத்துக்கொண்டு நிற்கும் கட்சி வெளியிடப்பட்டுள்ளது. இந்த பர்ஸ்லுக் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்ற நிலையில், நள்ளிரவு 12 மணிக்கு விஜய் பிறந்த நாளை முன்னிட்டு இப்படத்தின் 2-வது லுக் வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டது. சென்னபடி நள்ளிரவு 12 மணிக்கு வெளியிடப்பட்ட இந்த படத்தின் 2-வது லுக் போஸ்டரும் இணையத்தில் டிரெண்டிங் ஆன நிலையல், சர்ச்சையை கிளப்பி உள்ளது.

இந்த 2-வது லுக் போஸ்டரில் நடிகர் விஜய், கையில் துப்பாக்கி மற்றும் வாயில் சிகரெட்டுடன் நிற்கிறார். இதற்கு முன் சர்க்கார் படத்தின் ஃபஸ்ட்லுக்கிலும் விஜய், வாயில் இடம்பெற்ற போஸ்டர் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், தற்போது பீஸ்ட் பட போஸ்டரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதில் சர்கார் பட போஸ்டருக்கு சர்ச்சை எழுந்ததை தொடர்ந்து போஸ்டர் மாற்றப்பட்டு மீண்டும் புதிய பர்ஸ்லுக் போஸ்டர் வெளியிடப்பட்டது.  

மேலும் சர்க்கார் படத்தின் போது ஃபஸ்ட்லுக், வரலட்சுமி கதாப்பாத்திரத்தின் பெயர்,  அரசின் இலவச பொருட்களை தீயில் இடுவது போன்ற காட்சிகளும், மாஸ்டர் படத்தில், குடிக்கு அடிமையாகி எப்போதும் குடித்தக்கொண்டிருக்கு காட்சியும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அந்த வகையில் பீஸ்ட் படம் தொடக்கத்திலேயே சர்ச்யை சந்தித்துள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Entertainment news here. You can also read all the Entertainment news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Tamil upcoming movie vijay beast second look smoking controversy

Next Story
அஸ்வின்- ஷிவாங்கி திருமண வீடியோ நிஜமா? உண்மை இதுதான்!
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com