Advertisment

கார் விபத்து: காயத்துடன் தப்பிய விஜய் டி.வி சீரியல் நடிகை; உயிரை காப்பாற்றிய சீட் பெல்ட்- வீடியோ

நான் சீட் பெல்ஸ் அணிந்திருந்தபோதும் எனது கார் விபத்துக்குள்ளானபோது ஏர்பேக் என்னை பெரிய விபத்தில் இருந்து காப்பாற்றியது என வைஷாலி கூறியுள்ளார்.

author-image
WebDesk
New Update
Vaishali

முத்தழகு சீரியல் நடிகை வைஷாலி

முத்தழகு சீரியலில் நடித்து வரும் நடிகை வைஷாலி சமீபத்தில் தான் விபத்தில் சிக்கியதாகவும், சீட் பெல்ட் போட்டிருந்ததால் அதிஷ்டவசமாக உயிர் தப்பியதாகவும் தெரிவித்து வீடியோ வெளியிட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Advertisment

விஜய் டிவியின் முக்கிய சீரியல்களில் ஒன்று முத்தழகு. இந்த சீரியலில் முக்கிய கேரக்டரில் நடித்து வரும் நடிகை வைஷாலி, தனது நடிப்பின் மூலம் பலரின் பாராட்டுக்களை பெற்று வரும் நிலையில், சீரியலும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. சமூகவலைதளங்களில் ஆக்டீவாக இருக்கும் நடிகை வைஷாலி அவ்வப்போது புகைப்படம் மற்றும் வீடியோ பதிவுகளை வெளியிட்டு வருகிறார்.

அந்த வகையில் தற்போது தான் விபத்தில் சிக்கி அதிஷ்டவசமாக உயிர் தப்பியதாக தெரிவித்து வைஷாலி வெளியிட்டுள்ள வீடியோ பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. இந்த வீடியோ பதிவில், காரில் பயணிக்கும்போது பாதுகாப்பிற்காக சீட் பெல்ட் அணியுங்கள். நான் சீட் பெல்ஸ் அணிந்திருந்தபோதும் எனது கார் விபத்துக்குள்ளானபோது ஏர்பேக் என்னை பெரிய விபத்தில் இருந்து காப்பாற்றியது. நெடுஞ்சாலையில் பயணிக்கும்போது சீட்பெல்ட் அவசியம் என்று கூறியுள்ளார்.

இந்த வீடியோவில் பேசும்போது வைஷாலி கழுத்தியில் காயம் இருப்பது தெரிகிறது. இந்த வீடியோ பதிவு தற்போது வைரலாகி வரும் நிலையில், நெட்டிசன்கள் மற்றும் அவரது ரசிகர்கள் என பலரும் அவர் விரைவில் குணமடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். நடிகை விபத்தில் சிக்கி அதிஷ்டவசமாக உயிர்தப்பிய சம்பவம் சின்னத்திரை வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamil Cinema Vijay Tv Serial 2
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment