Advertisment

Vikram Movie Review : கமலின் கமர்ஷியல் கம்பேக்... விக்ரம் படம் எப்படி?

Vikram Movie Review: ஒரு வித்தியாசமான திரைக்கதை 3 வித்தியசமான நடிகர்கள் 3 பேருக்கும் முக்கியத்துவம என நகரும் கதை

author-image
WebDesk
New Update
Vikram Movie Review : கமலின் கமர்ஷியல் கம்பேக்... விக்ரம் படம் எப்படி?

Vikram Movie Review Live News,

Kamal Hassan, Vijay Sethupathi starrer Vikram Movie Review, Movie Launch Today LIVE Updates : மாநகரம் கைதி மாஸ்டர் என ஆக்ஷன் கலந்த த்ரில்லர் படத்தை கொடுத்த இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் முற்றிலும் வித்தியாசமான திரைக்கதையுடன் இன்று வெளியாகியிருக்கும் படம் விக்ரம். உலகநாயகன் கமல்ஹாசன் 4 வருட இடைவெளிக்கு பிறகு கொடுத்துள்ள இந்த படம் பலத்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் இன்று வெளியாகியுள்ளது.

Advertisment

1986-ம் ஆண்டு இயக்குநர் ராஜகேசர் இயக்கத்தில் வெளியான படம் விக்ரம். ரகசிய உளவாளி விக்ரம் கேரக்டரில் கமல்ஹாசன் சமரசம் இல்லாமல் பொருந்திருப்பார். வெளிநாட்டு ஜேம்ஸ்பாண்ட் படங்களுக்கு சவால் விடும் வகையில் அமைந்த இந்த படத்தையும், கடந்த 2019-ம் ஆண்டு கார்த்தி நடிப்பில் வெளியான கைதி படத்தையும் இணைத்து ஒரு வித்தியாசமான திரைக்கதையுடன் விக்ரம் படம் வெளியாகியுள்ளது.

1990-களில் விக்ரம் மற்றும் அவரது உளவாளிகள் குழு ரகசிய நடவடிக்கைக்கு பிறகு அரசாங்கத்தால் அவமானப்படுத்தப்பட்டு வேட்டையாடப்படுகிறார்கள். இதனால் 30 வருடங்களாக தலைமறைவாக வாழ்ந்து வரும் விக்ரம், வெளிநாட்டு தாக்குதல்களை நிறுத்துவதை விட மக்களிடம் இருந்து குடும்பத்தை காப்பாற்ற போராடி வருகிறார்.

இந்நிலையில், காவல்துறை அதிகாரிகளாக ஹரிஸ் பேரடி, காளிதாஸ் ஜெயராம் ஆகிய இருவருடனும், கமல்ஹாசன் படத்தின் தொடக்கத்திலேயே முகமூடி அணிந்த நபர்களால் கொடூரமாக கொல்லப்படுகின்றனர். மேலும் சில காவல்துறை அதிகாரிகளும் மூகமூடி நபர்களால் கொல்லப்படுவதால், இந்த கொலைகளை விசாரிக்க தனியார் துப்பாறியும் ஏஜெண்டான பகத் பாசில் நியமிக்கப்படுகிறார்.

முதல்பாதி முழுவதும் பரபரப்பாகவும் விறுவிறுப்பாகவும் செல்லும் திரைக்கதையை பகத் பாசில் தனி ஆளாக தனது தோலில் சுமந்துள்ளார். முதல்பாதி முழுவதும் அவர் தொடர்பான காட்சிகள் தான் அதிகம். அதை தன்மையை உணர்ந்து பகத் தனக்கே உரித்தான் பாணியில் பின்னி பெடலெடுத்துள்ளார். விசாரணையின் போது காவல்துறையில் உயர் அதிகாரியாக இருக்கும் செம்பொன் வினோத் ஜோஸ் இருப்பது தெரியவருகிறது.

அதன்பிறகு விசாரணையை தீவிரப்படுத்தும் பகத் பாசிலுக்கு ஒவ்வொரு முடிச்சாக அவிழ்ந்து இறுதியில் கொலைக்கான காரணம் தெரியவரும்போது ஒரு பெரிய அதிர்ச்சி காத்திருக்கிறது. அதன்பிறகு என்ன ஆனது, காவல்துறை அதிகாரியுடன் சேர்ந்து கமல்ஹாசனை கொலை செய்ய காரணம் என்ன என்பதே படத்தின் மீதிக்கதை.

4 வருடங்களுக்கு பிறகு கமல்ஹாசனை திரையில் பார்ப்பது அவருடைய ரசிகர்களுக்கு மகிழ்ச்சி என்றாலும் அனைத்து தரப்பினரையும் ஆச்சிரியத்தில் ஆழ்த்துவம் வகையில் 60-வயது ஆனது தெரியாதபடி நடிப்பில் தனது அசுரத்தனத்தை காட்டியுள்ளார் கமல்ஹாசன். அதுவும் இல்லாமல் படத்தின் தொடக்கத்திலேயே நாயகனை கொடூரமாக கொலை செய்யும் காட்சி தமிழ் சினிமா வரலாற்றில் இதுதான் முதல்முறை என்று சொல்லலாம்.

அதேபோல் அமர் கேரக்டரில், முதல் பாதி படத்தை தன்வசப்படுத்தியுள்ள பகத் பாசில் எங்களுக்கு எந்த சட்ட விதியும் இல்ல உங்களுக்கு சட்ட விதி எதாவது இருந்தா அது மீறப்படும் என பல காட்சிகளில் நடிப்பில் தனித்துவத்தை காட்டியுள்ளார். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான மாஸ்டர் படத்திற்கு பின் மீண்டும் வில்லனாக களமிறங்கியுள்ள விஜய் சேதுபதி சந்தானம் என்ற கேரக்டருக்கு கச்சிதமாக பொருந்தியுள்ளார்.

மாஸ்டர் படத்தின் சாயல் ஆங்காங்கே தெரிந்தாலும், தனது வசன உச்சரிப்பின் மூலம் வித்தியாசத்தை காட்டியுள்ளார். ஒரு வித்தியாசமான திரைக்கதை 3 வித்தியசமான நடிகர்கள் 3 பேருக்கும் முக்கியத்துவம என நகரும் இந்த கதையில், கைதி படத்தில் வரும் காவல்துறை அதிகாரி நரேன் தனது வழக்கமான நடிப்பில் ஸ்கோர் செய்கிறார். கதையில் 3 பேருக்கும் முக்கியத்துவம் இருந்தாலும் மற்ற இருவரையும் தூக்கி சாப்பிடும் அளவுக்கு கமல்ஹாசன் நடிப்பு அசுரன் என்பதை மீண்டும் நிரூபித்துள்ளர்.

படத்தில் வரும் காயத்ரி, ஷிவானி, மைனா நந்தினி என 3 பேரும் கொடுத்த வேலையை செய்துள்ளனர். அதேபோல் இறுதிகட்டத்தில் வரும் நடிகர் சூர்யா தனது பங்கிற்கு தெறிக்கவிடும் நடிப்பை கொடுத்துள்ளார்.  

பின்னணி இசையில் அனிருத்திடம் கமல்ஹாசன் நன்றாக வேலை வாங்கியுள்ளார் என்றுதான் சொல்ல வேண்டும். பத்தல பத்தல பாடல் ஏற்கனவே வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ள நிலையில் பின்னணி இசையில் அனிருத் தனது வேலையை செவ்வனே செய்துள்ளார். பகல் காட்சிகள் அதிகம் இல்லாத இந்த படத்திற்கு கிரிஷ் கங்காதரன் சிறப்பான ஒளிப்பதிவை கொடுத்துள்ளார். சண்டைப்பயிற்சியாளர் அன்பறிவ் படத்தொகுப்பு பிலேமின்ராஜ் ஆகியோர் படத்தின் நல்ல விமர்சனத்திற்கு துணை நின்றுள்ளனர்.

மொத்தத்தில் 4 வருடங்களுக்கு பிறகு கமல் நடிப்பில் வெளியாகியுள்ள விக்ரம், படம் கைதி 2 என்று சொல்வதா விக்ரம் 2 என்று சொல்வதா என்று யோசிக்க வைத்தாலும் கமலின் கம்பேக் அவரது ரசிகர்கள் மட்டுமல்லாது கோலிவுட்ட வட்டாரத்தையும் பிரம்மிக்க வைத்துள்ளது என்று தான் சொல்ல வேண்டும்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Kamal Haasan Lokesh Kanagaraj Vikram Movie
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment