Advertisment

மாட்டிக்கொண்ட சண்முகம்... தப்பித்த தீபா : இன்னும் எத்தனை நாள் இந்த ட்ராமா?

ஜீ தமிழில் அதிக டி.ஆர்.பி புள்ளிகளை பெற்று வரும் அண்ணா, கார்த்திகை தீபம், இதயம் ஆகிய சீரியல்களின் இன்றைய எபிசோடு குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்

author-image
D. Elayaraja
New Update
Zee tamil anna KD Idhayam

ஜீ தமிழ் இதயம் - அண்ணா - கார்த்திகை தீபம்

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

கண்டிஷனுடன் கார்த்தி சந்தித்த தீபா.‌ சிதம்பரத்துக்கு காத்திருந்த அதிர்ச்சி

Advertisment

கார்த்திகை தீபம் சீரியலில் நேற்றைய எபிசோட்டில் அபிராமி பல்லவிக்கு கிப்ட் கொடுக்க வேண்டும் என்று சொல்ல கார்த்தி தீபாவிடம் பல்லவியை பற்றி பெருமையாக பேசிய நிலையில் இன்று, சிதம்பரம் கார்த்திக்கு சவால் விட பதிலுக்கு கார்த்திக் உங்களால் என்ன அவ்வளவு சீக்கிரம் ஜெயித்து வெளியே அனுப்ப முடியாது என சவால் விடுகிறான்.

அதனைத் தொடர்ந்து மீனாட்சி கார்த்திக்கிடம் பல்லவி கோவிலுக்கு வந்து கிப்டை வாங்கிக் கொள்வதாகவும் ஆனால் முகத்தை காட்ட மாட்டேன் என சொன்னதாகவும் சொல்ல கார்த்திக் சரி என்று சம்மதம் தெரிவிக்கிறான். அதன் பிறகு அபிராமி கொடுத்த செயின் உடன் கார்த்திக் கோவிலுக்கு வர தீபா பல்லவியாக முகத்தை மறைத்துக் கொண்டு இருக்கிறார்.

அடுத்து பின்னால் நின்று கொண்டு கையை மட்டும் நீட்டி கார்த்திக் உங்களுடைய வார்த்தையை நான் மதிக்கிறேன் என்று சொல்லி செயினை கொடுத்துவிட்டு அங்கிருந்து கிளம்புகிறான். அதன் பிறகு மீனாட்சி தீபாவிடம் நீ கார்த்திக்கிடம் உண்மையை சொல்லி இருக்கலாம் நிச்சயம் அவர் உன்னை ஏத்துக்கிட்டு இருப்பார். எல்லா பிரச்சனையும் இதோட தீர்ந்திருக்கும் என்று பேசுகிறாள்.

பிறகு வடநாட்டு நிறுவனம் ஒன்று இசை உரிமையை வாங்குவதற்காக ஏலம் ஒன்றை நடத்த சிதம்பரம் உட்பட எல்லா இசையமைப்பாளர்களும் அந்த நிகழ்ச்சிக்கு வருகின்றனர். சிதம்பரம் வந்ததும் சரி ஆரம்பிக்கலாம் என்று சொல்ல இன்னொரு முக்கியமான நபர் வரனும் அதுக்காக தான் வெயிட் பண்ணிக்கிட்டு இருக்கோம் என்று சொல்லிக் கொண்டிருக்க கார்த்திக் என்ட்ரி கொடுக்கிறான். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

தெரிய வந்த தாயத்து ரகசியம்.. சண்முகத்துக்கு பரணி கொடுத்த தண்டனை

அண்ணா சீரியலில் நேற்றைய எபிசோடில் பரணி கோபமாக இருக்க சண்முகம் தர்மகத்தா தேர்தலில் நிற்க மாட்டேன் போதுமா என்று சொன்னதன் பழையபடி மீண்டும் சண்முகத்துடன் ஒட்டிக் கொண்ட நிலையில் இன்று சண்முகம் பரணியை கிளினிக்கில் விட்டு விட்டு வேலைகளை பார்த்துவிட்டு கிளம்பும்போது வழியில் வைகுண்டத்துடன் தாயத்து வாங்க போயிருந்த ரமேஷை பார்க்க அவன் இறும்பி கொண்டிருக்க சண்முகம் என்னாச்சு என்று கேட்கிறான். ரெண்டு நாளா உடம்பு சரியில்லை ஒரே இருமல் என்று சொன்னது சண்முகம் என் பொண்டாட்டி டாக்டரா இருக்கும்போது இந்த ஊர்ல பேஷண்ட் இருக்கலாமா என்று கிளினிக்கிற்கு அழைத்துச் செல்கிறான்.

இரவு நேரம் என்பதால் பரணி கிளினிக்கை முடித்து வீட்டிற்கு கிளம்ப சண்முகம் இவனை கூட்டி வந்ததும் நாளைக்கு பார்த்துக்கலாம் என்று சொல்ல உன்னை நம்பி வந்திருக்கவருக்கு டிரீட்மென்ட் பாரு என்று சொன்னது பரணியும் சண்முகத்தின் வார்த்தையை ஏற்றுக் கொண்டு சரி முகத்தை அலம்பிட்டு வரேன் என்று உள்ளே சொல்கிறாள்.

இருவரும் அன்னோன்யமாக இருப்பதை பார்த்த ரமேஷ் என்னப்பா சந்தோசமா இருக்கீங்க போல என்று கேட்க ஆமா என்னன்னு தெரியல திடீர்னு ரொம்ப பாசமா இருக்கா என்று சொன்னதும் அதெல்லாம் தாயத்து செய்த வேலை என்று நடந்த விஷயத்தை சொல்ல இதைக் கேட்டுவிடும் பரணி தாயத்தை கழட்டி சண்முகத்தின் முகத்தில் எறிகிறாள்.

திரும்பவும் என்னை ஏமாத்திட்டல இருக்கிற 45 நாள்ல 5 நாளை கழிச்சுகிறேன். இன்னும் 40 நாள்ல இந்த வீட்டை விட்டு கிளம்பிடுவேன் என்று அதிர்ச்சி கொடுத்து பழையபடி சண்முகத்திடம் வெறுப்பை காட்ட தொடங்குகிறாள். அதோடு இல்லாமல் வீட்டுக்கு வந்த பரணி இவ்வளவு நாள் சண்முகம் மேல மட்டும் தான் எனக்கு கோபம் இருந்தது ஆனால் நீங்களும் அவனோடு சேர்ந்து என்னை ஏமாத்திட்டீங்க என்று தங்கைகளிடமும் ஆவேசப்பட்டு பேசுகிறாள்.

அதன் பிறகு சண்முகம் வைகுண்டத்துடன் சென்று ஏன்பா இப்படி பண்ண நான் தான் இதை பாத்துக்குறேன்னு சொன்னேனே என்று கோபப்பட நீயும் ஐம்பது நாளா ஒன்னும் பண்ணல அதனாலதான் நான் ஒரு மந்திரவாதி போய் பார்த்தேன் என்று சொல்கிறார். மேலும் நடந்தது நடந்து போச்சு இருக்கிற 40 நாளில் அவ மனச மாத்த பாரு என்று சொல்ல தங்கைகள் 40 நாளில் எப்படி முடியும் ரொம்ப கஷ்டம் தான் என்று சொல்ல நான் அவளோட மனசை மாத்தி காட்டுறேன் என சண்முகம் சபதம் எடுக்கிறான். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

ஆதியின் காதலியாக அறிமுகமாகும் ரவுடி பேபி.. பாரதி செய்ய போவது என்ன?

இதயம் சீரியலில் கடந்த சனிக்கிழமை எபிசோடில் பாரதியும் லதாவும் ரூமுக்குள் சிக்கி கொள்ள ஆதி கதவை பூட்டி கொண்டு கிளம்பிய நிலையில் இன்று கேசவ் உதவியுடன் பாரதியும் லதாவும் ஆதியின் ரூமில் இருந்து வெளியே வருகின்றனர். ஆதி மீட்டிங் என்று பொய் சொல்லிட்டு காதலியை பார்க்க தான் சென்றிருப்பதாக நினைத்து கொள்கின்றனர். மறுபக்கம் ஆதி பீச்சிற்கு வந்து யாரோ ஒருவருக்காக காத்திருக்கிறான்.

அப்போது அங்கு ஒரு குடும்பம் குழந்தையுடன் விளையாடி கொண்டிருப்பதை பார்த்த ஆதிக்கு தமிழ் பாப்பாவுடன் விளையாடிய தருணங்கள் நினைவிற்கு வருகின்றனர். கொஞ்ச நேரத்தில் கார் ஒன்று வந்து நிற்க அதிலிருந்து ரவுடி பேபி சத்யா புடவையில் வந்து இறக்குகிறாள். அவளை வரவேற்கும் ஆதி ஒரு ஷாப்பிற்கு அழைத்து செல்கிறான்.

சத்யா எதுக்காக வர சொன்ன? அதுவும் புடவையில் எதுக்கு என்று கேட்க ஆதி உன்னை காதலிப்பதாக சொல்கிறான். மறுபக்கம் பாரதியும் லதாவும் ஆதி அவன் காதலிக்கும் பெண்ணை பார்க்க தான் போயிருக்கான் என்று சந்தேகப்படுகின்றனர். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Zeetamil Serial
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment