/indian-express-tamil/media/media_files/2025/05/15/qMxKQFgmFjmWX8JxuMpe.jpg)
வார்த்தையை விட்ட சாமுண்டீஸ்வரி.. நவீனை வைத்து திட்டமிடும் சந்திரகலா - கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட் அப்டேட்
கார்த்திகை தீபம் சீரியலில் நேற்றைய எபிசோடில் நவீன் சிவனாண்டியின் சட்டையை பிடிக்க இதை பார்த்த சாமுண்டீஸ்வரி நவீனை தப்பாக புரிந்து கொண்ட நிலையில் இன்று, நவீன் சாமுண்டீஸ்வரி பார்த்ததும் அந்த நான் எதுவும் பண்ணல என்று சொல்ல யாருக்கு யாருடா அத்தை? அவ எனக்கு பொண்ணே இல்லடா என்று சொல்லிக்கிட்டு இருக்கேன் அப்படி இருக்கும்போது நான் எப்படி உனக்கு அத்தை ஆவேன்? இன்னொரு முறை அத்தைனு சொன்ன அவ்வளவு தான் என்று எச்சரிக்கிறாள்.
அதன் பிறகு கார்த்திக் இதெல்லாம் சிவனாண்டி வேலை தான், உஷாராக இருங்க சொல்கிறான். பிறகு சிவனாண்டியும் சந்திரகலாவும் சந்தித்து ரகசியமாக பேசிக் கொள்கின்றனர். திட்டம் ஒன்றை தீட்டுகின்றனர். அடுத்த நாள் நவீனை சந்திக்கும் சிவனாண்டி சாமுண்டீஸ்வரி ஆபிஸ் வந்து உன்னை சந்திக்க சொன்னதாக சொல்ல நவீன் கிளம்பி செல்கிறான். நவீனை பார்த்த சாமுண்டீஸ்வரி இங்க எதுக்கு வந்த? இன்னொரு முறை என்னை பார்க்க வந்தால் சுட்டு தள்ளிடுவேன் என வார்த்தையை விடுகிறாள்.
நவீன் வெளியே வந்ததும் அவனை சுற்றி வளைக்கும் சிவனாண்டியின் ஆட்கள் அடித்து மயங்க வைக்கின்றனர். நவீனை புதைத்து அந்த பழியை சாமுண்டீஸ்வரி மீது போட முயற்சி செய்கின்றனர். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
வீராவிடம் வம்பிழுக்கும் சிவபாலன்.. தல தீபாவளிக்கு தயாராகும் சண்முகம் குடும்பம் -அண்ணா சீரியல் இன்றைய எபிசோட் அப்டேட்
அண்ணா சீரியலின் நேற்றைய எபிசோடில் இசக்கியின் குழந்தைக்கு சூடாமணி என பெயர் வைத்து தொட்டிலில் போட்டு எல்லோரும் சந்தோஷப்பட்ட நிலையில் இன்று, குழந்தையை தொட்டிலில் போட்டு எல்லோரும் சந்தோஷப்படுகின்றனர். அதன் பிறகு அடுத்ததாக தலை தீபாவளி வருவதால் ரத்னா அறிவழகன் மற்றும் வீரா சிவபாலன் ஆகியோரின் தல தீபாவளியை சிறப்பாக கொண்டாட வேண்டும் என முடிவெடுக்கின்றனர்.
அடுத்ததாக முத்துப்பாண்டி தல தீபாவளி கொண்டாடுவதற்காக சண்முகத்துடன் பணத்தை கொடுக்க சண்முகம் வேண்டாம் என்று மறுக்கிறான். முத்துப்பாண்டி இந்த பணத்தை திருப்பி கொடுத்துவிடு என்று சொல்லிக் கொடுக்க மீண்டும் மறுக்க பரணி அதை வாங்கிக்கொண்டு முத்துப்பாண்டியை அனுப்புகிறாள்.
அதன் பிறகு சண்முகத்தை வெளியே அழைத்துச் செல்கிறாள். மறுபக்கம் வீரா ஸ்டேஷனில் இருக்க அங்கு வந்த சிவபாலன் டீ குடித்துக் கொண்டிருக்க இதை பார்த்த வீரா அவனிடம் சண்டை இடுகிறாள்.
அங்கு வந்த சௌந்தரபாண்டி உனக்கு இங்க என்னடா வேலை என்று சிவபாலனை கிட்ட வீரா இவனுக்கு சூடு சொரணை இல்லை என்று கோபப்படுகிறாள். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
முருகனின் அம்மாவை மீட்ட அஞ்சலி.. அடுத்து நடக்கப்போவது என்ன? - கெட்டி மேளம் இன்றைய எபிசோட் அப்டேட்
கெட்டி மேளம் சீரியலின் நேற்றைய எபிசோடில் மகேஷ் குடோனுக்கு வந்து முருகனின் அம்மாவை நீ சாகுற வரைக்கும் என் கூட தான் இருக்கணும் என்று சொல்லிய நிலையில் இன்று, முருகனின் அம்மா என்ன விட்டு விடு என்று கெஞ்ச மகேஷ் முடியாது என்று மறுக்கிறான். இதையெல்லாம் மறைந்திருந்து அஞ்சலி பார்த்து விடுகிறாள். பிறகு மகேஷ் இங்கிருந்து கிளம்ப அஞ்சலி ஒரு ரவுடியை திசை திருப்பி அந்த அம்மாவின் கட்டுக்களை அவிழ்த்து விடுகிறாள்.
அங்கிருந்து இருவரும் எஸ்கேப் முயற்சி செய்ய அப்போது ரவுடி ஒருவன் அஞ்சலியை பார்த்து விட அவனை கட்டையால் அடித்து தாக்கி அங்கிருந்து தப்பிக்கின்றனர். இருவரும் வெளியே ஓடி வர ஒரு கட்டத்தில் தனித்தனியாக பிரிந்து விடுகின்றனர். அஞ்சலி முருகனின் அம்மாவை மிஸ் செய்து விட்டு தேட தொடங்குகிறாள். மறுபக்கம் ரவுடிகள் முருகனின் அம்மா காணாமல் போன விஷயத்தை தெரியப்படுத்த மகேஷ் டென்ஷன் ஆகிறான். குடோனுக்கு வந்து ரவுடிகளை போட்டு அடிக்கிறான்.
சிசிடிவி காட்சிகளை வைத்து அவர்கள் சென்ற வழியில் பின் தொடர்ந்து தேட சொல்கிறான். முருகனின் அம்மா தப்பு என்று கோவில் வாசலில் பிச்சைக்காரர்களில் கலந்து உட்காருகிறாள். இதைத் தொடர்ந்து ரேவதி மற்றும் முருகன் துணை இருவரும் கோவிலுக்கு வருகின்றனர். இந்தம்மா எந்த ஒரு சலனமும் இல்லாமல் வேதனையுடன் அமர்ந்திருப்பதை பார்க்க ரேவதி முருகனை சாப்பாடு வாங்கிட்டு வர சொல்லி ஏற்றி விடுகிறாள்.
முருகன் அம்மாவை பார்க்காத நிலையில் அவனுக்கு அவனது அம்மா போட்டோ போனில் கிடைக்கிறது. போனில் அம்மாவின் முகத்தை பார்த்த முருகன் நேரில் அம்மாவின் முகத்தை பார்ப்பானா என்ற பில்டப் காட்சிகள் நகர்கின்றன. அஞ்சலி துளசிக்கு தகவல் கொடுக்க இருவரும் ஒருவரின் அம்மாவை தேட மறுபக்கம் மகேஷும் தேடுகிறான். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.