Advertisment

முதல் நாள் சத்ய நாராயணா; அடுத்த நாள் லதா ரஜினிகாந்த்: திருச்சி ரசிகர்கள் குஷி

நடிகர் ரஜினிகாந்த் மனைவி லதா ரஜினிகாந்த் இன்று திருச்சி ஸ்ரீரங்கத்திற்கு வருகை தந்து சாமி தரிசனம் செய்தார்‌‌.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
trichy

திருச்சி ஸ்ரீரங்கத்தில் லதா ரஜினிகாந்த்

 108 வைணவ தலங்களில் முதன்மையானதும் பூலோக வைகுண்டம் என அழைக்கப்படும் திருச்சி ஸ்ரீரங்கம் அருள்மிகு ரெங்கநாத சுவாமி திருக்கோவிலில் நடிகர் ரஜினிகாந்த் மனைவி லதா ரஜினிகாந்த் இன்று வருகை தந்து சாமி தரிசனம் செய்தார்‌‌.

Advertisment

ரெங்கநாதர் கோயிலில் உள்ள மூலவரை தரிசித்த லதா ரஜினிகாந்த்  பின்னர், தாயார் சன்னதி, சக்கரத்தாழ்வார் சன்னதி உள்ளிட்ட முக்கிய சன்னதிகளில் சாமி தரிசனம் மேற்கொண்டார். பின்னர் லதா ரஜினிகாந்த்க்கு கோயில் பட்டர்கள் நினைவு பரிசுகளை வழங்கி, நண்பர்கள் மற்றும் கோயில் பணியாளர்களுடன் குழுப்படம் எடுத்துக்கொண்டனர்.

publive-image

முன்னதாக, நேற்று ரஜினிகாந்த் அண்ணன் சத்தியநாராயண ராவ் திருச்சியில் விஜயம் செய்து ஜெயிலர் திரைப்படத்தை பார்வையிட்டு ரஜினி ஆதரவாளர்களை சந்தித்து உரையாடியது குறிப்பிடத்தக்கது.

க. சண்முகவடிவேல்

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil ”

Tamil Nadu
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment