தமிழ் பிக்பாஸில் ஒவ்வொரு நாளும் நடந்து வரும் சம்பவங்களை மக்கள் கவனித்து வருகின்றனர். இதுவரை பிக்பாஸ் காட்டிய வீடியோக்களின் அடிப்படையில், மக்கள் மனதில் நடிகை ஓவியா மிகப்பெரிய அளவில் ரீச்சாகி உள்ளார். 'ஓவியா ஆர்மி' என்று இளசுகள் சமூக தளங்களில் இறங்கி, ஒவ்வொரு முறை ஓவியா வெளியேற்ற பரிந்துரைக்கப்படும் போதும், அவருக்கு ஆதரவாக மக்கள் வாக்களிக்க கோருகின்றனர்.
டான்ஸ் மாஸ்டர் காயத்ரி, ஜூலி என்று பிக்பாஸ் போட்டியாளர்கள் அனைவரின் செய்லபாடுகளையும் மக்கள் கவனித்து வருகின்றனர். இதில், மிகக் கொடுமையான நிகழ்வு என்பது நடிகர் பரணி வெளியேறியது தான்.
கஞ்சா கருப்பிற்கும், பரணிக்கும் சண்டை நேர முற்பட்ட போது, அதனை இடையில் புகுந்து தடுத்த சக்தி, கணேஷ் வெங்கட்ராம் போன்றோர் கூட, பரணி பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேற, சுவர் ஏறி குதிக்க முற்பட்ட போது தடுக்கவில்லை. ஒருவேளை, பரணி கீழே தவறி விழுந்திருந்தால்.....? இதைப் பற்றி அவர்கள் யாரும் சிந்தித்துப் பார்க்கவில்லை. இதனால், பரணி உடனடியாக வெளியேற்றப்பட்டார்.
இதைவிட, ஒரு மோசமான சம்பவம் ஜூனியர் என்.டி.ஆர் நடத்தி வரும் தெலுகு பிக்பாஸில் தற்போது அரங்கேறியுள்ளது. தெலுகு பிக்பாஸ் போட்டியாளர் சம்பூர்னேஷ் பாபு, மிகவும் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டிருந்தார் என கூறப்படுகிறது. ஒருக்கட்டத்தில், அந்த ஸ்ட்ரெஸ் அதிகமாக, 'என்னை இந்த வீட்டை விட்டு வெளியேற்றவில்லை என்றால், கத்தியால் அறுத்து தற்கொலை செய்து கொள்வேன்' என பிக்பாஸை மிரட்டியிருக்கிறார். சொன்னதோடு மட்டுமில்லாமல், கத்தியை கையில் வைத்துக் கொண்டும் அவர் தற்கொலை மிரட்டல் விடுத்திருக்கிறார்.
அரண்டு போன பிக்பாஸ் டீம், போட்டிகளின் விதிகளை மீறியதாகவும், தற்கொலை செய்துகொள்ளப் போவதாக மிரட்டி வன்முறைக்கு வித்திட்டதாகவும் கூறி சம்பூர்னேஷ் பாபுவை பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றியது.
மேலும், போட்டிகளின் விதிமுறைகளை மீறியதாகவும், வன்முறையில் ஈடுபட்டதாகவும் கூறி சம்பூனேஷ் பாபுவுக்கு பிக்பாஸ் நிகழ்ச்சியை நடத்துபவர்கள், 20 லட்சம் ரூபாய் அபராதம் விதித்துள்ளனர். இந்தப் பணத்தை நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்ட 10 நாட்களுக்குள் செலுத்த வேண்டும் என்றும் நிபந்தனை விதித்திருக்கின்றனர். தற்போது பத்து லட்சம் ரூபாயை சம்பூர்னேஷ் பாபு பிக்பாஸ் நிகழ்ச்சி நிர்வாகிகளிடம் கொடுத்துள்ளார் என கூறப்படுகிறது.
தெலுகு பிக்பாஸ் போட்டியாளர்களிலேயே, சம்பூர்னேஷ் பாபுவிற்கு தான் அதிக தொகை ஊதியமாக கொடுக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது. ஒரு வாரத்திற்கு ரூ. 50 லட்சம் சம்பளமாம்!.