/tamil-ie/media/media_files/uploads/2017/12/DP97unbV4AA8VEY.jpg)
சூர்யா நடிப்பில் உருவாகிவரும் ‘தானா சேர்ந்த கூட்டம்’ படத்தின் ஷூட்டிங் முடிவடைந்துள்ளது.
விக்னேஷ் சிவன் இயக்கத்தில், சூர்யா நடிப்பில் உருவாகிவரும் படம் ‘தானா சேர்ந்த கூட்டம்’. இந்தப் படத்தில், சூர்யா ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார். அத்துடன், கார்த்திக், செந்தில், ரம்யா கிருஷ்ணன், ஆர்.ஜே.பாலாஜி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
‘தானா சேர்ந்த கூட்டம்’ படத்தை, ஸ்டுடியோ க்ரீன் சார்பில் கே.இ.ஞானவேல் ராஜா தயாரித்துள்ளார். தினேஷ் கிருஷ்ணன் ஒளிப்பதிவு செய்ய, அனிருத் இசையமைத்துள்ளார். இந்தப் படத்தை, 24 ஏஎம் ஸ்டுடியோஸ் நிறுவனம் வெளியிடுகிறது.
பொங்கலுக்கு ரிலீஸாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ள இந்தப் படத்தின் படப்பிடிப்பு, நேற்று முடிந்துள்ளது. இந்தத் தகவலை, கீர்த்தி சுரேஷ் தன்னுடைய ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.
,
And that’s a wrap up for #ThaanaaSerndhaKoottam#TSK
— Keerthy Suresh (@KeerthyOfficial) December 1, 2017
Thank you @Suriya_offl sir @VigneshShivN bro @dineshkrishnanb bro @anirudhofficial@kegvraja sir @StudioGreen2@meramyakrishnan mam ☺️
Pongalukku varrom!! ???????????? pic.twitter.com/PCsb2vpDyI
பொங்கலுக்கு இன்னும் ஒன்றரை மாதம் கூட இல்லை. எனவே, போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.