‘தானா சேர்ந்த கூட்டம்’ படத்தின் இசை வெளியீடு எப்போ தெரியுமா?

சூர்யா, கீர்த்தி சுரேஷ் நடிப்பில், விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘தானா சேர்ந்த கூட்டம்’ படத்தின் இசை வெளியீடு ஜனவரி 3ஆம் தேதி ரிலீஸாக இருக்கிறது.

suriya keerthy suresh

சூர்யா, கீர்த்தி சுரேஷ் நடிப்பில், விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘தானா சேர்ந்த கூட்டம்’ படத்தின் இசை வெளியீடு ஜனவரி 3ஆம் தேதி ரிலீஸாக இருக்கிறது.

விக்னேஷ் சிவன் இயக்கத்தில், சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘தானா சேர்ந்த கூட்டம்’. இந்தப் படத்தில், சூர்யா ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார். அத்துடன், கார்த்திக், செந்தில், ரம்யா கிருஷ்ணன், ஆர்.ஜே.பாலாஜி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

‘தானா சேர்ந்த கூட்டம்’ படத்தை, ஸ்டுடியோ க்ரீன் சார்பில் கே.இ.ஞானவேல் ராஜா தயாரித்துள்ளார். தினேஷ் கிருஷ்ணன் ஒளிப்பதிவு செய்ய, அனிருத் இசையமைத்துள்ளார். இந்தப் படத்தை, 24 ஏஎம் ஸ்டுடியோஸ் நிறுவனம் வெளியிடுகிறது.வெ

பொங்கலுக்கு ரிலீஸாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ள இந்தப் படத்தின் படப்பிடிப்பு, கடந்த 1ஆம் தேதியுடன் முடிந்துள்ளது. தற்போது போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் நடைபெற்று வருகின்றன. தெலுங்கில் ‘கேங்’ என்ற பெயரில் இந்தப் படம் ரிலீஸாக இருக்கிறது.

இதுவரை இந்தப் படத்தில் இருந்து 3 பாடல்கள் ரிலீஸாகியுள்ளன. நான்காவது சிங்கிள் டீஸர் நாளை ரிலீஸாக இருக்கிறது. இந்தப் பாடல், டைட்டில் பாடலாகப் படத்தில் இடம்பெற்றுள்ளது. ஒட்டுமொத்த பாடல்களும் ஜனவரி 3ஆம் தேதி ரிலீஸாக இருப்பதாக இசையமைப்பாளர் அனிருத் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

Get the latest Tamil news and Entertainment news here. You can also read all the Entertainment news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Thaanaa serndha koottam audio release on january 3rd

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com
Best of Express