scorecardresearch

தடம் திரைப்படத்தின் டைட்டில் வீடியோ வெளியீடு: தடம் பதிப்பாரா அருண் விஜய்?

நடிகர் அருண் விஜய் நடித்து வரும் தடம் திரைப்படத்தின் டைட்டில் வீடியோவை படக்குழுவினர் சனிக்கிழமை வெளியிட்டனர். அதனை பலரும் பாராட்டி வருகின்றனர்.

தடம் திரைப்படத்தின் டைட்டில் வீடியோ வெளியீடு: தடம் பதிப்பாரா அருண் விஜய்?

நடிகர் அருண் விஜய் நடித்து வரும் தடம் திரைப்படத்தின் டைட்டில் வீடியோவை படக்குழுவினர் இன்று வெளியிட்டனர். இதற்கு திரையுலகினர் பலரும், நடிகர் அருண் விஜய் ரசிகர்களும் சமூக வலைத்தளங்களில் படக்குழுவினருக்கு பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

நடிகர் அருண் விஜய் திரைப்படத்துக்காக கடுமையாக உழைப்பவர் என்ற பெயரை பெற்றவர். மூத்த நடிகர் விஜய்குமாரின் மகன் என்பதையும் தாண்டி, சினிமாவில் நிலைத்து நிற்க பல ஆண்டுகளாக போராடி வருபவர் அருண் விஜய்.

இந்நிலையில், நடிகர் அஜித்தின் என்னை அறிந்தால் திரைப்படத்தில், கதாநாயகருக்கு இணையான வில்லன் கதாபாத்திரத்தில் நடித்ததற்காக அருண் விஜயை பலரும் பெரிதும் பாராட்டினர். அவரது திரை வாழ்க்கையில் முக்கியமான திரைப்படமாக என்னை அறிந்தால் திரைப்படம் அமைந்தது.

அதேபோல், குற்றம் 23, தடையற தாக்க உள்ளிட்ட திரைப்படங்களும் அவரை குறிப்பிடும்படியான ஆக்‌ஷன் ஹீரோ பட்டியலில் நிலைநிறுத்த உதவின.

தற்போது நடிகர் அருண் விஜய், தடையற தாக்க திரைப்படத்தின் இயக்குநர் மகிழ் திருமேனி இயக்கத்தில் தடம் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இத்திரைப்படத்தை ரேதன் மூவிஸ் நிறுவனம் தயாரிக்கிறது. அத்திரைப்படத்தின் டைட்டில் போஸ்டர் மற்றும் டைட்டில் வீடியோ ஆகியவற்றை படக்குழுவினர் சனிக்கிழமை வெளியிட்டனர்.

முன்னதாக, சனிக்கிழமை காலை 10.30 மணியளவில் படத்தின் டைட்டில் டிசைன் வெளியாகும் என நடிகர் அருண் விஜய் தன் ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்தார்.

போஸ்டர் மூலம் இத்திரைப்படமும் ஆக்‌ஷன் திரைப்படம் என்பது தெரியவருகிறது. இத்திரைப்படத்திற்கு பலரும் பாராட்டை தெரிவித்து வருகின்றனர்.

actor arun vijay, thadam movie, director Magizh Thirumeni ,

நடிகர் ஜெயம் ரவி, தடம் திரைப்படத்தின் டைட்டில் வீடியோவுக்கு தன் ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்துகளை தெரிவித்தார்.

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Tamil App.

Web Title: Thadam film title poster and video released today